Close Menu
    What's Hot

    கரூர் அருகே பயங்கரம்!. வீட்டிற்குள் புகுந்து மர்மநபர்கள் வெறிச்செயல்! தாய் பலி, மகள் படுகாயம்!

    கர்நாடகத்தின் தமிழர் விரோதப் போக்கு… திருமாவளவன் கண்டனம்… அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட அரசுக்கு கோரிக்கை

    Red Zone பகுதியில் முதலமைச்சர் Drone Shot – விதிகளை மீறியதாக அதிமுக கண்டனம்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தேர்தல் 2026»திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு எப்போது? வைகோ பேட்டி
    தேர்தல் 2026

    திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு எப்போது? வைகோ பேட்டி

    Editor TN TalksBy Editor TN TalksDecember 16, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    1957037 vaiko1
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவித்த உடனே திமுகவுடனான தொகுதி பேச்சுவார்த்தை தொடங்கப்படும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

    ஜனவரி 2 ஆம் தேதி முதல் மதிமுக கட்சி சார்பில் மது ஒழிப்பு சமத்துவ நடைபயணம் நடைபெறவுள்ளது. திருச்சியில் இந்த நடைபயணத்தை தொடங்கி வைக்குமாறு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, சென்னை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அழைப்பிதழை வழங்கினார்.

    அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர் சமத்துவ நடைபயணம் குறித்தும், தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தை குறித்தும் பகிர்ந்து கொண்டார்.

    முதலில் சமத்துவ நடைபயணம் குறித்து பேசிய அவர், “மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், எச்சரிக்கை செய்கிற விதத்திலும் வரும் ஜனவரி 2 ஆம் தேதி சமத்துவ நடைபயணம் மேற்கொள்ளவுள்ளேன். இதில் பெரும்பாலும் கல்லூரி மாணவர்கள் இடம் பெறுகிறார்கள். இந்த மது ஒழிப்பு நடைபயணத்தை திருச்சி உழவர் சந்தையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இதில் விசிக தலைவர் திருமாவளவன், கமல்ஹாசன் எம்பி உள்ளிட்டோரும் பங்கு பெறவுள்ளனர்.

    ஜனவரி 12 ஆம் தேதி மதுரையில் கவிஞர் வைரமுத்து, நடிகர் சத்யராஜ் நிறைவு நிகழ்ச்சிக்கு வாழ்த்து தெரிவிக்கின்றனர். கட்டுப்பாட்டுடனும், போக்குவரத்து ஒழுங்கு நெறிமுறைகளை முறையாக கடைபிடித்தும் இந்த நடைபயணம் மேற்கொள்ளப்படும்” என்றார்.

    தொடர்ந்து தேர்தல் குறித்து பேசிய வைகோ, “மக்கள் மத்தியில் திமுக கூட்டணிக்குத் தான் ஆதரவு இருக்கிறது. 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான மத சார்பற்ற கூட்டணி தான் மகத்தான வெற்றி பெறும். புதிதாக அரசியலுக்கு வந்தவர் திராவிட முன்னேற்ற கழகத்தை வெல்ல முடியாது. தேர்தல் அறிவிப்பு வந்தவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெறும். இப்போது அதற்கான தேவை இல்லை” என்றார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஎம்எல்ஏ கார் மோதி முதியவர் பலி… தஞ்சை அருகே பரபரப்பு
    Next Article திமுகதான் ஒரே எதிரி; 2026 தேர்தலில் அதிமுகவின் வெற்றி உறுதி… ஆர்பி உதயகுமார் நம்பிக்கை
    Editor TN Talks

    Related Posts

    தமிழக சட்டமன்றத் தேர்தல் செலவு கணக்குகள்: ஜூன் 3-ம் தேதி கடைசி நாள்..!!

    May 30, 2026

    தமிழகத்தில் காலியான 4 தொகுதிகள்..!! தேர்தல் ஆணையத்திற்கு பறந்த அறிக்கை..!!

    May 28, 2026

    விஜய் அமைச்சரவையின் இலாகா ஒதுக்கீடும் புதிய சமூக நீதி இலக்கணமும்..!

    May 16, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    கரூர் அருகே பயங்கரம்!. வீட்டிற்குள் புகுந்து மர்மநபர்கள் வெறிச்செயல்! தாய் பலி, மகள் படுகாயம்!

    கர்நாடகத்தின் தமிழர் விரோதப் போக்கு… திருமாவளவன் கண்டனம்… அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட அரசுக்கு கோரிக்கை

    Red Zone பகுதியில் முதலமைச்சர் Drone Shot – விதிகளை மீறியதாக அதிமுக கண்டனம்!

    ஃபேஸ்புக் காதல் முதல் போதை மறுவாழ்வு மைய சித்ரவதை வரை!. திருநங்கையை கரம்பிடித்த ஐடி ஊழியர்!

    திமுக எம்.எல்.ஏ மணிகண்டேயன் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்தி வைப்பு!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.