Close Menu
    What's Hot

    பாக்ஸ் ஆபீஸில் வசூல் சாதனை படைக்கும் ‘கட்டா குஸ்தி 2’: உலகளவில் ரூ. 55 கோடியைக் கடந்தது!

    மும்பை: ’நீட்’ போராட்டக்காரர்களுக்கு அதிகாலை வாட்ஸ்அப்பில் போலீஸ் நோட்டீஸ்

    CJP போராட்டத்தை நசுக்க பாஜக – காங்கிரஸ் நாடகம்- ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»உலகம்»ரூ.9 கோடி​யில் அமெரிக்க குடியுரிமை பெறலாம்: கோல்டு கார்டு விசா அம்சங்கள்
    உலகம்

    ரூ.9 கோடி​யில் அமெரிக்க குடியுரிமை பெறலாம்: கோல்டு கார்டு விசா அம்சங்கள்

    Editor TN TalksBy Editor TN TalksDecember 12, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    visa card
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ரூ.9 கோடி​யில் அமெரிக்க குடி​யுரிமை பெறும் கோல்டு கார்டு விசா திட்​டத்தை அதிபர் டொனால்டு ட்ரம்ப் நேற்று தொடங்​கி​வைத்​தார்.

    அமெரிக்​கா​வில் சட்​ட​விரோத​மாக தங்​கி​யிருக்​கும் வெளி​நாட்​டினர் மீது கடும் நடவடிக்கை எடுக்​கப்​பட்டு வரு​கிறது. கடந்த 9 மாதங்​களில் மட்​டும் சுமார் 2 லட்​சத்​துக்​கும் மேற்​பட்​டோர் அமெரிக்​கா​வில் இருந்து வெளி​யேற்​றப்​பட்டு உள்​ளனர். மேலும் வெளி​நாட்டு பணி​யாளர்​களுக்​கான எச்​1பி விசா கட்​ட​ணம் ரூ.88 லட்​ச​மாக உயர்த்​தப்​பட்டு உள்​ளது.

    இந்த சூழலில் ரூ.9 கோடி​யில் அமெரிக்க குடி​யுரிமை பெறும் கோல்டு கார்டு விசா திட்​டத்தை அதிபர் டொனால்டு ட்ரம்ப், வாஷிங்​டனில் நேற்று தொடங்​கி​வைத்​தார். அப்​போது அவர் பேசி​ய​தாவது: அமெரிக்​கா​வின் வார்ட்​டன், ஹார்​வர்​டு, எம்​ஐடி பல்​கலைக்​கழகங்​களில் கல்வி பயிலும் இந்​தி​யா, சீனா, பிரான்ஸ் உள்​ளிட்ட வெளி​நாடு​களை சேர்ந்த மாணவர்​கள், படிப்பை நிறைவு செய்த பிறகு அவர​வர் சொந்த நாடு​களுக்கு திரும்​பு​கின்​றனர்.

    புதிய கோல்டு கார்டு விசா திட்​டத்​தின் மூலம் வெளி​நாடு​களை சேர்ந்த திறமை​யான மாணவ, மாண​வியர் நிரந்​தர​மாக அமெரிக்​கா​வில் தங்கி பணி​யாற்ற முடி​யும்.

    இதன்​மூலம் அமெரிக்கா​வுக்கு தேவை​யான திறன்​வாய்ந்த பணி​யாளர்​கள் மற்​றும் தொழில​திபர்​கள் கிடைப்​பார்​கள். அதோடு ரூ.9 கோடி​யில் கோல்டு கார்டு விசா பெறு​வதன் மூலம் அமெரிக்க அரசின் கரு​வூல​மும் நிரம்​பும்.

    சம்​பந்​தப்​பட்ட அமெரிக்க நிறு​வனங்​களே விசா கட்​ட​ணத்தை செலுத்தி உயர்​தொழில்​நுட்ப திறன்​ வாய்ந்த வெளி​நாட்டு பணி​யாளர்​களை தக்க வைக்க முடியும். இவ்​வாறு அதிபர் டொனால்டு ட்ரம்ப் பேசி​னார்.

    இதுதொடர்​பாக அமெரிக்க அதிபர் மாளிகை அதி​காரி​கள் கூறியதாவது: கோல்டு கார்டு விசாவை பெற விரும்​பும் தனிநபர்கள் https://trumpcard.gov/ இணை​யம் வாயி​லாக விண்​ணப்​பிக்க வேண்​டும். விசாவுக்​கான விண்​ணப்ப கட்​ட​ணம் ரூ.13 லட்​சம் ஆகும். விண்​ணப்​ப​தா​ரர் குறித்து முழு​மை​யான விசாரணை நடத்​தப்​படும். அவரிடம் நேர்​காணலும் நடத்​தப்​படும். விண்​ணப்​பம் ஏற்​கப்​பட்​டால் கோல்டு கார்டு விசா வழங்​கப்​படும்.

