Close Menu
    What's Hot

    தலைமைச் செயலர் மாற்றத்திற்கு கடும் எதிர்ப்பு!. தேர்தல் ஆணையத்திற்கு டி.ஆர்.பாலு கடிதம்!

    தமிழ்நாட்டில் தேர்தலை நிறுத்த வேண்டும்!. உச்ச நீதிமன்றத்தில் அவரச வழக்கு!

    ‘ஜனநாயகன்’ படத்தை லீக் செய்தது ஆதவ் அர்ஜுனாவா?. வினோஜ் பி.செல்வம் புதிய சர்ச்சை!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»அரசியல்»அன்புமணிக்கு செக் வைக்கும் ராமதாஸ்.. ஊழல் வழக்கை சிபிஐ விரைந்து விசாரிக்க வலியுறுத்தல்
    அரசியல்

    அன்புமணிக்கு செக் வைக்கும் ராமதாஸ்.. ஊழல் வழக்கை சிபிஐ விரைந்து விசாரிக்க வலியுறுத்தல்

    Editor TN TalksBy Editor TN TalksDecember 18, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    pmkk 1
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    அன்புமணி மீதான ஊழல் வழக்கு மற்றும் தேர்தல் ஆணையத்தில் போலி ஆவணங்களை சமர்ப்பித்து மோசடி செய்தது குறித்து சிபிஐ விரைந்து விசாரிக்க வேண்டும் என பாமக நிர்வாகக் குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

    பாமக நிர்வாகக் குழுக் கூட்டம் திண்டிவனத்தை அடுத்த தைலாபுரத்தில்  நடைபெற்றது. கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தலைமை வகித்தார். கவுரவத் தலைவர் ஜி.கே.மணி, செயல் தலைவர் காந்தி, இணைப் பொதுச்செயலாளர் எம்எல்ஏ அருள் மற்றும் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

    கூட்டத்தில், ‘சட்டப் பேரவைத் தேர்தலில் கூட்டணி குறித்து பேசுவதற்கு ராமதாஸுக்கு முழு அதிகாரம் அளிப்பது, தலையணை மந்திரத்தால் தலைக்கு பித்தம் ஏறி அலையும் அன்புமணி, தலையணை மந்திரத்தில் இருந்து முற்றிலும் விடுபடவில்லை என்றால் அவமானங்களையும், கேவலங்களையும் சந்திக்க நேரிடும் என எச்சரிப்பது, தம்பி மற்றும் சம்பந்தி என்ற உறவை விட அப்பா முக்கியம் என நினைத்து தந்தையை தலை நிமிரச் செய்துள்ள செயல் தலைவர் காந்திக்கு பாராட்டு மற்றும் நன்றி தெரிவிப்பது, நிலுவையில் உள்ள அன்புமணி மீதான ஊழல் வழக்கு மற்றும் தேர்தல் ஆணையத்தில் போலி ஆவணங்களை சமர்ப்பித்து மோசடி செய்தது குறித்து சிபிஐ விரைந்து விசாரிக்க வேண்டும்’ என்பது உள்ளிட்ட 13 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    கூட்டத்துக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ராமதாஸ் கூறியதாவது:

    பாமக தலைவர் உட்பட பல்வேறு பதவிகளை அன்புமணிக்கு கொடுத்து அழகு பார்த்தோம். ஆனால் அவர், தீட்டிய மரத்தில் கூர் பார்க்கிறார். நான் கஷ்டப்பட்டு உருவாக்கிய பாமக எனும் ஆலமரத்தின் ஒரு கிளையில் கோடாரி செய்து, நுனி கிளையில் உட்கார்ந்து கொண்டு அந்த ஆலமரத்தை வெட்ட ஆரம்பித்து இருக்கிறார்.

