Close Menu
    What's Hot

    சிங்கப்பெண் திட்டத்தை செயல்படுத்தாதது ஏன்? பெண் பாதுகாப்பில் அரசு தோல்வி: டிடிவி தினகரன் சாடல்..!!

    டெல்லி ராஜ்யசபா எம்.பி. தேர்தல்: 255வது முறையாக சுயேட்சை வேட்பாளர் பத்மராஜன் வேட்புமனு தாக்கல்..!!

    6 மாசம்னு சொன்னாங்க.. ஆனா 6 நாள் கூட அமைதியா இல்ல..!! திருச்சியில் முதல்வர் விஜய் ‘தெறி’ பேச்சு..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»அரசியல்»அதிமுகவில் மீண்டும் ஓபிஎஸ்? – தென் மாவட்ட நிர்வாகிகளிடம் கருத்துக் கேட்ட பழனிசாமி
    அரசியல்

    அதிமுகவில் மீண்டும் ஓபிஎஸ்? – தென் மாவட்ட நிர்வாகிகளிடம் கருத்துக் கேட்ட பழனிசாமி

    Editor TN TalksBy Editor TN TalksDecember 11, 2025Updated:December 11, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    ops eps
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    அதிமுக-வில் இணைவதற்காக அமித் ஷா வழியாக கடைசி முயற்சியில் இறங்கியுள்ளார் ஓபிஎஸ். இந்த நிலையில், ஓபிஎஸ் தரப்பை மீண்டும் கட்சிக்குள் இணைக்கலாமா என்பது குறித்து தென் மாவட்டங்களைச் சேர்ந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட நிர்வாகிகளிடம் பழனிசாமி தனித்தனியே கருத்துக் கேட்டதாகச் சொல்லப்படுகிறது.

    அ​தி​முக – பாஜக கூட்​ட​ணி​யின் முதலமைச்​சர் வேட்​பாள​ராக பழனி​சாமி அறிவிக்​கப்​பட்​டு​விட்ட நிலை​யில், திமுக கூட்​ட​ணியை வீழ்த்த பலமான கூட்​ட​ணியை உரு​வாக்​கு​வதற்​காக பகீரதப்​பிர​யத்​தனம் செய்து வரு​கிறது பாஜக.

    அதன் ஒரு பகு​தி​யாக, அதி​முக-​வில் இருந்து நீக்​கப்​பட்ட சசிகலா, டிடி​வி.​தினகரன், ஓபிஎஸ் ஆகி​யோரை மீண்​டும் கட்​சிக்​குள் கொண்டு வர பாஜக மட்​டுமல்​லாது பலரும் முயற்சி எடுத்​தனர்; இன்​னும் எடுத்து வரு​கின்​ற​னர். இருந்த போதும் இவர்​களை கட்​சிக் குள்​ளும் கூட்​ட​ணிக்​குள்​ளும் சேர்க்க முடி​யாது என்​ப​தில் பழனி​சாமி பிடி​வாத​மாக இருக்​கி​றார்.

    இந்​நிலை​யில், செங்​கோட்​டையன் தவெக-​வில் இணைந்த பிறகு பழனி​சாமி​யின் முடி​வில் மாற்​றம் தெரிய ஆரம்​பித்​திருப்​ப​தாக கூறப்​படு​கிறது. அமித் ஷாவை சந்​தித்​ததற்​குப் பின்​னால் ஓபிஎஸ்​ஸும், “பு​திய கட்சி தொடங்​கும் எண்​ணம் தனக்கு கிடை​யாது” என்று வெளிப்​படை​யாகச் சொன்​னார். இதன் பின்​னணி​யில், தங்​களை மீண்​டும் பழனி​சாமி கட்​சி​யில் சேர்த்​துக் கொள்​வார் என்ற எதிர்​பார்ப்பு ஓபிஎஸ் தரப்​புக்கு இருப்​ப​தாகச் சொல்​லப்​படு​கிறது.

    ஓபிஎஸ் தன்னை சந்​தித்​தது பற்​றி​யும், அவர் மீண்​டும் அதி​முக-​வில் இணைய விருப்​பம் தெரி​வித்​தது பற்​றி​யும் பழனி​சாமி​யிடம் அமித் ஷாவும் பேசி​யுள்​ள​தாக கூறப்​படு​கிறது. இந்த நிலை​யில் தான் தென் மாவட்​டங்​களைச் சேர்ந்த அதி​முக முன்​னாள் அமைச்​சர்​கள் உள்​ளிட்ட கட்சி நிர்​வாகி​களிடம் ஓபிஎஸ் இணைப்பு தொடர்​பாக தனித்​தனியே ஆலோ​சனை நடத்தி இருக்​கி​றார் பழனி​சாமி.

    இதுகுறித்து தென் மாவட்ட அதி​முக முன்​னாள் அமைச்​சர் ஒரு​வர் நம்​மிடம் பேசுகை​யில், “அதி​முக பொதுக்​குழு இன்று கூடு​கிறது. அது தொடர்​பாக பழனி​சாமி எங்​களிடம் ஆலோ​சனை நடத்​திய போது, ஓபிஎஸ் இணைப்பு விஷய​மாக​வும் பேசி​யது சற்றே மாற்​ற​மாகத் தெரி​கிறது. அதி​முக வெற்​றி​பெற்று பழனி​சாமியை முதலமைச்​ச​ராக்குவதற்கு என்ன செய்​ய​வேண்​டும் என்​பது குறித்து எங்​கள் தரப்​பிலிருந்​தும் அவருக்கு சில யோசனை​களைச் சொல்லி இருக்​கி​றோம்.

