Close Menu
    What's Hot

    எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெக தரப்பில் நிற்கத் தயாரா? – எஸ்.பி.வேலுமணிக்கு கேள்வி

    மலிவான பிரச்சாரங்களுக்குத் துணை போகப் போகிறாரா செங்கோட்டையன்? – தங்கம் தென்னரசு சாடல்!

    அனுபவம் இல்லாத ராஜ்மோகனுக்கு திரைத்துறை ஒதுக்கியது வருத்தம்!. நடிகர் விஷால்!.

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»100 நாள் வேலை உறுதி திட்டத்தை சின்னபின்னமாக்கும் மத்திய அரசு… முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு
    தமிழ்நாடு

    100 நாள் வேலை உறுதி திட்டத்தை சின்னபின்னமாக்கும் மத்திய அரசு… முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு

    Editor TN TalksBy Editor TN TalksDecember 15, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    MK Stalin 2
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    மகாத்மா காந்தி 100 நாள் வேலை உறுதித் திட்டத்தை பாஜ அரசு சிதைத்துச் சின்னாபின்னமாக்குகிறது என முதல்வர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

    மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கு மாற்றாக, வளர்ந்த இந்தியா வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத்துக்கான உத்தரவாத திட்டம்(கிராமப்புறம்) (VB G RAM G)’ மசோதாவை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இதில் வேலைநாட்கள் 125 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:

    மகாத்மா காந்தி 100 நாள் வேலை உறுதித் திட்டத்தைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கும் ஒன்றிய பாஜ அரசு! தேசத்தந்தை காந்தியடிகளின் மீதுள்ள வன்மத்தால் அவர் பெயரைத் தூக்கிவிட்டு, வாயில் நுழையாத வடமொழிப் பெயரைத் திணித்திருக்கிறார்கள்!

    100% மத்திய அரசின் நிதியில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டத்துக்கு இனி 60% மட்டுமே நிதி ஒதுக்குவார்களாம்! இவை அனைத்துக்கும் மேலாக, நாட்டிலேயே வறுமையை முழுமையாக ஒழித்துச் சாதனை படைத்துள்ளதற்காகவே நம் தமிழகம் தண்டிக்கப்படவுள்ளது! வறுமை இல்லாத மாநிலம் என்பதற்காக, இருப்பதிலேயே குறைவாகத்தான் இத்திட்டத்தின் பயன்கள் தமிழக மக்களுக்குக் கிடைக்குமாம்!

    பல கோடிப் பேரை வறுமையின் பிடியில் இருந்து மீட்டு, மாண்புடன் வாழ வழிவகுத்த ஒரு திட்டத்தை ஆணவத்துடன் அழிக்கப் பார்க்கிறது ஒன்றிய பாஜக அரசு! வேளாண் சட்டம், ஜாதிவாரி கணக்கெடுப்பு போன்றவற்றில் எப்படி பின்வாங்கினீர்களோ, அதேபோல மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தைச் சிதைக்கும் முயற்சியிலும் மக்கள் உங்களை நிச்சயம் பின்வாங்க வைப்பார்கள்! எனவே, மக்களின் சீற்றத்துக்கு ஆளாகாமல் இப்போதே புதிய திட்டத்தைக் கைவிட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்!

    இவ்வாறு அந்த அறிக்கையில் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கு மூடுவிழா? மாற்றாக மத்திய அரசு புது திட்டம்
    Next Article திருப்பரங்குன்றம் தீபத்தூண் வழக்கு: 2-வது நாளாக அனல் பறந்த வாதங்கள்… முழு தகவல்!
    Editor TN Talks

    Related Posts

    எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெக தரப்பில் நிற்கத் தயாரா? – எஸ்.பி.வேலுமணிக்கு கேள்வி

    May 17, 2026

    மலிவான பிரச்சாரங்களுக்குத் துணை போகப் போகிறாரா செங்கோட்டையன்? – தங்கம் தென்னரசு சாடல்!

    May 17, 2026

    திமுக தலைவராகிறாரா உதயநிதி? – டாக்டர் எழிலன் கொளுத்திப்போட்ட சரவெடி

    May 17, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெக தரப்பில் நிற்கத் தயாரா? – எஸ்.பி.வேலுமணிக்கு கேள்வி

    மலிவான பிரச்சாரங்களுக்குத் துணை போகப் போகிறாரா செங்கோட்டையன்? – தங்கம் தென்னரசு சாடல்!

    அனுபவம் இல்லாத ராஜ்மோகனுக்கு திரைத்துறை ஒதுக்கியது வருத்தம்!. நடிகர் விஷால்!.

    திமுக தலைவராகிறாரா உதயநிதி? – டாக்டர் எழிலன் கொளுத்திப்போட்ட சரவெடி

    அதிமுகவை அதிர வைக்கும் ‘கையெழுத்து’ அரசியல்!. 1000 பேர் அவுட்!. வேலுமணி அதிரடி மூவ்!

    Trending Posts

     புதுச்சேரி : இருசக்கர வாகனத்தில் மோதிய அரசுப் பேருந்து..! ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி..!

    May 17, 2026

    தவெக அமைச்சரவையில் காங்கிரஸுக்கு 2 இடங்கள்?. வெளியான தகவல்!

    May 17, 2026

    எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெக தரப்பில் நிற்கத் தயாரா? – எஸ்.பி.வேலுமணிக்கு கேள்வி

    May 17, 2026

    அனுபவம் இல்லாத ராஜ்மோகனுக்கு திரைத்துறை ஒதுக்கியது வருத்தம்!. நடிகர் விஷால்!.

    May 17, 2026

    அதிமுகவை அதிர வைக்கும் ‘கையெழுத்து’ அரசியல்!. 1000 பேர் அவுட்!. வேலுமணி அதிரடி மூவ்!

    May 17, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.