Close Menu
    What's Hot

    அமைச்சர் சேகர்பாபு மகன்கள் நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிரடி சோதனை!. சென்னையில் பரபரப்பு!

    மாணவர்கள் கண்முன்னே கொடூரம்!. சேலத்தில் அரசுப் பள்ளி ஆசிரியை படுகொலை!. தமிழகமே அதிர்ச்சி!.

    நடிகை திரிஷா வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்!. சென்னையில் பரபரப்பு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»Featured»தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளராக பியூஷ் கோயல் நியமனம்!.
    Featured

    தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளராக பியூஷ் கோயல் நியமனம்!.

    Editor web3By Editor web3December 15, 2025Updated:December 15, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Piyush Goyal
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    அடுத்தாண்டு நடைபெற உள்ள தமிழக சட்டசபை தேர்தலை சந்திக்க ஏதுவாக தமிழக பாஜவுக்கு தேர்தல் பொறுப்பாளராக பியூஷ் கோயல் நியமிக்கப்பட்டுள்ளார்.

    தமிழக சட்டசபைக்கு அடுத்தாண்டு தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அனைத்துக் கட்சிகளும் தயாராகி வருகின்றன. இந்த தேர்தலை சந்திக்க அதிமுகவுடன் பாஜக கூட்டணி வைக்க பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. இதுதொடர்பாக ஆலோசனை நடத்த அமித்ஷா இன்று தமிழகம் வருகை தர இருந்தார், ஆனால், பல்வேறு குழப்பங்களால் அவரது வருகை தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், தேர்தலை சந்திப்பதற்கான ஏற்பாடுகளை தமிழக பாஜவும் ஏற்பாடு செய்து வருகிறது. பல இடங்களில் பொதுக்கூட்டங்களை நடத்தவும், அதற்கு மேலிட தலைவர்களை அழைத்து வரவும் திட்டமிட்டுள்ளது.

    அந்தவகையில் தற்போது சட்டசபை தேர்தலை சந்திக்க ஏதுவாக தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளராக, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயல் நியமிக்கப்பட்டுள்ளார்.

    இதுதொடர்பாக அக்கட்சியின் தேசிய பொதுச் செயலாளரும், தலைமை அலுவலக பொறுப்பாளருமான அருண் சிங் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தொகுதி பங்கீடு, வேட்பாளர்கள் தேர்வு, பிரச்சார வியூகம் உள்ளிட்ட விஷயங்களிலும் இவர் முக்கிய பங்காற்றுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல், மேலும் 3 மத்திய அமைச்சர்களும் இந்த பணியில் ஈடுபடவுள்ளனர்.

    அந்தவகையில், மத்திய அமைச்சர்களான அருண் ராம் மேக்வால், முரளிதர் மோஹோல் ஆகியோர் இணை பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். நயினார் நாகேந்திரன் – அமித்ஷா சந்திப்பை தொடர்ந்து தேர்தல் பொறுப்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது கவனத்தை ஈர்த்துள்ளது.

    மேலும், இந்த நியமனங்கள் உடனடி அமலுக்கு வரும் என்றும், தமிழ்நாட்டில் கட்சியின் தேர்தல் தயாரிப்புகளை வேகப்படுத்தும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நியமன அறிவிப்பு தமிழ்நாடு பாஜக மாநில நிர்வாகிகள், தலைவர் மற்றும் அமைப்பு செயலாளர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஇன்று முதல் 3 நாடுகளில் சுற்றுப்பயணம்… ஜோர்டான் புறப்பட்டார் மோடி
    Next Article அண்ணா பல்கலை., பாலியல் வழக்கு!. குற்றவாளி ஞானசேகரன் மீதான குண்டர் சட்டம் ரத்து!. உயர்நீதிமன்றம் உத்தரவு!
    Editor web3
    • Website

    Related Posts

    அமைச்சர் சேகர்பாபு மகன்கள் நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிரடி சோதனை!. சென்னையில் பரபரப்பு!

    April 13, 2026

    மாணவர்கள் கண்முன்னே கொடூரம்!. சேலத்தில் அரசுப் பள்ளி ஆசிரியை படுகொலை!. தமிழகமே அதிர்ச்சி!.

    April 13, 2026

    நடிகை திரிஷா வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்!. சென்னையில் பரபரப்பு!

    April 13, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    அமைச்சர் சேகர்பாபு மகன்கள் நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிரடி சோதனை!. சென்னையில் பரபரப்பு!

    மாணவர்கள் கண்முன்னே கொடூரம்!. சேலத்தில் அரசுப் பள்ளி ஆசிரியை படுகொலை!. தமிழகமே அதிர்ச்சி!.

    நடிகை திரிஷா வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்!. சென்னையில் பரபரப்பு!

    ராமதாஸ் உடல் நலம் குறித்து விசாரித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!.

    ”எரிபொருளுக்காக ஏங்குவீர்கள்”!. அமெரிக்காவுக்கு ஈரான் பகிரங்க எச்சரிக்கை!.

    Trending Posts

    ”எரிபொருளுக்காக ஏங்குவீர்கள்”!. அமெரிக்காவுக்கு ஈரான் பகிரங்க எச்சரிக்கை!.

    April 13, 2026

    மீண்டும் படம் நடிக்கும் விஜய்? ‘ஜனநாயகன்’ நஷ்டத்தை ஈடு செய்ய அதிரடி முடிவு?

    April 13, 2026

    இலக்கு மாறிய ஏவுகணை; சிதறிய உயிர்கள்!. நைஜீரிய அரசின் தவறால் நிகழ்ந்த 100 பேர் மரணம்!

    April 13, 2026

    நெல் சாகுபடி ஊக்கத்தொகை!. கடிதத்தை வெளியிட தயாரா?. நிர்மலாவுக்கு ஸ்டாலின் சவால்!.

    April 13, 2026

    அமைச்சர் சேகர்பாபு மகன்கள் நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிரடி சோதனை!. சென்னையில் பரபரப்பு!

    April 13, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.