Close Menu
    What's Hot

    அம்மோனியா கசிவு சம்பவம்: 3 நாளில் முழு அறிக்கை சமர்ப்பிக்க முதல்வர் உத்தரவு

    திருவள்ளூர் அருகே சோகம் : தொழிற்சாலையில் வாயுக் கசிவு… 7   பேர் பலி!

    நகராட்சி பெயரில் போலி ரசீது; கோவில்பட்டியில் இப்படியும் ஒரு வசூல்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»கோல்ட்ரிப் இருமல் மருந்து விவகாரம்!. தமிழக அரசின் உத்தரவுக்கு இடைக்கால தடை!. உயர்நீதிமன்றம் உத்தரவு!
    தமிழ்நாடு

    கோல்ட்ரிப் இருமல் மருந்து விவகாரம்!. தமிழக அரசின் உத்தரவுக்கு இடைக்கால தடை!. உயர்நீதிமன்றம் உத்தரவு!

    Editor web3By Editor web3December 17, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    hindutamil prod 2025 12 11 ix9sae2q Chennai High Court
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கோல்ட்ரிப் இருமல் மருந்தை விநியோகம் செய்ததாக, இந்திரா ஏஜென்சிஸ் நிறுவனத்தின் உரிமத்தை ரத்து செய்த தமிழக அரசின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    மத்திய பிரதேச மாநிலம், சிந்த்வாரா மாவட்டத்தில் சளி, இருமல், லேசான காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மருத்துவர்கள் கோல்ட்ஃரிப் இருமல் மருந்தை பரிந்துரை செய்தனர். அதன்படி ‘கோல்ட்ரிப்’ இருமல் மருந்தை குடித்த 22 குழந்தைகள் உயிரிழந்தனர். இதுகுறித்து, அம்மாநில காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    குழந்தைகளின் உயிரிழப்புக்கு காரணமான, கோல்ட்ரிப் இருமல் மருந்து, காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரத்தில் உள்ள, ஸ்ரீசன் பார்மா என்ற நிறுவனத்தில் தயாரிக்கப்பட்டது விசாரணையில் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மருந்து நிறுவனத்தின் உரிமையாளர் ரங்கநாதனை மத்திய பிரதேச மாநில காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

    இந்த சம்பவத்தை தொடர்ந்து தமிழகம் முழுவதும் கோல்ட்ரிப் மருந்துகளை விற்பனை செய்யும் நிறுவனங்களுக்கு எதிரான நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதை எதிர்த்து, இந்திரா ஏஜென்சிஸ் நிறுவனம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

    இந்த வழக்கு நீதிபதி சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், தங்களுக்கும் குறிப்பிட்ட மருந்து நிறுவனத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை. ஆனால், எந்த விசாரணையும் மேற்கொள்ளாமல் நிறுவன உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. தங்கள் நிறுவனத்தில் அழகு சாதன பொருட்கள் மட்டுமே தயாரிக்கப்படுகிறது. கோல்ட்ரிப் மருந்து உற்பத்தி செய்யப்படுவது இல்லை என தெரிவிக்கப்பட்டது.

    உரிய விசாரணை நடத்தாமல் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளதாகக் கூறி, இந்திரா ஏஜென்சிஸ் நிறுவனத்தின் உரிமம் ரத்து செய்த உத்தரவுக்கு தடை விதித்து உத்தரவிட்டார்.  மேலும், மனுவுக்கு பதிலளிக்கும்படி, தமிழக சுகாதாரத்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை ஜனவரி 21ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகனிமொழி தலைமையில் திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்புக்குழு!. தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம்!.
    Next Article வெனிசுலா அரசை பயங்கரவாத அமைப்பாக அறிவித்தார் டிரம்ப்!. பதற்றம் அதிகரிப்பு!.
    Editor web3
    • Website

    Related Posts

    அம்மோனியா கசிவு சம்பவம்: 3 நாளில் முழு அறிக்கை சமர்ப்பிக்க முதல்வர் உத்தரவு

    June 21, 2026

    திருவள்ளூர் அருகே சோகம் : தொழிற்சாலையில் வாயுக் கசிவு… 7   பேர் பலி!

    June 21, 2026

    நகராட்சி பெயரில் போலி ரசீது; கோவில்பட்டியில் இப்படியும் ஒரு வசூல்

    June 21, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    அம்மோனியா கசிவு சம்பவம்: 3 நாளில் முழு அறிக்கை சமர்ப்பிக்க முதல்வர் உத்தரவு

    திருவள்ளூர் அருகே சோகம் : தொழிற்சாலையில் வாயுக் கசிவு… 7   பேர் பலி!

    நகராட்சி பெயரில் போலி ரசீது; கோவில்பட்டியில் இப்படியும் ஒரு வசூல்

    கல்லூரி மாணவிக்கு பாலியல் சீண்டல் ; பேராசிரியரைக்  கைது செய்த சிங்கப் பெண்படை

    ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் மூடியது ஈரான்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.