Close Menu
    What's Hot

    தமிழக காவல் அதிகாரிகள் 56 பேர் பணியிட மாற்றம்!

    வரும் 18ல் ‘தனுஷ் 55‘அப்டேட்!

    இந்தியா- சுலோவாகியா இடையே 7 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
    TN Talks
    Home»அரசியல்»டெல்லி ஜந்தர் மந்தரில் புதுச்சேரி காங்கிரஸ் கவன ஈர்ப்பு போராட்டம்… மருத்துவத் துறையில் ஊழல் நடந்திருப்பதாக குற்றச்சாட்டு
    அரசியல்

    டெல்லி ஜந்தர் மந்தரில் புதுச்சேரி காங்கிரஸ் கவன ஈர்ப்பு போராட்டம்… மருத்துவத் துறையில் ஊழல் நடந்திருப்பதாக குற்றச்சாட்டு

    Editor TN TalksBy Editor TN TalksDecember 17, 2025Updated:December 17, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    WhatsApp Image 2025 12 17 at 09.38.14 1
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    மக்களின் உயிரை காக்க வேண்டிய மருத்துவத் துறையில் ஊழல் புகுந்துள்ளதாகக் குற்றம் சாட்டி, போலி மருந்து விற்பனைக்கு எதிராக புதுச்சேரி காங்கிரஸ் கட்சியினர் டெல்லி ஜந்தர் மந்தரில் கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    போலி மருந்துகளுக்கு எதிராக போராட்டம்

    மக்களின் உயிரை காக்க வேண்டிய மருத்துவத் துறையில் ஊழல் புகுந்துள்ளதாகக் குற்றம் சாட்டி, போலி மருந்து விற்பனைக்கு எதிராக புதுவை காங்கிரஸ் கட்சியினர் டெல்லி ஜந்தர் மந்தரில் கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் தமிழக காங்கிரஸ் கமிட்டித்… pic.twitter.com/NumxpVrfhR

    — TNTalks (@tntalksofficial) December 17, 2025

     

    புதுச்சேரியில் அரசு மருத்துவமனைகளில் கொள்முதல் செய்யப்பட்ட மருந்துகளில் போலி மருந்துகள் இருப்பதாகவும், தற்போதைய ஆட்சியில் அதிகாரத்தில் உள்ளவர்கள் கோடி கோடியாய் பணம் ஈட்ட, ஏழை மற்றும் நடுத்தர மக்கள் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும் போராட்டத்தில் பங்கேற்றவர்கள் குற்றம்சாட்டினர்.

    இந்த விவகாரத்தில் முழுமையான சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்றும், இதன் பின்னணியில் உள்ள புதுச்சேரி NRBJP அரசு சபாநாயகர் முதல் மத்திய அமைச்சர்கள் வரை பதவி விலக வேண்டும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர்.

    இந்த போராட்டத்தில் புதுச்சேரி காங்கிரஸ் தலைவர் வி. வைத்திலிங்கம், முன்னாள் முதலமைச்சர் வி. நாராயணசாமி, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வ பெருந்தகை, தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் குழு தலைவர் ராஜேஷ்குமார், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில பொருளாளர் ரூபி மனோகரன், புதுச்சேரி மாநில பொறுப்பாளர் கிரிஸ் சோடங்கர், காங்கிரஸ் கமிட்டியின் செயலாளர் சுராஜ் ஹேக்டே, துணை தலைவர் ஆர்.கே.ஆர். அனந்தராமன், முன்னாள் அமைச்சர் கமலக்கண்ணன், முன்னாள் அமைச்சர் கந்தசாமி,
    சட்டமன்ற உறுப்பினர் வைத்தியநாதன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன், மகிளா காங்கிரஸ் தலைவி நிஷா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஏழைகளின் வயிற்றில் அடிக்கிறது மோடி அரசு! வைகோ கொந்தளிப்பு
    Next Article சிறை தண்டனையை ரத்து செய்யக்கோரி பிஆர் பாண்டியன் மனு… காவல்துறை பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு
    Editor TN Talks

    Related Posts

    தமிழக காவல் அதிகாரிகள் 56 பேர் பணியிட மாற்றம்!

    June 15, 2026

    இந்தியா- சுலோவாகியா இடையே 7 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!

    June 15, 2026

    விண்ணிலும் கடலிலும் இனி இந்தியா கெத்து… நிஜமாகும் பாதுகாப்பு அரண்!

    June 15, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தமிழக காவல் அதிகாரிகள் 56 பேர் பணியிட மாற்றம்!

    வரும் 18ல் ‘தனுஷ் 55‘அப்டேட்!

    இந்தியா- சுலோவாகியா இடையே 7 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!

    கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை! தவெக பிரமுகர் கைது!

    விண்ணிலும் கடலிலும் இனி இந்தியா கெத்து… நிஜமாகும் பாதுகாப்பு அரண்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.