2026ம் ஆண்டு மார்ச் 31ம் தேதிக்குள் இந்தியா நக்சலிசத்திலிருந்து விடுபடும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
சத்தீஸ்கர் மாநிலம் பஸ்தாரில் ஒலிம்பிக்கின் நிறைவு விழாவில், உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியதாவது:
நான் தண்டேஸ்வரியின் பூமிக்கு வந்திருக்கும்போது, அன்னையின் முன் ஒரே ஒரு பிரார்த்தனை மட்டுமே உள்ளது. அவரது ஆசீர்வாதத்தால், சத்தீஸ்கர் நக்சலிசத்திலிருந்து முற்றிலும் விடுபட்டு, வளமாக வேண்டும்.
நக்சலிசத்தால் யாரும் பயனடையவில்லை. அமைதி மட்டுமே வளர்ச்சிக்கு வழி வகுக்கும்.2026ம் ஆண்டு மார்ச் 31ம் தேதிக்குள் இந்தியா நக்சலிசத்திலிருந்து விடுபடும். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு முழு இந்தியாவையும் நக்சலிசத்திலிருந்து விடுவிக்கத் உறுதிப்பூண்டுள்ளது.
நான் இன்று பஸ்தாருக்கு வந்துள்ளேன், மிகுந்த மகிழ்ச்சியை உணர்கிறேன்.கான்கர், கொண்டகான், பஸ்தார், சுக்மா, பிஜாப்பூர், நாராயண்பூர் மற்றும் தண்டேவாடா ஆகிய 7 மாவட்டங்கள் 2030க்குள் நாட்டின் மிகவும் வளர்ந்த பழங்குடி மாவட்டமாக இருக்கும் என்பதை இன்று உங்கள் அனைவருக்கும் உறுதியளிக்கிறேன்.
இவ்வாறு அமித்ஷா பேசினார்.
