Close Menu
    What's Hot

    வாட்ஸ்அப்பில் புதிய ‘Username’ வசதி… புதிய மோசடிகளுக்கான ஆயுதமா?

    பாடப்புத்தகத்தில் ஐஸ்வர்யா ராய் பாட்டு! ஒடிசாவில் பெரும் சர்ச்சை!

    இந்தியாவில் தாக்குதல் நடத்த சதி திட்டம்!. 8 தீவிரவாதிகள் கைது!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»அரசியல்»இடதுசாரி கட்சிகள் தனி அணி… பெ.சண்​முகம் யோசனை
    அரசியல்

    இடதுசாரி கட்சிகள் தனி அணி… பெ.சண்​முகம் யோசனை

    Editor TN TalksBy Editor TN TalksDecember 13, 2025Updated:December 13, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    shun
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    அரசி​யலில் வலு​வான பங்​களிப்​பைப் பெற இடதுசாரி அணி தனி​யாக உரு​வாக வேண்​டும் என்று மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் மாநிலச் செய​லா​ளர் பெ.சண்​முகம் கூறி​னார். மார்க்​சிஸ்ட் லெனினிஸ்ட் கட்​சி​யின் 12-வது மாநில மாநாடு தூத்​துக்​குடி​யில் தொடங்​கியது.

    கட்​சி​யின் மாநிலச் செய​லா​ளர் பழ.ஆசைத்​தம்பி தலைமை வகித்​தார். அரசி​யல் தலை​மைக்​குழு உறுப்​பினர் வீ.சங்​கர் மாநாட்டை தொடங்​கி​வைத்​துப் பேசி​னார். இந்​திய கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் மாநிலச் செய​லா​ளர் மு.வீர​பாண்​டியன் பேசும்​போது, “வாக்​குரிமை பறிப்பு என்​பதை ஆழமாக சிந்​தித்​தால் குடி​யுரிமை பறிப்​பாகும்.

    சாதி, மதம், மொழி தொடர்​பான தீர்ப்​பு​களில் நீதிப​தி​கள் நல்​லிணக்​கத்​தைக் கடைப்​பிடிக்க வேண்​டும். பிரதமரும், உள்​துறை அமைச்​சரும் நாட்​டின் ஒற்​றுமையை சிதைக்​கிறார்​கள். மதச் சார்​பின்​மையை சிதைக்​கப் பார்க்​கிறார்​கள்.

    கம்​யூனிஸ்ட்​கள், ஜனநாயக முற்​போக்கு சக்​தி​கள் இருக்​கும்​வரை அது நடக்​காது. அந்த வகை​யில் தமிழக முதல்​வர் ஜனநாயகத்​துக்​கான போரைத் தொடங்​கி​வைத்​துள்​ளார்.

    மதத்​தின் பெய​ரால் பாஜக தொடங்​கி​யிருக்​கிற கருத்​தி​யல் போருக்கு நாம் தயா​ராக வேண்​டும்” என்​றார். மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் மாநில செய​லா​ளர் பெ.சண்​முகம் பேசி​ய​தாவது: மாநிலங்​களில் ஆட்சி அதி​காரங்​களை கைப்​பற்ற அமலாக்​கத் துறை, வரு​மான வரித் துறை, தேர்​தல் ஆணை​யம், சிபிஐ தொடங்கி தற்​போது நீதித் துறையை​யும் பயன்​படுத்​துகிறார்​கள். இந்த சவால்​களை எதிர்​கொள்​வதற்கு இடது​சா​ரி​களின் ஒற்​றுமை மிக​வும் அவசி​யம்.

    எனவே, இந்​திய கம்​யூனிஸ்ட், மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட், மார்க்​சிஸ்ட் லெனினிஸ்ட் மற்​றும் முற்​போக்கு சிந்​தனை​யாளர்​கள், பல முற்​போக்கு அமைப்​பு​களை கொண்ட இடது​சாரி அணியை உரு​வாக்க வேண்​டும். மதவாத கட்​சிகளை எதிர்த்​துப் போராட மதச்​சார்​பற்ற கட்​சிகளின் ஒற்​றுமை அவசி​யம்.

    அதே​நேரத்​தில் மத, தாராளமய கொள்​கைக்கு மாற்​றாக ஒரு இடது​சா​ரிக் கொள்​கை​யை, தொழிலா​ளர் நலனை முன்​னிறுத்​தும் பொருளா​தா​ரக் கொள்​கை​யை, ஒரு மாற்​றுக் கொள்​கையை நாம் முன்​வைக்க வேண்​டி​யுள்​ளது.

    அந்த மாற்​றுக் கொள்​கையை முன்​வைத்து இடது​சாரி அணி உரு​வாக வேண்​டும். நாம் பலமில்​லாமல் போனால் நாம் நினைக்​கிற மாற்​றத்தை அரசி​யலில் ஏற்​படுத்த முடி​யாது.

    எனவே, வலு​வான இடது​சாரி ஜனநாயக மாற்றை உரு​வாக்க அனை​வரும் சேர்ந்து முயற்​சிக்க வேண்​டும். இவ்​வாறு அவர் பேசி​னார்.

    இந்​திய கம்​யூனிஸ்ட் (மார்க்​சிஸ்ட் லெனினிஸ்ட்) கட்​சி​யின் அகில இந்​திய பொதுச் செய​லா​ளர் திபங்​கர், தமிழக அமைச்​சர் பி.கீ​தாஜீவன். விடு​தலை சிறுத்​தைகள் கட்​சித் தலை​வர் திரு​மாவளவன், மக்​கள் அதி​காரம் அமைப்​பின் மாநிலச் செய​லா​ளர்​ திருச்​சி செழியன்​ உள்​ளிட்​டோர்​ கலந்​து கொண்​டனர்​.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஎதைப் பார்த்தும் ஏமாந்து விடாதீர்கள்!. விஜய்யை சாடிய சத்யராஜ்!
    Next Article திருப்பதியில் ரஜினி… ஏழுமலையானை குடும்பத்துடன் தரிசனம்
    Editor TN Talks

    Related Posts

    வாட்ஸ்அப்பில் புதிய ‘Username’ வசதி… புதிய மோசடிகளுக்கான ஆயுதமா?

    July 3, 2026

    “தவெக-வில் சேர வற்புறுத்தினார்கள்” – அனிதா ராதாகிருஷ்ணன் பரபரப்பு குற்றச்சாட்டு!

    July 3, 2026

    ”ஆளுநருக்கு அந்த அதிகாரமோ உரிமையோ இல்லை…” – அமைச்சர் நிர்மல்குமார், எம்.பி. சு.வெங்கடேசன் கடும் எதிர்ப்பு

    July 3, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    வாட்ஸ்அப்பில் புதிய ‘Username’ வசதி… புதிய மோசடிகளுக்கான ஆயுதமா?

    பாடப்புத்தகத்தில் ஐஸ்வர்யா ராய் பாட்டு! ஒடிசாவில் பெரும் சர்ச்சை!

    இந்தியாவில் தாக்குதல் நடத்த சதி திட்டம்!. 8 தீவிரவாதிகள் கைது!

    “தவெக-வில் சேர வற்புறுத்தினார்கள்” – அனிதா ராதாகிருஷ்ணன் பரபரப்பு குற்றச்சாட்டு!

    இன்ஸ்டாகிராமில் ஆபாச விளம்பரங்கள்!. மெட்டா நிறுவனத்திற்கு மத்திய அரசு கடும் கண்டனம்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.