    அப்​போது, சசிகலா, தினகரனை சேர்க்​கா​விட்​டாலும் ஓபிஎஸ்ஸை மட்​டு​மாவது மீண்​டும் கட்​சி​யில் சேர்க்க வேண்​டும் என்று தொண்​டர்​கள் மட்​டுமல்​லாது பொது​மக்​களும் எதிர்​பார்க்​கி​றார்​கள் என்​றும் அவரிடம் எங்​களில் சிலர் தெரி​வித்​தோம். வழக்​க​மாக ஓபிஎஸ் பேச்சை எடுத்​தாலே பேச்சை மாற்​றும் பழனி​சாமி, தற்​போது அவர் விஷ​யத்​தில் மென்​மை​யான போக்கை கடை​பிடிக்க ஆரம்​பித்​திருக்​கி​றார். எனவே, ஓபிஎஸ் விவ​காரம் குறித்து இன்​றைய பொதுக்​குழு​வில் பழனி​சாமி பாஸிட்​டீ​வான முடி​வெடுக்​கலாம் என்று நம்​பு​கி​றோம்” என்​றார்.

    முன்​னாள் அமைச்​சர்​கள் சிலர் ஓபிஎஸ்​ஸுக்​குப் பச்​சைக் கொடி காட்​டி​னாலும் ஒரு சிலர் அவருக்கு எதிர்ப்​பும் தெரி​வித்​திருப்​ப​தால் பொதுக்​குழு​வில் பழனி​சாமி என்ன முடி​வெடுக்​கப் போகி​றார் என்று தெரிய​வில்​லை. இதுகுறித்து நம்​மிடம் பேசிய ஓபிஎஸ் தரப்​பினர், “அமித் ஷா – ஓபிஎஸ் சந்​திப்​பின் முக்​கிய நோக்​கமே அதி​முக-​வில் மீண்​டும் ஓபிஎஸ்ஸை இணைப்​பது குறித்​துப் பேசத்​தான்.

    அமித் ஷாவும் பழனி​சாமி​யிடம் பேசி முடி​வெடுக்​கலாம் எனச் சொன்​ன​தால் ஓபிஎஸ் அமை​தி​காக்​கி​றார். ஆனால், பழனி​சாமி தரப்​பில் இருந்து இது​வரை எந்த ரியாக் ஷனும் வரவில்​லை. இருந்​தா​லும் இன்​றைய பொதுக்​குழு​வில் அவர் நல்​லதொரு முடிவை எடுப்​பார் என்று நம்​பிக்​கையோடு காத்​திருக்​கி​றோம். ஒரு​வேளை பழனி​சாமி பழையபடியே அழுத்​த​மாக இருந்​தால் தனக்​குத் தெரிந்த வழியைப் பார்க்க ஓபிஎஸ்​ஸும் தயா​ராகவே இருக்​கிறார்” என்​றனர்​.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதங்கம் விலை தடாலடி உயர்வு!. ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?.
    Next Article “வா வாத்தியார்” படத்திற்கு தடை – உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு
    Editor TN Talks

    Related Posts

    சிங்கப்பெண் திட்டத்தை செயல்படுத்தாதது ஏன்? பெண் பாதுகாப்பில் அரசு தோல்வி: டிடிவி தினகரன் சாடல்..!!

    June 1, 2026

    டெல்லி ராஜ்யசபா எம்.பி. தேர்தல்: 255வது முறையாக சுயேட்சை வேட்பாளர் பத்மராஜன் வேட்புமனு தாக்கல்..!!

    June 1, 2026

    6 மாசம்னு சொன்னாங்க.. ஆனா 6 நாள் கூட அமைதியா இல்ல..!! திருச்சியில் முதல்வர் விஜய் ‘தெறி’ பேச்சு..!!

    June 1, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    சிங்கப்பெண் திட்டத்தை செயல்படுத்தாதது ஏன்? பெண் பாதுகாப்பில் அரசு தோல்வி: டிடிவி தினகரன் சாடல்..!!

    டெல்லி ராஜ்யசபா எம்.பி. தேர்தல்: 255வது முறையாக சுயேட்சை வேட்பாளர் பத்மராஜன் வேட்புமனு தாக்கல்..!!

    6 மாசம்னு சொன்னாங்க.. ஆனா 6 நாள் கூட அமைதியா இல்ல..!! திருச்சியில் முதல்வர் விஜய் ‘தெறி’ பேச்சு..!!

    முழு டிஜிட்டல் மயம்.. தொடங்கியாச்சு மக்கள்தொகை கணக்கெடுப்பு..!! தமிழ்நாட்டில் எப்போ தெரியுமா..??

    துரதிஷ்டவசமாக உதயசூரியனில் போட்டி.. அதனால்தான் இப்படி..!! துரை வைகோ ஓபன் டாக்..!!

    Trending Posts

    ”அதிமுக ஒன்றிணைய வேண்டும்”!. மீண்டும் ஒரு ஜென்மம் இருந்தால்..வீடியோ வெளியிட்டு நிர்வாகி தற்கொலை!

    June 1, 2026

    காவி உடையில் திருவள்ளுவர்!. ஆர்.என். ரவி போட்ட ட்வீட்டால் புதிய சர்ச்சை!

    June 1, 2026

    இந்தியாவில் 30 நாட்களில் ரூ.10 லட்சம் செலவு செய்த அமெரிக்க தம்பதி!. வைரல் பதிவு!

    June 1, 2026

     அண்ணாமலையின் அடுத்த மெகா பிளான்?. நாளை மறுநாள் வெளியாகும் முக்கிய அறிவிப்பு!

    June 1, 2026

    நடிகர் மாதவன் பிறந்தநாள்!. ஜி.டி.என் திரைப்படத்தின் சிறப்பு போஸ்டர் வெளியீடு!

    June 1, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.