Close Menu
    What's Hot

    வரும் 18ல் ‘தனுஷ் 55‘அப்டேட்!

    இந்தியா- சுலோவாகியா இடையே 7 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!

    கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை! தவெக பிரமுகர் கைது!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
    TN Talks
    Home»அரசியல்»“விட்டில் பூச்சியை நம்பி…” – தவெகவில் இணைவதாக பரவிய தகவலுக்கு முன்னாள் எம்எல்ஏ ராஜவர்மன் பதில்
    அரசியல்

    “விட்டில் பூச்சியை நம்பி…” – தவெகவில் இணைவதாக பரவிய தகவலுக்கு முன்னாள் எம்எல்ஏ ராஜவர்மன் பதில்

    Editor TN TalksBy Editor TN TalksDecember 11, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    mlaaa
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர், முன்னாள் எம்.எல்.ஏ. ஆகியோர் தவெக-வில் இணைய உள்ளதாக பரவிய தகவல் குறித்து, விட்டில் பூச்சியை நம்பி கலங்கரை விளக்கை விட்டு எப்படி செல்வேன் என முன்னாள் எம்.எல்.ஏ. ராஜவர்மன் குறிப்பிட்டுள்ளார்.

    தவெகவில் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட் டையன் இணைந்ததைத் தொடர்ந்து, விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஒருவர் தலைமையில் முன்னாள் எம்.எல்.ஏ. ராஜவர்மன் உள்ளிட்டோர் விரைவில் த.வெ.க.வில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகின.

    ஆனால், விருதுநகரைச் சேர்ந்த முன்னாள் அமைச்சரில் ஒருவரான மாபா.பாண்டியராஜன் விருதுநகர் தொகு தியை குறிவைத்து அதிமுகவின் தலைமையிடம் அழுத்தம் கொடுத்து வருகிறார்.

    அதோடு, விருதுநகர் தொகுதியில் விநியோகம் செய்ய அவரது படத்துடன் அதிமுக சார்பில் காலண்டர் வழங்கவும் திட்டமிட்டு அதற்கான பணிகளைத் தொடங்கியுள்ளார்.

    இந்நிலையில், தவெகவில் இணைவதாக வெளியான தகவல் குறித்து முன்னாள் எம்.எல்.ஏ. ராஜவர்மன் தனது கண்டனத்தை முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், த.வெ.க.வுக்கு ஓட தயாராகும் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் என்ற தகவல் முற்றிலும் தவறானது.

    அதில் எனது ராஜவர்மன் என எனது பெயரை வெளியிட்டிருப்பது எனது நற்பெயருக்கும், புகழுக்கும் களங்கம் விளைவிப்பதாக அமைந்துள்ளது.

    விட்டில் பூச்சியை நம்பி கலங்கரை விளக்கை விட்டு எப்படி செல்வேன்? முன்னாள் அமைச்சர் ஒருவரின் தூண்டுதலால் இச்செய்தி வெளியிடப்பட்டிருப்பதாக உணர்கிறேன் என்று குறிப்பிட்டு அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜியை மறைமுகமாக சாடியுள்ளார். இதனால் விருதுநகர் மாவட்ட அதிமுகவினரிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதிருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபமேற்ற வலியுறுத்தி டிச.13-ல் உண்ணாவிரதம்: ஐகோர்ட் அனுமதி
    Next Article கைதி-2 கைவிடப்பட்டதா? கார்த்தி சாென்னது இதுதான்
    Editor TN Talks

    Related Posts

    தமிழகத்தில் மூடப்பட்ட 717 மதுக் கடைகள் எவையெவை? டாஸ்மாக் நிர்வாகம் அறிக்கை

    June 15, 2026

    சி.வி.சண்முகம் நாடாளுமன்ற உறுப்பினரானது எடப்பாடி பழனிசாமி போட்ட பிச்சை – அட்டாக் அக்ரி. கிருஷ்ணமூர்த்தி

    June 15, 2026

    சினிமா வசனம் தேவையில்லை; போர்க்கால நடவடிக்கை எப்போது? – முதல்வருக்கு டிடிவி கேள்வி

    June 15, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    வரும் 18ல் ‘தனுஷ் 55‘அப்டேட்!

    இந்தியா- சுலோவாகியா இடையே 7 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!

    கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை! தவெக பிரமுகர் கைது!

    விண்ணிலும் கடலிலும் இனி இந்தியா கெத்து… நிஜமாகும் பாதுகாப்பு அரண்!

    பள்ளி வளாகங்களில் அரசியல், மத நிகழ்ச்சிகள் நடத்தக் கூடாது என்ற உத்தரவை எதிர்த்த வழக்கு! தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.