பிரதமர் நரேந்திர மோடி, ஓமன் சுல்தான் ஹைதம் பின் தாரிக் முன்னிலையில், இந்தியா – ஓமன் இடையே ஒருங்கிணைந்த பொருளாதார கூட்டாண்மை ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக நேற்று ஓமன் சென்றிருந்தார். இந்நிலையில், இன்று இரு தலைவர்கள் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இதன்மூலம், ஓமனுக்கு இந்தியா ஏற்றுமதி செய்யும் பொருட்களில் 98.08% பொருட்களுக்கு இறக்குமதி வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. இதேபோல், இந்தியாவுக்கு ஒமன் ஏற்றுமதி செய்யும் பொருட்களில் 77.79% பொருட்களுக்கு வரி விலக்கு அளிக்கப்படுகிறது.
இந்தியாவும் ஓமனும் சிறப்புமிக்க ஒருங்கிணைந்த பொருளாதார கூட்டாண்மை ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதை உறுதி செய்த அவரது முயற்சிகளுக்கு நன்றி தெரிவித்தேன். இது இருதரப்பு ஒத்துழைப்பில் ஒரு புதிய மற்றும் பொன்னான அத்தியாயமாகும்.
இந்த ஒப்பந்தத்தில் இந்தியா சார்பில் கையெழுத்திட்ட வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‘‘இந்த ஒப்பந்தம் இந்தியாவுக்கு முன் எப்போதும் இல்லாத சந்தை அணுகலை வழங்குகிறது.
இந்த ஒப்பந்தம், ஓமனின் வரி விதிப்பு பிரிவுகளில் 98.08% பொருட்களுக்கு சுங்க வரி விலக்கை அளிக்கிறது. இது இந்தியாவின் ஏற்றுமதி மதிப்பில் 99.38% ஆகும்.
இது இந்தியாவின் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி போட்டித்தன்மையை வலுப்படுத்தும். அதேநேரத்தில், நமது விவசாயிகள் மற்றும் சிறு வணிகர்களின் நலன்களைப் பாதுகாப்பதற்காக இந்தியாவின் முக்கியத்துவம் வாய்ந்த துறைகளுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது’’ என தெரிவித்துள்ளார்.
