Close Menu
    What's Hot

    தமிழக தேர்தல் களம்!. 234 தொகுதிகளில் 4,051 வேட்பாளர்கள் போட்டி!. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

    ஊழல் புகாரில் சிக்கிய நீதிபதி யஷ்வந்த் வர்மா ராஜினாமா!. ஜனாதிபதிக்கு கடிதம்!

    குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.3000!. அமித் ஷா வாக்குறுதி!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»மதுரையில் பயங்கரம்… போலீஸ் நிலையத்தில் இளைஞர் தீக்குளித்து தற்கொலை
    தமிழ்நாடு

    மதுரையில் பயங்கரம்… போலீஸ் நிலையத்தில் இளைஞர் தீக்குளித்து தற்கொலை

    Editor TN TalksBy Editor TN TalksDecember 19, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    suiii
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    மதுரையில் பட்டதாரி இளைஞர் புறக்காவல் நிலையத்துக்குள் புகுந்து தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    மதுரை தல்லாகுளம் அவுட் போஸ்ட் அருகே சட்டம்- ஒழுங்கைப் பராமரிக்கும் வகையில் புறக்காவல் நிலையம் செயல்படுகிறது. இங்கு சுழற்சி முறையில் ஓரிரு போலீஸார் பணியில் இருப்பது வழக்கம். இந்நிலையில், அங்கு போலீஸார் யாரும் பணியில் இல்லை என்று கூறப்படுகிறது.  மாலை அவ்வழியாக ஆட்டோ ஓட்டிச் சென்ற ஒருவர் புறக்காவல் நிலையம் அருகே ஆட்டோவை நிறுத்திவிட்டு, திறந்து கிடந்த புறக்காவல் நிலையத்துக்குள் சென்றுள்ளார்.

    பின்னர், ஏற்கெனவே தயாராக எடுத்துச் சென்ற கேனில் இருந்த பெட்ரோலை தனது உடலில் ஊற்றி, தீ வைத்துக் கொண்டார். அவரது உடல் முழுவதும் தீ பரவி, புறக்காவல் நிலையத்துக்கு உள்ளேயே உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார். அவரது அலறல் சப்தத்தைக் கேட்டு பதறிப்போன வாகன ஓட்டிகளும், பேருந்துக்காக காத்திருந்த பயணிகளும் அங்கு சென்று, புறக்காவல் நிலையத்தில் இருந்த தண்ணீரை அவர் மீது ஊற்றி, தீயை அணைத்த னர். எனினும், பலத்த தீக்காய மடைந்திருந்த அவர், அந்த இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். உடலில் தீ வைக்கும்போது கோஷம் எழுப்பியது தெரிய வந்துள்ளது.

    இது தொடர்பாக தல்லாகுளம் போலீஸார் நடத்திய விசாரணையில், உயிரிழந்தவர் மதுரை நரிமேட்டைச் சேர்ந்த பெரியசாமி என்பவரது மகன் பூர்ணசந்திரன் (40) என்று தெரியவந்தது. எம்பிஏ பட்டதாரியான இவர், மருந்து விற்பனைப் பிரதிநிதியாக இருந்தார். மேலும், பகுதி நேரமாக பழங்கள் விற்றுள்ளார். திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்ற கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி அவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

    இதுகுறித்து போலீஸார் கூறும்போது, “உயிரிழந்தவர், இந்து அமைப்பு ஒன்றில் தீவிரமாகச் செயல்பட்டு வந்துள்ளார். திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்ற வலியுறுத்தி அண்மையில் வீடியோ வெளியிட்டுள்ளார். அந்தக் கோரிக்கையை வலியுறுத்தியே அவர் தீக்குளித்து உயிரிழந்தது தெரிய வந்துள்ளது. அவரது குடும்பத்தினரிடம் விசாரித்து வருகிறோம். மேலும், அவரது செல்போனையும் ஆய்வு செய்கிறோம்” என்றனர்.