    டெல்லி உயர் நீதிமன்றமும் தேர்தல் ஆணையமும் எங்களுக்குச் சாதகமாக தீர்ப்பு வழங்கியும் கூட தேர்தலில் போட்டியிட விருப்ப மனுக்களை வாங்குவது, ஊர்வலம் செல்வது, கூட்டம் நடத்துவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார் அன்புமணி. என் பெயர், புகைப்படம் மற்றும் பாமக கொடியை அவர் பயன்படுத்துவதை வன்மையாகக் கண்டிக்கிறேன். அன்புமணியின் செயலுக்கு நிர்வாகக் குழுவிலும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்த பாமக நிர்வாகக் குழு, எனக்கு முழு அதிகாரம் கொடுத்துள்ளது. இதேபோல் செயற்குழுவும், பொதுக்குழுவும் எனக்கு அதிகாரம் வழங்கும். நாங்கள் ஜனநாயக முறைப்படி கட்சியை நடத்தி வருகிறோம். பொய்யர்கள் இத்துடன் நிறுத்திக் கொள்ள வேண்டும். கட்சிக்கும் உங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. விபரீத விளையாட்டு வேண்டாம்.

    போலி ஆவணங்களை கொடுத்து தேர்தல் ஆணையத்தை அன்புமணி ஏமாற்றி உள்ளார். இந்த விஷயத்தில் தேர்தல் ஆணையம் முதலில் தவறு செய்துள்ளது. டெல்லி உயர் நீதிமன்றம் எங்

    களுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கி உள்ளது. தவறைப் புரிந்து கொண்ட தேர்தல் ஆணையம் பின்னர், சரியான தீர்ப்பை வழங்கி உள்ளது. இறுதி வெற்றி எங்களுக்குதான். தீர்ப்பு தெளிவாக இருப்பதால், சிவில் நீதிமன்றத்துக்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை. பாமக-வின் சட்ட விதிகளின்படி, கட்சி என்னிடமே உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஜெயலலிதா செலுத்த வேண்டிய வருமான வரி நிலுவைத் தொகை எவ்வளவு? – விளக்கமான பதில்மனு தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவு
    Next Article இந்திய விமானங்கள் பறக்கத் தடை… ஜனவரி 23 வரை பாக்., நீட்டிப்பு
    Editor TN Talks

    Related Posts

    திருச்சி கிழக்கில் வேட்பு மனு தாக்குதல் செய்தார் தவெக தலைவர் விஜய்..!

    April 2, 2026

    பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியிடுவதில் ஏன் தாமதம்?

    April 2, 2026

    திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் விவரம்!

    March 28, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தலைமைச் செயலர் மாற்றத்திற்கு கடும் எதிர்ப்பு!. தேர்தல் ஆணையத்திற்கு டி.ஆர்.பாலு கடிதம்!

    தமிழ்நாட்டில் தேர்தலை நிறுத்த வேண்டும்!. உச்ச நீதிமன்றத்தில் அவரச வழக்கு!

    ‘ஜனநாயகன்’ படத்தை லீக் செய்தது ஆதவ் அர்ஜுனாவா?. வினோஜ் பி.செல்வம் புதிய சர்ச்சை!

    டிஎன்பிஎஸ்சி குரூப்-4!. மூன்றாம் கட்டக் கலந்தாய்வு தேதி அறிவிப்பு!

    சென்னையில் பரபரப்பு!. நடிகர்கள் ரஜினி, தனுஷ் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்!. 

    Trending Posts

    தலைமைச் செயலர் மாற்றத்திற்கு கடும் எதிர்ப்பு!. தேர்தல் ஆணையத்திற்கு டி.ஆர்.பாலு கடிதம்!

    April 11, 2026

    தமிழ்நாட்டில் தேர்தலை நிறுத்த வேண்டும்!. உச்ச நீதிமன்றத்தில் அவரச வழக்கு!

    April 11, 2026

    ‘ஜனநாயகன்’ படத்தை லீக் செய்தது ஆதவ் அர்ஜுனாவா?. வினோஜ் பி.செல்வம் புதிய சர்ச்சை!

    April 11, 2026

    டிஎன்பிஎஸ்சி குரூப்-4!. மூன்றாம் கட்டக் கலந்தாய்வு தேதி அறிவிப்பு!

    April 11, 2026

    சென்னையில் பரபரப்பு!. நடிகர்கள் ரஜினி, தனுஷ் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்!. 

    April 11, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.