Close Menu
    What's Hot

    தவெகவின் மிகப்பெரிய வெற்றி.. இதை நாங்க எதிர்பாக்கல..!! அமித்ஷா பேச்சு..!!

    ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா மறைவு..!! கண்ணீருடன் நேரில் ஓடோடி வரும் தமிழ் திரையுலகம்..!!

    திமுக கள ஆய்வு குழு!. அறிக்கை தாக்கல் செய்ய இன்று இறுதி நாள்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»அரசியல்»ஏழைகளின் வயிற்றில் அடிக்கிறது மோடி அரசு! வைகோ கொந்தளிப்பு
    அரசியல்

    ஏழைகளின் வயிற்றில் அடிக்கிறது மோடி அரசு! வைகோ கொந்தளிப்பு

    Editor TN TalksBy Editor TN TalksDecember 17, 2025Updated:December 17, 2025No Comments3 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    4015917 vaiko
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    மகாத்மா காந்தி மீதான வன்மத்தை வெளிப்படுத்தி, ஏழை மக்களின் வயிற்றில் அடிக்கிறது மத்தியில் ஆளும் பிரதமர் மோடி தலைமையிலான அரசு என்று மதிமுக பொது செயலாளர் வைகோ கடுமையாக விமர்சித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

    நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் , திமுக, மதிமுக, பொதுவுடமைக் கட்சிகள் உள்ளிட்ட எதிர்க் கட்சிகளின் கடும் எதிர்ப்பைப் பொருட்படுத்தாமல்,  புதிய ஊரக வேலை உறுதி திட்ட மசோதாவை ஒன்றிய வேளாண் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான்  நேற்று டிசம்பர் 16 ஆம் தேதி தாக்கல் செய்துள்ளார்.

    கடந்த 2005-ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை கிராமப்புற மக்களுக்கு வாழ்வாதாரம் அளிக்கும் வகையில் செயல்படுத்தியது.

    மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டம் அரசியலமைப்பின் பிரிவு 21 மற்றும் அரசின் கொள்கை, வழிகாட்டுதல் கோட்பாடுகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. இதில், மொத்த உள்நாட்டு உற்பத்தியை (ஜிடிபி) பகிர்ந்து கொள்வதற்கு வழிவகை செய்யப்பட்டது.

    இச் சட்டம் வறட்சி, கிராமப்புற துயரங்கள் மற்றும் பொதுமக்களின் வேலையின்மை ஆகியவற்றை தீர்க்க ஒரு முக்கியமான மற்றும் நிலையான தீர்வாக அமைந்தது.

    கிராமப்புற மக்களின் வறுமையைப் போக்கி ஏழ்மை நிலையில் இருந்து விடுபடுவதற்கு முக்கிய காரணியாக இருந்தது.

    ஆனால் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு, 2014 இல் ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பின்னர் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதிச் சட்டம்  ஒட்டுமொத்தமாக செயல் இழக்க சதிகளை அரங்கேற்றி வந்தது.

    2008 மற்றும் 2011 க்கு இடையில், இந்தத் திட்டத்திற்கான ஆண்டு ஒதுக்கீடு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.4 சதவீதமாக இருந்தது.

    ஆனால் மோடி அரசு இத்திட்டத்திற்கான நிதியை ஆண்டுதோறும் வரவு செலவுத் திட்டத்தில்  குறைத்துக் கொண்டே வந்தது.

    2021-2022-இல் 98,468 கோடி ரூபாய் ஒதுக்கிய நிலையில், 2022 – 2023-இல் 73,000 கோடி ரூபாயும் 2023-2024-இல் 60 ஆயிரம் கோடி ரூபாயும் என ஆண்டுதோறும் நிதியை ஒன்றிய அரசு குறைத்தது.

    2023-2024-இல் ஒதுக்கப்பட்ட தொகையும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.198 சதவீதம்தான்.

    இந்தப் பற்றாக்குறையால் ஆண்டுக்கு 100 நாட்கள் வேலை வாய்ப்பு வழங்க முடியாமல் சராசரியாக வெறும் 40 நாட்கள் வேலை மட்டுமே என்ற நிலை உருவானது.

    அதுமட்டுமல்ல, ஒன்றிய அரசு இத்திட்டத்தில் பயனாளிகள் ஆதார் இணைக்கவில்லை என்று நாடு முழுவதும் இலட்சக்கணக்கான கிராமப்புற ஏழை மக்களை பட்டியலில் இருந்து நீக்கியது.