    பூர்ணசந்திரன் தற்கொலை செய்வதற்கு முன்பு தனது செல்போனில் பேசிய ஒரு ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. அந்த ஆடியோவில் ‘‘திருப்பரங்குன்றம் முருகனின் முதல் படைவீடு. அங்கு தீபம் ஏற்றுவது மதுரை மக்களுக்குத்தான் பெருமை. உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டும், அதை நிறைவேற்ற அரசு மறுக்கிறது. அரசு ஏன் இதைத் தடுக்க நினைக்கிறது? முஸ்லிம்கள் யாரும் தீபம் ஏற்றுவதை தடுக்கவில்லை. என்னுடன் ஏராளமான முஸ்லிம் நண்பர்கள் படித்தனர்.

    மதுரை மக்களிடையே கலவரத்தைத் தூண்ட நினைக்கின்றனர். மன்னித்து விடுங்கள், ஓர் இந்துவாக தீபம் ஏற்றாமல் இருப்பது மன வருத்தத்தை அளிக்கிறது. கடவுள் இல்லை என்று கூறும் பெரியார் சிலை முன் தற்கொலை செய்துகொள்ளப் போகிறேன்.

    2026-ம் ஆண்டிலாவது தீபம் ஏற்ற வேண்டும். எனக்கு இனியா, சிவனேஷ் என்ற குழந்தைகள் உள்ளனர். மனைவி, குழந்தைகள் என்னை மன்னித்து விடுங்கள்’’ என்று கூறியுள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleடி20 தொடரை வெல்லுமா இந்திய அணி? இன்று கடைசிப் போட்டி
    Next Article தமிழ்நாட்டில் வரைவு வாக்காளர் பட்டியல் இன்று (டிச. 19) வெளியீடு!
    Editor TN Talks

    Related Posts

    தமிழக தேர்தல் களம்!. 234 தொகுதிகளில் 4,051 வேட்பாளர்கள் போட்டி!. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

    April 10, 2026

    திருட்டுத்தனமாக பார்க்காதீங்க!. ஜனநாயகன் லீக் விவகாரத்தில் சிவகார்த்திகேயன் கருத்து!

    April 10, 2026

    தவெக-வில் ஐக்கியமான ஜாபர் சாதிக்!. அரசியலில் புதிய திருப்பம்!. திமுகவுக்கு அதிர்ச்சி!

    April 10, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தமிழக தேர்தல் களம்!. 234 தொகுதிகளில் 4,051 வேட்பாளர்கள் போட்டி!. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

    ஊழல் புகாரில் சிக்கிய நீதிபதி யஷ்வந்த் வர்மா ராஜினாமா!. ஜனாதிபதிக்கு கடிதம்!

    குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.3000!. அமித் ஷா வாக்குறுதி!

    திருட்டுத்தனமாக பார்க்காதீங்க!. ஜனநாயகன் லீக் விவகாரத்தில் சிவகார்த்திகேயன் கருத்து!

    தவெக-வில் ஐக்கியமான ஜாபர் சாதிக்!. அரசியலில் புதிய திருப்பம்!. திமுகவுக்கு அதிர்ச்சி!

    Trending Posts

    தமிழக தேர்தல் களம்!. 234 தொகுதிகளில் 4,051 வேட்பாளர்கள் போட்டி!. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

    April 10, 2026

    ஜன நாயகன் படத்தை டவுன்லோட் செய்யாதீங்க!. படக்குழுவினர் கடும் எச்சரிக்கை!

    April 10, 2026

    வாக்கு வேட்டையில் முதல்வர் ஸ்டாலின்!. மெட்ரோ ரயிலில் பயணம் செய்து வாக்கு சேகரிப்பு!

    April 10, 2026

    ஊழல் புகாரில் சிக்கிய நீதிபதி யஷ்வந்த் வர்மா ராஜினாமா!. ஜனாதிபதிக்கு கடிதம்!

    April 10, 2026

    குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.3000!. அமித் ஷா வாக்குறுதி!

    April 10, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.