Close Menu
    What's Hot

    ‘வீடு லீஸ்’ எனக்கூறி பல கோடி மோசடி!- போலீஸ் அலட்சியம் காட்டியதாக மக்கள் புகார்!

    இந்திய அணிக்கு எதிராக 2வது அதிவேக சதம்! ஆப்., வீரர் குர்பாஸ் புதிய சாதனை

    24 மணி நேரத்தில் அமெ. – ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம்!- பாகிஸ்தான் நம்பிக்கை

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தேர்தல் 2026»திமுகதான் ஒரே எதிரி; 2026 தேர்தலில் அதிமுகவின் வெற்றி உறுதி… ஆர்பி உதயகுமார் நம்பிக்கை
    தேர்தல் 2026

    திமுகதான் ஒரே எதிரி; 2026 தேர்தலில் அதிமுகவின் வெற்றி உறுதி… ஆர்பி உதயகுமார் நம்பிக்கை

    Editor TN TalksBy Editor TN TalksDecember 16, 2025Updated:December 16, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    rbu
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    அதிமுகவின் ஒரே எதிரி திமுகதான் என்றும், 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியின் வெற்றி உறுதி என்றும் முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

    சென்னை செல்வதற்காக மதுரை ரயில் நிலையம் சென்ற முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவருமான ஆர்.பி உதயகுமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில், கூட்டணியை டெல்லியில் பாஜகவும், தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிசாமியுமதான் முடிவு செய்வர்” என்றார்.

    ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் ஆகியோர் அண்ணாமலையை சந்தித்தது குறித்த கேள்விக்கு, “தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது என்பதை இது காட்டுகிறது. அவரவருக்கு தெரிந்த செய்தியை அவரவர் பாணியில் பாராட்டிக் கொள்கின்றனர். இதை குற்றச்சாட்டாக சொல்ல முடியாது” என்றார்.

    தொடர்ந்து அதிமுக – பாஜக கூட்டணி குறித்து பேசிய அவர், “எங்களுடைய கூட்டணியை கண்டு ஆளும் திமுக நடுநடுங்கி போயிருக்கிறது. எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்கும் கட்சிகள், மக்களுக்கு சேவை செய்யும் கட்சிகள், ஒத்த கருத்துடைய கட்சிகள், அதிமுக – பாஜக கூட்டணியில் இணையலாம். இதனை உறுதி செய்யும் வகையில்தான் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. நிச்சயமாக அது நிறைவேறும். தை பிறந்தால் வழி பிறக்கும்” என்றார்.

    விஜய் கூட்டணிக்கு வருவார் என்று நம்புகிறீர்களா? என்ற கேள்விக்கு, “யார் யார் கூட்டணிக்கு வருவார்கள் என்று ஜாதகம் பார்க்க முடியாது. திமுகவை எதிர்ப்பவர்கள் அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான கூட்டணியில் இணைந்தால் மக்கள் அவர்களை வரவேற்க தயாராக உள்ளனர்” என்று கூறினார்.

    ‘விஜய்யை முதல்வராக்குவேன்’ என செங்கோட்டையன் கூறியிருப்பது குறித்த கேள்விக்கு, “அதை நான் பார்க்கவில்லை” என்றார். அவரிடம், செங்கோட்டையன் லருகைக்கு பின் தவெக வளர்ச்சியை எப்படி பார்க்கிறீர்கள்? என்று கேட்டதற்கு, “ஜனநாயக நாட்டில் தேர்தல் திருவிழாவின்போது யார் வேண்டுமானாலும் வருவார்கள், போவார்கள். யாரையும் வரவேண்டாம் என்று சொல்ல முடியாது. சாமி யாருக்கு வரம் தரப்போகிறது என்பதை மக்கள் முடிவு செய்வார்கள். மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு” என்றார்.

    பாஜக 80 தொகுதிகளை உறுதி செய்துவிட்டதா? என்ற கேள்விக்கு, “தலைமை எடுக்கும் முடிவுகளை தொண்டர்கள் வரவேற்கத்தான் முடியுமே தவிர, அதுகுறித்து விவாதிக்க முடியாது. பொறுத்திருந்து பாருங்கள்” என்று பதிலளித்தார்.

    2026 தேர்தலில் திமுக எதிரியா? தவெக எதிரியா? என்ற கேள்விக்கு, “அதிமுகவின் ஒரே எதிரி திமுக மட்டும்தான். 54 வருடங்களாக எங்களுக்கு திமுகதான் எதிரி. ஓராயிரம் ஸ்டாலின் வந்தாலும், ஒரு லட்சம் உதயநிதி ஸ்டாலின் வந்தாலும் அதிமுக தலைமையிலான கூட்டணி தான் வெற்றி பெறும்” என்று ஆர்.பி.உதயகுமார் பதிலளித்தார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதிமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு எப்போது? வைகோ பேட்டி
    Next Article மீண்டும் கொட்டப் போகுது மழை… வானிலை மையம் சொன்ன நியூஸ்
    Editor TN Talks

    Related Posts

    தமிழக சட்டமன்றத் தேர்தல் செலவு கணக்குகள்: ஜூன் 3-ம் தேதி கடைசி நாள்..!!

    May 30, 2026

    தமிழகத்தில் காலியான 4 தொகுதிகள்..!! தேர்தல் ஆணையத்திற்கு பறந்த அறிக்கை..!!

    May 28, 2026

    விஜய் அமைச்சரவையின் இலாகா ஒதுக்கீடும் புதிய சமூக நீதி இலக்கணமும்..!

    May 16, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ‘வீடு லீஸ்’ எனக்கூறி பல கோடி மோசடி!- போலீஸ் அலட்சியம் காட்டியதாக மக்கள் புகார்!

    இந்திய அணிக்கு எதிராக 2வது அதிவேக சதம்! ஆப்., வீரர் குர்பாஸ் புதிய சாதனை

    24 மணி நேரத்தில் அமெ. – ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம்!- பாகிஸ்தான் நம்பிக்கை

    நடிகர் ஜீவாவின் புதிய பட அப்டேட்!

    ‘எல்லாம் இனிதே’!- ‘சேயோன்’ புதிய புகைப்படம் வெளியீடு!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.