Close Menu
    What's Hot

    பிரதமர் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி நன்றி – ஏன்?

    அச்சுறுத்தும் வெறிநாய்கள்!. தூய்மைப் பணியாளர் உட்பட 18 பேரை கடித்து குதறியதால் அச்சம்!

    தமிழகமே அதிர்ச்சி!. பட்டப்பகலில் 2 இளைஞர்கள் கொடூரமாக வெட்டிக்கொலை!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»அரசியல்»ஜி.கே. மணிக்கு அன்புமணி தரப்பு நோட்டீஸ்… பாமகவிலிருந்து நீக்கத் திட்டம்?
    அரசியல்

    ஜி.கே. மணிக்கு அன்புமணி தரப்பு நோட்டீஸ்… பாமகவிலிருந்து நீக்கத் திட்டம்?

    Editor TN TalksBy Editor TN TalksDecember 19, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    GK Mani
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாகக் கூறி, விளக்கம் கேட்டு ஜி.கே. மணிக்கு அன்புமணி தரப்பு பாமக விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

    இதுகுறித்து பாமக தலைமை நிலையத்தில் இருந்து அனுப்பப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

    பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த பென்னாகரம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் திரு. ஜி.கே.மணி அவர்கள் தொடர்ந்து பாட்டாளி மக்கள் கட்சியின் நலனுக்கும், கட்சித் தலைமைக்கும் எதிராக செயல்பட்டு வருகிறார். அவரது அண்மைக்கால செயல்பாடுகள் எல்லைக் கடந்தவையாக இருப்பதால், அதற்காக அவர் மீது கட்சியின் அமைப்பு விதி 30&இன்படி நடவடிக்கை எடுப்பது குறித்து பாட்டாளி மக்கள் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு சென்னையில் கடந்த புதன் கிழமை கூடி விவாதித்தது. அப்போது ஜி.கே.மணி  அவர்களின் கீழ்க்கண்ட இரு கட்சி விரோத நடவடிக்கைகள் குறித்து அவரிடம் விளக்கம் கேட்க தீர்மானிக்கப்பட்டது.

    1. பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் மீது பொய்யான குற்றச்சாட்டுகளையும், அவதூறுகளையும் கூறி, அவற்றின் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கடந்த திசம்பர்  6&ஆம் தேதி தில்லி காவல்துறை துணை ஆணையரிடம் புகார் அளித்தது மற்றும் நேர்காணல் அளித்தது.

    2.    பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் மீது அவதூறு பரப்பும் வகையில் கடந்த 15-ம் தேதி சென்னையில் செய்தியாளர்களுக்கு நேர்காணல் அளித்தது.

    மேற்கண்ட இரு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் பாட்டாளி மக்கள் கட்சியின் அடிப்படை உறுப்பினரில்  இருந்து ஏன் நீக்கக்கூடாது? என்பது குறித்து ஒரு வாரத்திற்குள் விளக்கம் அளிக்கும்படி ஜி.கே.மணி அவர்களுக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழுவால் அறிவிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

    இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    பாமக தலைவர் பதவி தொடர்பாக அன்புமணி, ராமதாஸ் இடையே கருத்து வேறுபாடு நிலவுகிறது. இதில் ராமதாஸூக்கு ஜிகே மணி ஆதரவு அளித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபுதிதாக திறக்கப்படும் பேருந்து நிலையங்களுக்கு மன்னர்கள் பெயரை சூட்ட வேண்டும்… ராமதாஸ் வலியுறுத்தல்
    Next Article எந்த அரசியல் தலைவர்களும் கிட்டக்கூட நெருங்க முடியவில்லை!. டாப்பில் பிரதமர் மோடி!
    Editor TN Talks

    Related Posts

    பிரதமர் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி நன்றி – ஏன்?

    May 17, 2026

    முள்ளிவாய்க்கால் பேரவலத்துக்கு இவர்கள்தான் காரணம் –வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன்

    May 17, 2026

    எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெக தரப்பில் நிற்கத் தயாரா? – எஸ்.பி.வேலுமணிக்கு கேள்வி

    May 17, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    பிரதமர் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி நன்றி – ஏன்?

    அச்சுறுத்தும் வெறிநாய்கள்!. தூய்மைப் பணியாளர் உட்பட 18 பேரை கடித்து குதறியதால் அச்சம்!

    தமிழகமே அதிர்ச்சி!. பட்டப்பகலில் 2 இளைஞர்கள் கொடூரமாக வெட்டிக்கொலை!

    முள்ளிவாய்க்கால் பேரவலத்துக்கு இவர்கள்தான் காரணம் –வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன்

    திருச்செந்தூரில் அதிர்ச்சி!. திடீரென 80 அடி தூரம் உள்வாங்கிய கடல்!. பக்தர்கள் அச்சம்!

    Trending Posts

     புதுச்சேரி : இருசக்கர வாகனத்தில் மோதிய அரசுப் பேருந்து..! ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி..!

    May 17, 2026

    அச்சுறுத்தும் வெறிநாய்கள்!. தூய்மைப் பணியாளர் உட்பட 18 பேரை கடித்து குதறியதால் அச்சம்!

    May 17, 2026

    தவெக அமைச்சரவையில் காங்கிரஸுக்கு 2 இடங்கள்?. வெளியான தகவல்!

    May 17, 2026

    பிரதமர் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி நன்றி – ஏன்?

    May 17, 2026

    தமிழகமே அதிர்ச்சி!. பட்டப்பகலில் 2 இளைஞர்கள் கொடூரமாக வெட்டிக்கொலை!

    May 17, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.