Close Menu
    What's Hot

    பழம்பெரும் பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!. திரையுலகினர் இரங்கல்!.

    “இரட்டை இலைக்கு வாக்களியுங்கள்”!. செங்கோட்டையன் பேச்சால் தவெக தொண்டர்கள் அதிர்ச்சி!

    ஸ்டாலின் டெல்டாகாரர் அல்ல.. உல்டாகாரர்!. எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!.

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டம், ரோடு ஷோ!. ஐகோர்ட் அதிரடி உத்தரவு!
    தமிழ்நாடு

    அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டம், ரோடு ஷோ!. ஐகோர்ட் அதிரடி உத்தரவு!

    Editor web3By Editor web3December 19, 2025Updated:December 19, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    highcourt
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழகத்தில் அரசியல் கட்சிகளின் பொதுக் கூட்டங்கள் மற்றும் ரோடு ஷோ–க்கள் தொடர்பான இறுதி வழிகாட்டு விதிமுறைகளை ஜனவரி 5 ம் தேதிக்குள் வெளியிட வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    கரூரில், செப்டம்பர் 27 ம் தேதி, த.வெ.க. தலைவர் விஜய் பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, 41 பேர் பலியாகினர். இந்த சம்பவத்தை தொடர்ந்து, தமிழகத்தில் அரசியல் கட்சி தலைவர்களின் ரோடு ஷோ நிகழ்ச்சிகளுக்கும், பொதுக்கூட்டங்களுக்கும் வழிகாட்டு விதிமுறைகள் வகுக்கக் கோரி, த.வெ.க, அதிமுக மற்றும் தேசிய மக்கள் சக்தி கட்சிகளும், மதுரையைச் சேர்ந்த திருக்குமரன், பிரகாஷ் உள்ளிட்ட தனிநபர்களும் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்குகளை தாக்கல் செய்திருந்தனர்.

    இந்த வழக்குகளை விசாரித்த தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், 23 அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள், 40க்கும் மேற்பட்ட பதிவு செய்யப்பட்ட கட்சிகளின் கருத்துக்களைப் பெற்று, பொதுக்கூட்டங்கள், ரோட் ேஷாக்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்து, நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது தமிழக அரசு. இந்த வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து அதிமுக, த.வெ.க. மற்றும் தேசிய மக்கள் சக்திக் கட்சி சார்பில் ஆலோசனைகளும் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. அரசியல் கட்சிகளின் ஆலோசனைகள் பரிசீலிக்கப்படும் என, அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

    வழக்கில் விசாரணை முடிவடைந்ததை தொடர்ந்து, தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்திருந்தது, தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு, இன்று தீர்ப்பளித்தது. அதில், ரோடு ஷோ-க்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வகுப்பது தொடர்பாக வழக்கு தாக்கல் செய்திருந்த கட்சிகள் சார்பில் ஏராளமான ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியது.

    இந்த ஆலோசனைகளை பரிசீலித்து, ஜனவரி 5 ம் தேதிக்குள் வழிகாட்டு நெறிமுறைகளை அறிவிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதன்பின், வழிகாட்டு நெறிமுறைகளில் ஏதேனும் ஆட்சேபங்கள் இருந்தால், அதுசம்பந்தமாக வழக்கு தாக்கல் செய்யலாம் எனவும் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleவங்கதேசத்தில் மீண்டும் வெடித்த வன்முறை!. இந்தியர்களுக்கு வார்னிங்!
    Next Article ரஷ்ய ராணுவத்தில் 26 இந்தியர்கள் கொல்லப்பட்டனர்!. மத்திய அரசு அதிர்ச்சி தகவல்!.
    Editor web3
    • Website

    Related Posts

    பழம்பெரும் பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!. திரையுலகினர் இரங்கல்!.

    April 12, 2026

    “இரட்டை இலைக்கு வாக்களியுங்கள்”!. செங்கோட்டையன் பேச்சால் தவெக தொண்டர்கள் அதிர்ச்சி!

    April 12, 2026

    ஸ்டாலின் டெல்டாகாரர் அல்ல.. உல்டாகாரர்!. எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!.

    April 12, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    பழம்பெரும் பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!. திரையுலகினர் இரங்கல்!.

    “இரட்டை இலைக்கு வாக்களியுங்கள்”!. செங்கோட்டையன் பேச்சால் தவெக தொண்டர்கள் அதிர்ச்சி!

    ஸ்டாலின் டெல்டாகாரர் அல்ல.. உல்டாகாரர்!. எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!.

    வேட்பாளர்கள் மீது அதிருப்தி?. வரும் 16-ல் விஜய் தலைமையில் ஆலோசனை கூட்டம்!. 

    தமிழக மீனவர்கள் சிறைபிடிப்பு!. இலங்கை கடற்படை அட்டுழியம்!

    Trending Posts

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.