    அதிலும் குறிப்பாக பாஜக ஆளும் பொறுப்பில் இல்லாத மாநிலங்கள் நிதி ஒதுக்கீட்டில் முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டன.

    இந்த சூழலில்தான்  இந்த திட்டத்தின் பெயரை, ‘விக் ஷித் பாரத் கேரன்ட்டி பார் ரோஜ்கர் அண்ட் அஜீவிகா மிஷன் (கிராமின்) (விபி-ஜி ராம்-ஜி)’ என பெயர்மாற்ற ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. இது தொடர்பான மசோதாவுக்கு ஒன்றிய அமைச்சரவை கடந்த வாரம் ஒப்புதல் வழங் கியது.

    இந்நிலையில், புதிய ஊரக வேலை உறுதித் திட்ட (விபி-ஜி ராம் ஜி) மசோதா நேற்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதிச் சட்டத்தின் பெயரிலிருந்து தேசத் தந்தை மகாத்மா காந்தி பெயரை நீக்குவதற்கு நரேந்திர மோடி அரசு மசோதா தாக்கல் செய்திருப்பது கடும் கண்டனத்திற்கு உரியது.

    இதன் மூலம் மகாத்மா காந்தி மீதான வெறுப்பையும், வன்மத்தையும் ஒன்றிய அரசு மீண்டும் ஒருமுறை வெளிக்காட்டி இருக்கிறது.

    மகாத்மா காந்தியை திட்டமிட்டு தீர்த்துக் கட்டிய கூட்டம் பின்னணியில் இருந்து வழி நடத்துகிற பாஜக ஆட்சியில் இவையெல்லாம் வியப்புக்குரியதல்ல.

    2016 ஆம் ஆண்டில், ஜோசப் ஸ்டிக்லிட்ஸ் (பொருளாதாரத்தில் நோபல் பரிசு பெற்றவர்) ஒருமுறை பேசிய போது, “மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டம் (ஆசூசுநுழுஹ) இந்தியாவின் மிகப்பெரிய முற்போக்கான திட்டம் என்பது மட்டுமல்லாமல், முழு உலகிற்கும் ஒரு பாடமாக அமைந்துள்ளது” என்றார்.

    ஆனால் நரேந்திர மோடி அரசு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதிச் சட்டத்தின் நோக்கத்தை சிதைத்து, கோடிக்கணக்கான ஏழை மக்களை வயிற்றில் அடிக்கும் வகையில் திட்டத்தையே நீர்த்துப் போக செய்ய முயற்சிப்பது மன்னிக்க முடியாத துரோகச் செயலாகும்.

    மோடி அரசின் மக்கள் விரோத செயல்பாடுகளுக்கு தமிழ்நாட்டு மக்கள் சட்டப்பேரவை தேர்தலில் உரிய பாடம் கற்பிப்பார்கள்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் வைகோ தெரிவித்துள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleசர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் பாகற்காய்.. இப்படி செய்து சாப்பிடுங்க
    Next Article டெல்லி ஜந்தர் மந்தரில் புதுச்சேரி காங்கிரஸ் கவன ஈர்ப்பு போராட்டம்… மருத்துவத் துறையில் ஊழல் நடந்திருப்பதாக குற்றச்சாட்டு
    Editor TN Talks

    Related Posts

    தொடரும் கொலைகள், பாலியல் வன்கொடுமைகள் ; தவெகவின் ஒருமாத ஆட்சியில் அலறும் தமிழகம்!

    June 10, 2026

    முதலமைச்சர் விஜய் அறிவிப்பு; கமல்ஹாசன் வரவேற்பு

    June 9, 2026

    திமுக, அதிமுக செய்த அரசியல் அராஜகத்துக்கு தவெக முடிவு கட்டியுள்ளது – முன்னாள் அமைச்சர் பொன்னுசாமி

    June 9, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தவெகவின் மிகப்பெரிய வெற்றி.. இதை நாங்க எதிர்பாக்கல..!! அமித்ஷா பேச்சு..!!

    ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா மறைவு..!! கண்ணீருடன் நேரில் ஓடோடி வரும் தமிழ் திரையுலகம்..!!

    திமுக கள ஆய்வு குழு!. அறிக்கை தாக்கல் செய்ய இன்று இறுதி நாள்!

    இயக்குநர் இமயம் செதுக்கிய டாப் 10 ‘மண்வாசனை’ நாயகிகள்

    தொடரும் கொலைகள், பாலியல் வன்கொடுமைகள் ; தவெகவின் ஒருமாத ஆட்சியில் அலறும் தமிழகம்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.