Close Menu
    What's Hot

    முதல்வர் விஜய்யைச் சுற்றிய அதிகார வட்டம்… வெடிக்கும் சர்ச்சைகள்

    “கூவத்தைப் பார்த்தபோது தெரியவில்லையா?” – ஆளுநருக்கு சு. வெங்கடேசன் பதிலடி

    பழிக்குப் பழி: நெல்லை அருகே தந்தை, 5 வயது மகன் வெட்டிக்கொலை – தலையை துண்டித்து கொடூரம்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»இந்தியா»தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கு மூடுவிழா? மாற்றாக மத்திய அரசு புது திட்டம்
    இந்தியா

    தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கு மூடுவிழா? மாற்றாக மத்திய அரசு புது திட்டம்

    Editor TN TalksBy Editor TN TalksDecember 15, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    jobb
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கு மாற்றாக, வளர்ந்த இந்தியா வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத்துக்கான உத்தரவாத திட்டம்(கிராமப்புறம்) (VB G RAM G)’ மசோதாவை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இதில் வேலைநாட்கள் 125 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

    கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் 2005ம் ஆண்டு, கிராமப்புறங்களில் வசிப்பவர்களுக்கு ஆண்டில் 100 நாட்கள் வேலை கிடைப்பதை உறுதி செய்ய மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இதற்கு மாற்றாக ‘ வளர்ந்த இந்தியா வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத்துக்கான உத்தரவாத திட்டம் (கிராமப்புறம்) ‘ என்ற திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இதற்கு மத்திய அமைச்சரவை கடந்த 12 ம் தேதி ஒப்புதல் அளித்த நிலையில், பார்லிமென்டில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

    இதனையடுத்து, அனைத்து எம்பிக்களும் பார்லிமென்டிற்கு வர வேண்டும் என பாஜ கொறடா உத்தரவு பிறப்பித்துள்ளது.

    மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய மசோதாப்படி வேலை நாட்களின் எண்ணிக்கை 100 ல் இருந்து 125 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

    பழைய திட்டத்தின்படி மொத்த செலவையும் மத்திய அரசு ஏற்றுக் கொண்டது. ஆனால், புதிய திட்டத்தில், மாநில அரசுகளும் நிதி வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதேநேரத்தில், மத்திய அரசுக்கும், இமயமலை மாநிலங்கள், உத்தரகாண்ட், ஹிமாச்சல பிரதேசம் ஜம்மு காஷ்மீர் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கும் நிதிப் பகிர்வு 90:10 ஆகவும், சட்டசபை கொண்ட அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு 60:40 ஆகவும் இருக்கும். சட்டசபை இல்லாத யூனியன் பிரதேசங்களில் ஆகும் மொத்த செலவையும் மத்திய அரசு ஏற்றுக் கொண்டுள்ளது.

    இந்த திட்டத்திற்கு ரூ.1.51 லட்சம் கோடி செலவாகும் நிலையில், மத்திய அரசு ரூ.95,692 கோடி வழங்க உள்ளது. நீர் பாதுகாப்பு, ஊரக கட்டமைப்பு, வாழ்வாதார உள்கட்டமைப்பு உள்ளிட்ட நான்கு வகைகளில் பணிகள் ஒதுக்கப்படும். அதேநேரத்தில், விவசாயப் பணிகள் உச்சத்தில் இருக்கும் போது விவசாயத் தொழிலாளர்கள் போதுமான அளவு கிடைப்பதை உறுதி செய்வதற்காக, அந்த காலகட்டத்தில் இந்தப் பணிகள் துவங்கப்படவோ அல்லது செயல்படுத்தக்கூடாது.

    இதற்கான அறிவிப்பை 60 நாட்களுக்கு முன்னதாக மத்திய அரசு வெளியிட வேண்டும். பணி முடிந்த ஒரு வாரம் அல்லது 15 நாட்களுக்குள் சம்பளம் வழங்கப்பட வேண்டும். அவ்வாறு வழங்கப்படாவிட்டால் வேலையின்மைக்கான படி வழங்கப்பட வேண்டும் எனக்கூறப்பட்டுள்ளது.

    இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள காங்கிரஸ் எம்பி பிரியங்கா, மஹாத்மா காந்தியின்பெயரை நீக்குவது ஏன்? இந்தியாவின் மிகப்பெரிய தலைவர்களில் ஒருவர். பெயர் மாற்றம்போது எல்லாம் அதிக செலவாகும். இந்த மாற்றத்துக்கான நோக்கம் என்னவென புரியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதமிழகத்தில் நவோதயா பள்ளிகள்: 6 வாரத்திற்குள் இடங்களை தேர்வு செய்ய சுப்ரீம் கோர்ட் உத்தரவு
    Next Article 100 நாள் வேலை உறுதி திட்டத்தை சின்னபின்னமாக்கும் மத்திய அரசு… முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு
    Editor TN Talks

    Related Posts

    பெங்களூரு ஐடி நிறுவன கிரெச்சில் குழந்தைகள் சித்ரவதை: விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள்

    July 2, 2026

    இந்தியா – ஜப்பான் இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து – பிரதமர் மோடி அறிவிப்பு

    July 2, 2026

    இனி சண்டை வேண்டாமே.. ப்ளீஸ்..!! மோடி – ஷெபாஸ் ஷெரீப்பிற்கு 117 முக்கிய பிரமுகர்கள் கடிதம்..!!

    July 2, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    முதல்வர் விஜய்யைச் சுற்றிய அதிகார வட்டம்… வெடிக்கும் சர்ச்சைகள்

    “கூவத்தைப் பார்த்தபோது தெரியவில்லையா?” – ஆளுநருக்கு சு. வெங்கடேசன் பதிலடி

    பழிக்குப் பழி: நெல்லை அருகே தந்தை, 5 வயது மகன் வெட்டிக்கொலை – தலையை துண்டித்து கொடூரம்

    ஜெயிலர் 2 படத்தின் அசத்தல் அப்டேட்..! படக்குழுவின் அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகம்..!

    நிலநடுக்கங்களால் வெனிசுலாவில் கடும் பாதிப்பு..! ரூ.95,000கோடி இழப்பு என தகவல்..!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.