Close Menu
    What's Hot

     பாஜக-வின் அதிரடி பிரச்சாரம்!. நாளை ஒரே நாளில் 6 மத்திய அமைச்சர்கள் தமிழகம் வருகை!

    இலவச கார் பயணம், அல்வா, ரூ.1க்கு அரிசி மாவு!. தேர்தல் ஆணையத்தின்  கவர்ச்சி அறிவிப்புகள்!.

    மேலூர் தொகுதியில் விஸ்வநாதன் போட்டி!. காங்கிரஸ் அறிவிப்பு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»விளையாட்டு»நேதன் லயன் சாதனை: கிளென் மெக்ராவை முந்தி 2-ம் இடத்துக்கு முன்னேற்றம்!
    விளையாட்டு

    நேதன் லயன் சாதனை: கிளென் மெக்ராவை முந்தி 2-ம் இடத்துக்கு முன்னேற்றம்!

    Editor TN TalksBy Editor TN TalksDecember 18, 2025No Comments3 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    game
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    அடிலெய்ட் டெஸ்ட் போட்டியின் 2ம் நாளான இன்று ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 371 ரன்கள் எடுக்க, தொடர்ந்து ஆடிவரும் இங்கிலாந்து 6 விக்கெட்டுகளைப் பறிகொடுத்து தடுமாறி வருகிறது.

    இந்த 6 விக்கெட்டுகளில் 2 விக்கெட்டுகளை ஒரே ஓவரில் கைப்பற்றிய நேதன் லயன் புதிய ஆஸ்திரேலிய சாதனை புரிந்தார். அதாவது டெஸ்ட் கிரிக்கெட்டில் கிளென் மெக்ரா கைப்பற்றிய 563 விக்கெட்டுகள் என்ற சாதனையைக் கடந்தார். இப்போது ஷேன் வார்ன் 708 விக்கெட்டுகளுடன் முதலிடத்தில் நீடிக்க, நேதன் லயன் 564 விக்கெட்டுகளுடன் இரண்டாம் இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

    இன்று காலை 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 326 ரன்கள் என்று ஆட்டத்தை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி 371 ரன்களை எட்டியதற்கும் மிட்செல் ஸ்டார்க் அரைசதம் அடித்ததற்கும் காரணம் ஜோப்ரா ஆர்ச்சர் மற்றும் பிரைடன் கார்ஸின் மோசமான பவுலிங்கே. இருவருமே ஷார்ட் பிட்ச்சாக வீசியதோடு வைடாகவும் வீச ஸ்டார்க், லயன், போலண்ட் ஆகியோர் 10 பவுண்டரிகளை விளாசினர். ஸ்டார்க் 75 பந்துகளில் 9 பவுண்டரிகளுடன் 54 ரன்கள் எடுத்து கடைசியாக ஆர்ச்சர் தான் கண்டுபிடிக்க முடிந்த ஃபுல் லெந்த் பந்தில் பவுல்டு ஆகி வெளியேறினார்.

    அவுட் ஆனவுடன் பென் ஸ்டோக்ஸ், ஜோப்ரா ஆர்ச்சரிடம் ஆவேசமாக எதையோ பேசினார். ஃபுல் லெந்தில் வீசாமல் ஏன் பேட்ஸ்மெனுக்கு ரூம் கொடுத்து அனாவசியமாக காலையில் வந்தவுடன் 6-7 பவுண்டரிகளை கொடுக்க வேண்டும் என்று சத்தம் போட்டிருப்பார் போல் தெரிந்தது. ஸ்காட் போலண்ட் 14 ரன்களையும் நேதன் லயன் 9 ரன்களை எடுத்து இன்னொரு ஆர்ச்சர் ஃபுல் லெந்த் பந்தில் எல்.பி.ஆக ஆஸ்திரேலியா 371 ரன்களை முதல் இன்னிங்ஸில் எடுத்தது. ஆர்ச்சர் 53 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஆஷஸில் இவர் கைப்பற்றும் 3-வது 5 விக்கெட்டுகள் ஆகும் இது. ஆஸ்திரேலியாவில் முதல் 5 விக்கெட்.

    முழுக்க முழுக்க பேட்டிங் பிட்ச் ஆகிப்போன அடிலெய்டில் இங்கிலாந்து நிச்சயம் பாஸ்பால் ஆடாவிட்டாலும் நின்று ஆடி ஒரு பெரிய ரன் இலக்கை எட்டுவார் என்று எதிர்பார்த்ததற்கு இணங்க பென் டக்கெட் 5 அபாரமான பவுண்டரிகளை அடித்தார். ஜாக் கிராலி 9 ரன்கள் எடுத்த நிலையில் கேப்டன் பாட் கமின்ஸின் அதியற்புதமான பந்துக்கு எட்ஜ் ஆகி கேரியிடம் கேட்ச் ஆகி ஆட்டமிழந்தார். பந்து காற்றில் ஒரு கோணத்தில் உள்ளே வந்து பிட்ச் ஆனவுடன் கிராலி அதை நேராக ஆடியே ஆக வேண்டும் ஆனால் ஆடினால் எட்ஜ் என்பது உறுதி. அதேநேரத்தில் அதை ஆடாமல் விட முடியாது, இத்தகைய இக்கட்டில் தள்ளினார் பாட் கமின்ஸ்.

