Close Menu
    What's Hot

    தொகுதி மறுவரையரை என்றால் என்ன?. சர்ச்சையும் தென்மாநிலங்களின் அச்சமும்!. 

    நடுவானில் 300 அடி சரிந்த விமானம்!. போதைப்பொருள் சோதனையில் சிக்கிய பைலட்?. ஏர் இந்தியா கொடுத்த விளக்கம்!

    U20 சர்வதேச தடகளப் போட்டி!. இந்தியவுக்கு பெருமை சேர்த்த பசந்த் குமார் மேக்வால்!. வெள்ளி வென்று அசத்தல்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»சினிமா»“வா வாத்தியார்” படத்திற்கு தடை – உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு
    சினிமா

    “வா வாத்தியார்” படத்திற்கு தடை – உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

    Editor TN TalksBy Editor TN TalksDecember 11, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    புதிய கல்விக் கொள்கை உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக மத்திய அரசுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திடாததால் தமிழக அரசுக்கு கல்வி நிதி ஒதுக்கப்படவில்லை என மத்திய அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கான 25 சதவீத இட ஒதுக்கீட்டுக்கான மாணவர் சேர்க்கை இந்த ஆண்டு இதுவரை துவங்கவில்லை எனக் கூறி, கோவையைச் சேர்ந்த மறுமலர்ச்சி இயக்கம் என்ற அமைப்பின் நிர்வாகி வே.ஈஸ்வரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் ஜி ஆர் சுவாமிநாதன் மற்றும் வி.லட்சுமி நாராயணன் அடங்கி அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தபோது, கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், 25 சதவீத இட ஒதுக்கீட்டு இடங்களுக்கு தமிழகத்துக்கு ஒதுக்க வேண்டிய நிதி குறித்த விவரங்களை சமர்ப்பிக்கும் படி மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசுத்தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், புதிய கல்விக் கொள்கை உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக மத்திய அரசுடன், புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடாததால், 25 சதவீத ஏழை மாணவர்கள் இட ஒதுக்கீட்டுக்கான கல்விக் கட்டண தொகை ஒதுக்கப்படவில்லை எனத் தெரிவித்தார். நாடு முழுவதும் பல மாநிலங்கள் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள நிலையில், தமிழக அரசு மட்டும் கையெழுத்திடவில்லை எனவும் குறிப்பிட்டார். ஒப்பந்தத்தில் கையெழுத்திடாவிட்டால் நிதி தர மாட்டோம் என்பது மத்திய அரசு பெரியண்ணன் மனப்பான்மை காட்டுகிறது என தமிழக அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன் தெரிவித்தார். இதையடுத்து, வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்த நீதிபதிகள், 25 சதவீத இட ஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக மே 28 ம் தேதி நடக்க உள்ள கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்த விவரங்களை தெரிவிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.

    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கடனாக பெற்ற பணத்தை திருப்பி செலுத்தும் வரை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்த “வா வாத்தியார்” திரைப்படத்தை திரையரங்குகளில் வெளியிட தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகி உள்ள “வா வாத்தியார்” திரைப்படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். இந்த திரைப்படம் கடந்த 5-ம் தேதி வெளியாவதாக இருந்தது. ஆனால், அன்று வெளியாகவில்லை. மேலும் டிசம்பர் 12-ம் தேதி திரையரங்குகளில் திரைப்படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

    இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்ற சொத்தாட்சியர் தரப்பில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், தொழிலதிபர் அர்ஜுன்லால் சுந்தர்தாஸ் என்பவர் திவாலானவர் என கடந்த 2014 ஆம் ஆண்டு அறிவித்து அவருடைய சொத்துக்களை நிர்வகிக்க சொத்தாட்சியரையும் நியமித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

    திவாலானவர் என அறிவிக்கப்பட்ட அர்ஜூன்லால் சுந்தர்தாஸிடம் இருந்து ஸ்டூடியோ கிரீன் படத் தயாரிப்பு நிறுவனம் 10 கோடியே 35 லட்சம் ரூபாய் கடன் பெற்றிருந்தது. அந்த தொகை வட்டியுடன் சேர்த்து தற்போது 21 கோடியே 78 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயாக உள்ளது.

    அந்த தொகையை செலுத்த ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்தின் உரிமையாளர் ஞானவேல் ராஜாவுக்கு உத்தரவிட வேண்டும் என்றும், அவர் தயாரித்துள்ள “வா வாத்தியார்” திரைப்படத்தை வெளியிட இடைக்கால தடை விதிக்கவும், படம் மூலம் கிடைக்கும் வருவாயை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிடக் கோரியும் சொத்தாட்சியர் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

    இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், “வா வாத்தியார்” திரைப்படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.

    இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம் சுப்பிரமணியம், சி.குமரப்பன் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஏற்கனவே பலமுறை ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்திற்கு அவகாசம் வழங்கப்பட்டது. ஆனால், முழு தொகையையும் செலுத்தவில்லை. கங்குவா, தங்கலான் உள்ளிட்ட படங்களை திரையிடுவதற்கு முன் 1 கோடி ரூபாய் வைப்பாகவும் நீதிமன்றத்தில் ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் செலுத்துவதாக உத்தரவாதம் அளித்து, திரைப்படத்தை வெளியிட அனுமதி பெற்றது.

    தற்போது மீண்டும், கடனை செலுத்தாமல் அவகாசம் கேட்பதை ஏற்க முடியாது. இதுவரை 7 முறை கடனை செலுத்த அவகாசம் அளிக்கப்பட்டது. அதனால், நாளை திரையிட திட்டமிட்டுள்ள “வா வாத்தியார்” படத்திற்கு தடை விதிக்கப்படுகிறது என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஅதிமுகவில் மீண்டும் ஓபிஎஸ்? – தென் மாவட்ட நிர்வாகிகளிடம் கருத்துக் கேட்ட பழனிசாமி
    Next Article நெல்லையப்பர் கோயிலில் நடிகர் தனுஷ் தரிசனம்
    Editor TN Talks

    Related Posts

    மீண்டும் அதிர்ச்சி கொடுத்த விஷால்! போட்டோவை பார்த்து பதறிய ரசிகர்கள்! என்ன ஆச்சு..??

    August 8, 2026

    முதல்வர் விஜய்யிடம் விவாகரத்து கோரும் மனுவை வாபஸ் பெற்றார் சங்கீதா; வழக்கு முடித்து வைப்பு!

    August 7, 2026

    13 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வரும் ’மூடர் கூடம் – 2’..! ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பு..!

    August 6, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தொகுதி மறுவரையரை என்றால் என்ன?. சர்ச்சையும் தென்மாநிலங்களின் அச்சமும்!. 

    நடுவானில் 300 அடி சரிந்த விமானம்!. போதைப்பொருள் சோதனையில் சிக்கிய பைலட்?. ஏர் இந்தியா கொடுத்த விளக்கம்!

    U20 சர்வதேச தடகளப் போட்டி!. இந்தியவுக்கு பெருமை சேர்த்த பசந்த் குமார் மேக்வால்!. வெள்ளி வென்று அசத்தல்!

    தவெக அரசை கண்டித்து ஆகஸ்ட் 14-ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்!. இபிஎஸ் அறிவிப்பு!

    மகாராஷ்டிராவில் அடுத்தடுத்து நிலநடுக்கம்!. வீடுகளில் விரிசல் ஏற்பட்டதால் வீதிகளில் தஞ்சமடைந்த மக்கள்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.