    இந்த விசாவை பெற தனி​நபருக்கு ரூ.9 கோடி (10 லட்​சம் டாலர்) கட்​ட​ண​மாக நிர்​ண​யிக்​கப்​பட்டு உள்​ளது. இதே விசாவை நிறு​வனங்​கள் பெற ரூ.18 கோடி (20 லட்​சம் டாலர்) கட்​ட​ணம் செலுத்த வேண்​டும்.

    தற்​போதைய நிலை​யில் அமெரிக்​கா​வில் வசிக்​கும் வெளி​நாட்​டினர் கிரீன் கார்டு பெற 15 ஆண்​டு​கள் வரை காத்திருக்க நேரிடு​கிறது. ஆனால் கோல்டு கார்டு விசாவை 4 மாதங்​களில் பெற முடி​யும். கிரீன் கார்டு வைத்​திருப்​போருக்கு கிடைக்​கும் அனைத்து சலுகைகளும் கோல்டு கார்டு விசா பெறுவோருக்​கும் கிடைக்​கும்.

    மேலும் கோல்டு கார்டு விசா பெற்​றவர்​களின் மனை​வி, திரு​மண​மா​காத பிள்​ளை​களுக்​கும் அதே விசா வழங்​கப்​படும். ஆனால் அனை​வருக்​கும் தனித்​தனி​யாக விசா கட்​டணத்தை செலுத்த வேண்​டும்.எதிர்காலத்தில் வெளி​நாட்​டினருக்​கான கிரீன் கார்டு திட்​டம் முழு​மை​யாக ரத்து செய்​யப்​படும். கோல்டு கார்டு விசா மட்​டுமே அமலில் இருக்​கும். எனினும் குற்ற வழக்​கு​களில் சிக்​கும் நபர்​களின் கோல்டு கார்டு விசா உடனடி​யாக ரத்து செய்​யப்​படும்.

    அடுத்த கட்​ட​மாக ட்ரம்ப் பிளாட்​டினம் கார்டு விசா அறி​முகம் செய்​யப்பட உள்​ளது. இந்த விசாவுக்​கான கட்​ட​ணம் ரூ.45 கோடியாக நிர்​ண​யிக்​கப்​படலாம்.இதன்​படி வெளி​நாடு​களை சேர்ந்த தனி​நபர்​கள், ஓராண்​டில் 270 நாட்​கள் வரை அமெரிக்காவில் தங்​கி​யிருக்​கலாம். இந்த காலத்​தில் அவர்​கள் ஈட்டும் வரு​வாய்க்கு வரி செலுத்​த தேவை​யில்​லை. இவ்​வாறு அமெரிக்​க அதிபர்​ மாளி​கை அதி​காரி​கள் தெரிவித்துள்ளனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleடி20 உலகக் கோப்பை டிக்கெட் விலை ரூ.100 ஆக குறைந்தது
    Next Article 2025-ல் கூகுளில் மக்கள் அதிகம் தேடியது என்ன?. டாப் 10 சுகாதார கேள்விகள் இதோ!
    Editor TN Talks

    Related Posts

    அமெரிக்கா- ஈரான் போர்: அமைதிப் பேச்சுவார்த்தைக்காக பாகிஸ்தான் பிரதமரைச் சந்தித்த ஈரானிய தூதுக்குழு!

    July 21, 2026

    சீனாவின் உயரிய இலக்கிய விருது..!! உணவு டெலிவரி ஊழியர் வென்று அசத்தல்..!!

    July 21, 2026

    கனடா மீது 50% வரி..!! இது நியாயமா..?? டிரம்புக்கு எதிராக கொந்தளித்த கார்னி..!!

    July 21, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    பாக்ஸ் ஆபீஸில் வசூல் சாதனை படைக்கும் ‘கட்டா குஸ்தி 2’: உலகளவில் ரூ. 55 கோடியைக் கடந்தது!

    மும்பை: ’நீட்’ போராட்டக்காரர்களுக்கு அதிகாலை வாட்ஸ்அப்பில் போலீஸ் நோட்டீஸ்

    CJP போராட்டத்தை நசுக்க பாஜக – காங்கிரஸ் நாடகம்- ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

    அங்கன்வாடியில் வழங்கிய முட்டையில் அழுகிய கோழிக்குஞ்சு… பெற்றோர் அதிர்ச்சி!

    பழனி கோயில் நில மோசடி வழக்கு: முன்னாள் இணை ஆணையர் உள்ளிட்ட 4 பேரிடம் 6 மணி நேரம் சிபிசிஐடி விசாரணை நிறைவு!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.