    இதனையடுத்து 10-வது ஓவரிலேயே நேதன் லயனைக் கொண்டு வந்து மாஸ்டர் ஸ்ட்ரோக் அடித்தார் கேப்டன் பாட் கமின்ஸ். நேதன் லயன் பந்து ஆஃப் ஸ்டம்ப்புக்கு சற்று வெளியே ஃபுல் லெந்தில் வீச, ஆலி போப் அதை முன் காலினை முன்னால் குறுக்காகப் போட்டு தடுத்தாடியிருக்க வேண்டும். ஆனால் இவரெல்லாம் மாடர்ன் கிரிக்கெட்டர் ஆயிற்றே. மட்டையை நீட்டி பிளிக் ஆடி லெக் திசையில் ஆட முயன்றார். அங்கு ஏற்கெனவெ செட் செய்த இடத்தில் இங்லிஸ் நிற்க அவர் கையில் போய் உட்கார்ந்தது, மோசமான ஷாட் தேர்வு, பாட் கமின்ஸின் அதியற்புத கேப்டன்சி. கிளென் மெக்ராவின் 563 விக்கெட்டை சமன் செய்தார் நேதன் லயன்.

    அதே ஓவரில் பென் டக்கெட் பெரிய தவறு செய்தார். பந்து பிட்ச் ஆகித் திரும்பி ஆஃப் ஸ்டம்பைத் தாக்கியது. கிளீன் பவுல்டு, அற்புதமான பந்துதான், ஆஃப் ஸ்பின்னருக்குரிய கனவுப்பந்துதான், ஆனால் டெக்னிக் இல்லாததால்தான் டக்கெட் ஆட்டமிழந்தார், முன்னங்கால் நகரவே இல்லை. பந்தின் திசையைக் கணிக்காமல் காலை நகர்த்தாமல் ஆடப்போய் பீட்டன் ஆகி பவுல்டு ஆனார். கிளென் மெக்ரா வர்ணனை அறையில் துள்ளிக் குதித்தார், அவர் சாதனையைத்தான் லயன் முறியடித்து விட்டார்.

    கிளென் மெக்ரா 124 டெஸ்ட்களில் 563 விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருந்தார். இப்போது நேதன் லயன் தன் 141வது டெஸ்டில் அவரைக் கடந்து இதுவரை 564 விக்கெட்டுகளைக் கைப்பற்றி சாதனை படைத்தார்.

    ஆஸ்திரேலியா உணவு இடைவேளைக்குப் பிறகு ஜோ ரூட் விக்கெட்டையும் இழந்தது, இன்னொரு பாட் கமின்ஸின் அருமையான ஒர்க் அவுட் செய்த டெலிவரி, ரூட் எட்ஜ் செய்து கேரியிடம் கேட்ச் ஆகி வெளியேறினார். இங்கிலாந்து 6 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் என்று திணறி வருகிறது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஇந்தியா – ஓமன் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்: பிரதமர் மோடி முன்னிலையில் கையெழுத்து
    Next Article கான்வே, லேதம் அபார சதம் – வலுவான தொடக்கத்தில் நியூசிலாந்து!
    Editor TN Talks

    Related Posts

    ஆர்சிபி-யிடம் ஹாட்ரிக் தோல்வி!. இன்று பழிதீர்க்குமா சிஎஸ்கே?. ரசிகர்கள் எதிர்பார்ப்பு!

    April 5, 2026

    “ருதுராஜ் சொல்வதை ஏற்க முடியாது!” சிஎஸ்கே-வின் பலவீனம் குறித்து பேசிய அஸ்வின்!

    April 4, 2026

    எதிரணிகளை அலறவிட்ட சேப்பாக்கம்; ஆனா இப்போ… CSK-வின் தொடர் தோல்வியால் வேதனை!.

    April 4, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

     பாஜக-வின் அதிரடி பிரச்சாரம்!. நாளை ஒரே நாளில் 6 மத்திய அமைச்சர்கள் தமிழகம் வருகை!

    இலவச கார் பயணம், அல்வா, ரூ.1க்கு அரிசி மாவு!. தேர்தல் ஆணையத்தின்  கவர்ச்சி அறிவிப்புகள்!.

    மேலூர் தொகுதியில் விஸ்வநாதன் போட்டி!. காங்கிரஸ் அறிவிப்பு!

    ரூ.167 கோடிக்கு ஏலம் போன ஓவியம்!. புதிய உலக சாதனை!

    இந்தியத் திரையுலகை ஆளும் டாப் 6 ராணிகள்!. அசைக்க முடியாத முதலிடம்!. யார் தெரியுமா?

    Trending Posts

     பாஜக-வின் அதிரடி பிரச்சாரம்!. நாளை ஒரே நாளில் 6 மத்திய அமைச்சர்கள் தமிழகம் வருகை!

    April 5, 2026

    இந்தியத் திரையுலகை ஆளும் டாப் 6 ராணிகள்!. அசைக்க முடியாத முதலிடம்!. யார் தெரியுமா?

    April 5, 2026

    மேலூர் தொகுதியில் விஸ்வநாதன் போட்டி!. காங்கிரஸ் அறிவிப்பு!

    April 5, 2026

    ரூ.167 கோடிக்கு ஏலம் போன ஓவியம்!. புதிய உலக சாதனை!

    April 5, 2026

    “நாங்கள் அவரை மீட்டுவிட்டோம்”!. ஈரானால் வீழ்த்தப்பட்ட அமெரிக்க F-15 விமானத்தின் 2வது விமானி மீட்பு!. டிரம்ப் உறுதி!

    April 5, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.