Close Menu
    What's Hot

    ரிலீஸாகுமா ஜனநாயகன்?. தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் விளக்கம்!

    காரைக்குடியில் பேசாமல் சென்ற விஜய்!. என்ன காரணம்?.

    தமிழக தேர்தல் களம்!. 234 தொகுதிகளில் 4,051 வேட்பாளர்கள் போட்டி!. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»ராசிபலன்»இன்றைய ராசிபலன் @ 21 டிசம்பர் 2025
    ராசிபலன்

    இன்றைய ராசிபலன் @ 21 டிசம்பர் 2025

    Editor TN TalksBy Editor TN TalksDecember 21, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    vaikasi month rasipalan 2025 1747233709496
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    மேஷம்: நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த பணம் கைக்கு வரும். சொன்ன சொல்லைக் காப்பாற்ற துடிப்புடன் செயல்படுவீர்கள். பொறுப்புகள், பதவிகள் தேடி வரும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். வெளிவட்டாரத்தில் உங்கள் வார்த்தைக்கு மரியாதை கூடும்.

    ரிஷபம்: எதிர்ப்புகள், சவால்களைத் தாண்டி முன்னேறுவீர்கள். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் திட்டமிட்டதை விட அதிகரிக்கும். புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள். நவீன மின்சாதனங்கள் வாங்குவீர்கள். வெளியூர் பயணத்தால் அனுகூலம் உண்டு.

    மிதுனம்: எதிர்பாராத செலவுகளால் கையிருப்பு கரையும். குடும்பத்தாருடன் விட்டுக்கொடுத்து செல்லுங்கள். வீண் அலைச்சலும் டென்ஷனும் ஏற்படக் கூடும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவுடன் நடந்து கொள்ளுங்கள். பால்ய நண்பரை சந்திப்பீர்கள்.

    கடகம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார்கள். உறவினர்களின் வருகையால் வீடு களைகட்டும். வாகனப் பராமரிப்பை மேற்கொள்வீர்கள். குடும்பத்துடன் வெளியூர் பயணம் செல்ல திட்டமிடுவீர்கள்.

    சிம்மம்: கணவன் – மனைவிக்குள் இருந்த ஈகோ பிரச்சினை, வீண் சந்தேகம் விலகும். புது பொறுப்புகளும், பதவிகளும் தேடி வரும். உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களால் சில காரியங்கள் நிறைவேறும். கலைப்பொருட்கள் சேரும்.

    கன்னி: குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். வியாபாரத்தில் போட்டிகளை சாமர்த்தியமாக எதிர்கொள்வீர்கள். ஆன்மிகக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். தாயார் ஆதரவாக இருப்பார்.

    துலாம்: உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். கணவன் – மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். அரசால் அனுகூலம் உண்டு. பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். நீண்டகாலப் பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காண்பீர்கள்.

    விருச்சிகம்: வியாபாரத்தை விரிவுபடுத்த முயற்சிகளை மேற்கொள்வீர்கள். குடும்பத்தினருடன் ஆரோக்கியமான விவாதங்கள் வந்து போகும். வீடு, வாகனத்தை சீர்செய்வீர்கள். விலகியிருந்த சொந்தபந்தங்கள் தேடி வருவார்கள். பணவரவு திருப்தி தரும்.

    தனுசு: குடும்பத்தில் ஒருவருக்கொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. கணவன் – மனைவிக்குள் மனஸ்தாபம் வந்து நீங்கும். எதற்கெடுத்தாலும் அடுத்தவர்களை குறைகூறுவதை நிறுத்துங்கள். தானுண்டு தன் வேலையுண்டு என்று இருப்பது நல்லது.

    மகரம்: புதிய முயற்சிகள் வெற்றியடையும். வீட்டில் மகிழ்ச்சிகரமான சூழல் காணப்படும். உறவினர். நண்பர்கள் மத்தியில் செல்வாக்குக் கூடும். விஐபிகள் அறிமுகமாவார்கள். மனைவிவழி உறவினர்கள் உங்கள் உதவியை நாடுவார்கள். வெளியூர் பயணம் உண்டு.

    கும்பம்: பளிச்சென்று பேசி எல்லோரையும் கவருவீர்கள். கணவன் – மனைவிக்குள் இருந்துவந்த கருத்துவேறுபாடுகள் முடிவுக்கு வரும். வருங்காலத்துக்கான முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து ஆலோசிப்பீர்கள்.

    மீனம்: குடும்பத்தில் எல்லோரையும் அனுசரித்துச் செல்லுங்கள். வீண் செலவுகளை குறைப்பது நல்லது. பிள்ளைகளால் பெருமையுண்டு. பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயம் உண்டு. குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஆஷஸ் தொடரை கைப்பற்றியது ஆஸ்திரேலியா… அடிலெய்டு டெஸ்டிலும் வெற்றி
    Next Article ஜோதிட நாள்காட்டி 21.12.2025 | மார்கழி 06
    Editor TN Talks

    Related Posts

    ஜென்ம நட்சத்திர பலன்கள் – டிசம்பர் 31 – 2025 புதன்கிழமை.

    December 31, 2025

    ஜோதிட நாள்காட்டி 31.12.2025 | மார்கழி 16

    December 31, 2025

    12 ராசிகளுக்கான ராசிபலன்கள் ! இன்று உங்களுக்கு நாள் எப்படி?

    December 31, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ரிலீஸாகுமா ஜனநாயகன்?. தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் விளக்கம்!

    காரைக்குடியில் பேசாமல் சென்ற விஜய்!. என்ன காரணம்?.

    தமிழக தேர்தல் களம்!. 234 தொகுதிகளில் 4,051 வேட்பாளர்கள் போட்டி!. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

    ஊழல் புகாரில் சிக்கிய நீதிபதி யஷ்வந்த் வர்மா ராஜினாமா!. ஜனாதிபதிக்கு கடிதம்!

    குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.3000!. அமித் ஷா வாக்குறுதி!

    Trending Posts

    ரிலீஸாகுமா ஜனநாயகன்?. தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் விளக்கம்!

    April 10, 2026

    காரைக்குடியில் பேசாமல் சென்ற விஜய்!. என்ன காரணம்?.

    April 10, 2026

    தமிழக தேர்தல் களம்!. 234 தொகுதிகளில் 4,051 வேட்பாளர்கள் போட்டி!. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

    April 10, 2026

    ஊழல் புகாரில் சிக்கிய நீதிபதி யஷ்வந்த் வர்மா ராஜினாமா!. ஜனாதிபதிக்கு கடிதம்!

    April 10, 2026

    குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.3000!. அமித் ஷா வாக்குறுதி!

    April 10, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.