Close Menu
    What's Hot

    ‘வீடு லீஸ்’ எனக்கூறி பல கோடி மோசடி!- போலீஸ் அலட்சியம் காட்டியதாக மக்கள் புகார்!

    இந்திய அணிக்கு எதிராக 2வது அதிவேக சதம்! ஆப்., வீரர் குர்பாஸ் புதிய சாதனை

    24 மணி நேரத்தில் அமெ. – ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம்!- பாகிஸ்தான் நம்பிக்கை

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»உலகம்»வங்கதேசத்தில் மீண்டும் வெடித்த வன்முறை!. இந்தியர்களுக்கு வார்னிங்!
    உலகம்

    வங்கதேசத்தில் மீண்டும் வெடித்த வன்முறை!. இந்தியர்களுக்கு வார்னிங்!

    Editor web3By Editor web3December 19, 2025Updated:December 19, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Bangladesh violence
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ஷெரீஃப் உஸ்மான் ஹாடி உயிரிழப்பை தொடந்து வங்கதேசத்தில் மீண்டும் கலவரம் வெடித்துள்ள நிலையில், இந்தியர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை பதவியில் இருந்து வீழ்த்திய இளைஞர் இயக்கத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ஷெரீப் உஸ்மான் ஹாடி (Sharif Osman Hadi) கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, பங்களாதேஷில் மீண்டும் வன்முறைச் சூழல் உருவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. கடந்த வாரம் டாக்காவில் உள்ள மசூதி ஒன்றிலிருந்து வெளியே வந்தபோது, அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரிகளின் தாக்குதலுக்கு ஹாடி இலக்காகியிருந்தார்.

    இதில் படுகாயமடைந்த அவர், சிங்கப்பூரில் உள்ள வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று (18) உயிரிழந்தார். 2024 போராட்டத்திற்குப் பின்னர் பங்களாதேஷ் தேர்தலுக்கான திகதியை அறிவித்த மறுநாளே இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. அவர் அத்தேர்தலில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடத் தீர்மானித்திருந்ததாகக் கூறப்படுகிறது.

    அவரது மரணச் செய்தி வெளியானதும், நூற்றுக்கணக்கான ஆதரவாளர்கள் தலைநகர் டாக்காவில் திரண்டு போராட்டங்களை ஆரம்பித்துள்ளனர். பின்னர் அவர்கள் பங்களாதேஷின் பிரதான பத்திரிகைகளான ‘தி டெய்லி ஸ்டார்’ (The Daily Star) மற்றும் ‘ப்ரோதோம் ஆலோ’ அலுவலகங்களுக்குக் கடுமையான சேதம் விளைவித்ததுடன், ஒரு கட்டிடத்திற்குத் தீயிட்டுள்ளனர்.

    இதனை தொடர்ந்து வங்கதேசத்தில் மீண்டும் வன்முறை வெடித்துள்ளதால், அங்குள்ள இந்தியர்கள் தேவையின்றி வெளியே அருவதை தவிர்க்கவும், பயணங்களை குறைத்துக்கொள்ளவும் டாக்காவில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. அவசர தேவைக்கு 01814654797 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. வங்கதேசத்தில் பதற்றம் நீடிப்பதால் காவல்துறையினரும், ராணுவத்தினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமுடிவுக்கு வந்த தந்தை-மகன் மோதல்!. அதிமுக கூட்டணியில் இணைய சம்மதம்?. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
    Next Article அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டம், ரோடு ஷோ!. ஐகோர்ட் அதிரடி உத்தரவு!
    Editor web3
    • Website

    Related Posts

    ‘வீடு லீஸ்’ எனக்கூறி பல கோடி மோசடி!- போலீஸ் அலட்சியம் காட்டியதாக மக்கள் புகார்!

    June 13, 2026

    24 மணி நேரத்தில் அமெ. – ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம்!- பாகிஸ்தான் நம்பிக்கை

    June 13, 2026

    கொளுத்தும் வெயில்: தமிழகத்தின் 7 இடங்களில் சதமடித்த வெப்பநிலை!

    June 13, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ‘வீடு லீஸ்’ எனக்கூறி பல கோடி மோசடி!- போலீஸ் அலட்சியம் காட்டியதாக மக்கள் புகார்!

    இந்திய அணிக்கு எதிராக 2வது அதிவேக சதம்! ஆப்., வீரர் குர்பாஸ் புதிய சாதனை

    24 மணி நேரத்தில் அமெ. – ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம்!- பாகிஸ்தான் நம்பிக்கை

    நடிகர் ஜீவாவின் புதிய பட அப்டேட்!

    ‘எல்லாம் இனிதே’!- ‘சேயோன்’ புதிய புகைப்படம் வெளியீடு!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.