Close Menu
    What's Hot

    அருவியில் மூழ்கி 4 இளைஞர்கள் உயிரிழப்பு!. ஒட்டன்சத்திரத்தில் சோகம்!. 

    ஆன்லைனில் பிரசாரம்! விஜய் போடும் வியூகம்?

    பிரச்சாரத்திற்கு சென்ற விஜய்!. கார் மீது தொண்டர்கள் ஏறியதால் பரபரப்பு!.

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»அரசியல்»செவிலியர்கள் போராட்டத்திற்கு காரணமே ஜெயலலிதா அரசுதான் – மா.சுப்பிரமணியன் குற்றச்சாட்டு
    அரசியல்

    செவிலியர்கள் போராட்டத்திற்கு காரணமே ஜெயலலிதா அரசுதான் – மா.சுப்பிரமணியன் குற்றச்சாட்டு

    Editor TN TalksBy Editor TN TalksDecember 20, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Minister Ma Subramanian
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    செவிலியர்கள் போராட்டத்திற்கு காரணமே ஜெயலலிதா அரசு தான் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

    சென்னை சைதாப்பேட்டை காரணீஸ்வரர் கோயில் அருகே நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாமை அமைச்சர் மா‌.சுப்பிரமணியன் இன்று தொடங்கி வைத்து செய்தியாளர்களை சந்தித்தார்.

    அப்போது அவர் பேசுகையில், “தமிழ்நாடு முழுவதும் ‘நலன் காக்கும் ஸ்டாலின்’ என்ற திட்டத்தை அண்மையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 11,42,055 பொதுமக்கள் ‘நலன் காக்கும் ஸ்டாலின்’ திட்டத்தின் கீழ் பயன் அடைந்துள்ளனர்.

    எஸ்.ஐ.ஆர். பணி தொடங்கப்பட்டதற்கு முன்பே, இந்தியா கூட்டணி கடுமையாக எதிர்த்தது. நாங்களும் நீதிமன்றத்தை நாடியுள்ளோம். குறுகிய கால இடைவெளியில் இது நடைபெற்றுள்ளது. திமுகவை பொறுத்தவரை இந்த விவகாரத்தில் ஜனநாயகத்தை முழுவதும் கடைபிடித்தது.

    சோழிங்கநல்லூரில் மட்டும் 2.50 லட்சம் வாக்குகள் நீக்கப்பட்டுள்ளன. சைதாப்பேட்டையில் 12 ஆயிரம் வாக்குகள் ஆவணங்கள் இல்லை என நிராகரிக்கப்பட்டுள்ளன” என்றார்.

    மேலும், தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று வரும் செவிலியர்கள் போராட்டம் தொடர்பாக செய்தியாளர்கள் கேட்டதற்கு பதில் அளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், “ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது தான் ஒப்பந்த செவிலியர் பணியிடம் என்பது உருவாக்கப்பட்டது. இன்று எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் அறிக்கை விடுவது ஒரு மாதிரி உள்ளது. இந்த பிரச்சனைக்கு காரணமே அதிமுக தான். 3,783 ஒப்பந்த செவிலியர்கள் இந்த அரசு வந்த பிறகு பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களது கோரிக்கை இன்னும் கூடுதல் காலி பணியிடங்களை உருவாக்க வேண்டும் என்பது தான்” என்றார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleககன்யான் திட்டத்தின் பாராசூட் சோதனை வெற்றி: இஸ்ரோ
    Next Article பதவி ஆசை துளியும் கிடையாது… திருமாவளவன் பரபரப்பு பேச்சு
    Editor TN Talks

    Related Posts

    திருச்சி கிழக்கில் வேட்பு மனு தாக்குதல் செய்தார் தவெக தலைவர் விஜய்..!

    April 2, 2026

    பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியிடுவதில் ஏன் தாமதம்?

    April 2, 2026

    திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் விவரம்!

    March 28, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    அருவியில் மூழ்கி 4 இளைஞர்கள் உயிரிழப்பு!. ஒட்டன்சத்திரத்தில் சோகம்!. 

    ஆன்லைனில் பிரசாரம்! விஜய் போடும் வியூகம்?

    பிரச்சாரத்திற்கு சென்ற விஜய்!. கார் மீது தொண்டர்கள் ஏறியதால் பரபரப்பு!.

    ஹார்முஸ் அருகே அமெரிக்க போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய ஈரான்!. பகீர் வீடியோ!

    ஆப்கானிஸ்தான் நிலநடுக்கத்தில் 8 பேர் பலி!. டெல்லி வரை குலுங்கிய பூமி!. மக்கள் பீதி!.

    Trending Posts

    தங்கம் விலை அதிரடி உயர்வு!. ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?

    April 4, 2026

    அருவியில் மூழ்கி 4 இளைஞர்கள் உயிரிழப்பு!. ஒட்டன்சத்திரத்தில் சோகம்!. 

    April 4, 2026

    ஆன்லைனில் பிரசாரம்! விஜய் போடும் வியூகம்?

    April 4, 2026

    பிரச்சாரத்திற்கு சென்ற விஜய்!. கார் மீது தொண்டர்கள் ஏறியதால் பரபரப்பு!.

    April 4, 2026

    ஹார்முஸ் அருகே அமெரிக்க போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய ஈரான்!. பகீர் வீடியோ!

    April 4, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.