Close Menu
    What's Hot

    தமிழ் இலக்கிய உலகின் முதுபெரும் கவிஞர் புவியரசு மறைவு..!! முதலமைச்சர் விஜய் இரங்கல்..!!

    பாஸ்போர்ட் எடுக்கப் போகிறீர்களா..?? இன்று முதல் அமலுக்கு வந்த புதிய கட்டணம்.. விவரம் இதோ!

    அரியானா : ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன்..! 21 மணி நேர போராட்டம்..! சடலமாக மீட்பு..!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»விளையாட்டு»ஆஷஸ் தொடரை கைப்பற்றியது ஆஸ்திரேலியா… அடிலெய்டு டெஸ்டிலும் வெற்றி
    விளையாட்டு

    ஆஷஸ் தொடரை கைப்பற்றியது ஆஸ்திரேலியா… அடிலெய்டு டெஸ்டிலும் வெற்றி

    Editor TN TalksBy Editor TN TalksDecember 21, 2025No Comments3 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    ashess
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    இங்கிலாந்து அணிக்கு அணிக்கு எதி​ரான ஆஷஸ் கிரிக்​கெட் தொடரின் 3-வது டெஸ்ட் போட்​டி​யில் ஆஸ்திரேலிய அணி 82 ரன்களில் வெற்றி பெற்றது. இதன் மூலம் ஆஷஸ் தொடரை ஆஸ்திரேலியா தன்வசம் தக்கவைத்துள்ளது. 5 போட்டிகள் கொண்ட தொடறில் 3-0 என்ற கணக்கில் அந்த அணி முன்னிலையில் உள்ளது.

    அடிலெய்​டில் நடை​பெற்ற நடப்பு ஆஷஸ் தொடரின் 3-வது டெஸ்ட் போட்​டி​யில் ஆஸ்​திரேலிய அணி முதல் இன்​னிங்​ஸில் 371 ரன்​கள் குவித்​தது. அதி​கபட்​ச​மாக அலெக்ஸ் கேரி 109, உஸ்​மான் கவாஜா 82, மிட்​செல் ஸ்டார்க் 54 ரன்​கள் சேர்த்​தனர். இங்​கிலாந்து அணி முதல் இன்​னிங்​ஸில் 87.2 ஓவர்​களில் 286 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்​தது. அதி​கபட்​ச​மாக பென் ஸ்டோக்ஸ் 83, ஜோப்ரா ஆர்ச்​சர் 51 ரன்​கள் சேர்த்​தனர்.

    85 ரன்​கள் முன்​னிலை​யுடன் 2-வது இன்​னிங்ஸை விளை​யாடிய ஆஸ்​திரேலிய அணி 3-வது நாள் ஆட்​டத்​தின் முடி​வில் 66 ஓவர்​களில் 4 விக்​கெட்​கள் இழப்​புக்கு 271 ரன்​கள் எடுத்​தது. ஜேக் வெத​ரால்டு 1, மார்​னஷ் லபுஷேன் 13, உஸ்​மான் கவாஜா 40, கேமரூன் கிரீன் 7 ரன்​களில் ஆட்​ட​மிழந்​தனர். டிரா​விஸ் ஹெட் 142, அலெக்ஸ் கேரி 52 ரன்​களு​டன் ஆட்​ட​மிழக்​காமல் இருந்​தனர்.

    நேற்று 4-வது நாள் ஆட்​டத்தை தொடர்ந்து விளை​யாடிய ஆஸ்​திரேலிய அணி 84.4 ஓவர்​களில் 349 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்​தது. டிரா​விஸ் ஹெட் 219 பந்​துகளில், 2 சிக்​ஸர்​கள், 16 பவுண்​டரி​களு​டன் 170 ரன்​கள் விளாசிய நிலை​யில் ஜோஷ் டங் பந்​தில் அவுட் ஆனார். அலெக்ஸ் கேரி 128 பந்​துகளில், 6 பவுண்​டரி​களு​டன் 72 ரன்​கள் எடுத்த நிலை​யில் பென் ஸ்டோக்ஸ் பந்​தில் வெளி​யேறி​னார். ஜோஷ் இங்​லிஷ் 10, கேப்​டன் பாட் கம்​மின்ஸ் 6, நேதன் லயன் 0, ஸ்காட் போலண்ட் 1 ரன்​களில் நடையை கட்​டினர். இங்​கிலாந்து அணி சார்​பில் ஜோஷ் டங் 4 விக்​கெட்​களை​யும், பிரைடன் கார்ஸ் 3 விக்​கெட்​களை​யும் வீழ்த்​தினர். ஜோப்ரா ஆர்ச்​சர், பென் ஸ்டோக்​ஸ், வில் ஜேக்ஸ் ஆகியோர் தலா ஒரு விக்​கெட் கைப்​பற்​றினர்.

    இதையடுத்து 435 ரன்​கள் இலக்​குடன் பேட் செய்த இங்​கிலாந்து அணி 31 ரன்​களுக்கு 2 விக்​கெட்​களை பறி​கொடுத்​தது. பென் டக்​கெட் 4, ஆலி போப் 17 ரன்​களில் பாட் கம்​மின்ஸ் பந்​தில் ஆட்​ட​மிழந்​தார். 3-வது விக்​கெட்​டுக்கு ஸாக் கிராவ்​லி​யுடன் இணைந்த ஜோ ரூட் பார்ட்​னர்​ஷிப்பை கட்​டமைக்க முயன்​றார். 78 ரன்​கள் சேர்த்த இந்த ஜோடியை பாட் கம்​மின்ஸ் பிரித்​தார்.

    ஜோ ரூட் 63 பந்​துகளில், 5 பவுண்​டரி​களு​டன் 39 ரன்​கள் எடுத்த நிலை​யில் பாட் கம்​மின்ஸ் பந்​தில் வெளி​யேறி​னார். இதையடுத்து களமிறங்​கிய ஹாரி புரூக் 56 பந்​துகளில், 2 பவுண்​டரி​களு​டன் 30 ரன்​கள் எடுத்த நிலை​யில் நேதன் லயன் பந்​தில் போல்​டா​னார். இதன் பின்​னர் களமிறங்​கிய பென் ஸ்டோக்ஸ் 18 பந்​துகளில் 5 ரன்​கள் எடுத்த நிலை​யில் நேதன் லயன் பந்​தில் ஸ்டெம்பை பறி​கொடுத்​தார்.

    தனது 21-வது அரை சதத்தை கடந்த ஸாக் கிராவ்லி 151 பந்​துகளில், 8 பவுண்​டரி​களு​டன் 85 ரன்​கள் எடுத்த நிலை​யில் நேதன் லயன் பந்​தில் ஸ்டெம்​பிங் ஆனார். நேற்​றைய 4-வது நாள் ஆட்​டத்​தின் முடி​வில் இங்​கிலாந்து அணி 63 ஓவர்​களில் 6 விக்​கெட்​கள் இழப்​புக்கு 207 ரன்​கள் எடுத்​தது. ஜேமி ஸ்மித் 2, வில் ஜேக்ஸ் 11 ரன்​களு​டன் களத்​தில் இருந்​தனர்.

    ஆஸ்​திரேலிய அணி தரப்​பில் பாட் கம்​மின்​ஸ், நேதன் லயன் ஆகியோர் தலா 3 விக்​கெட்​கள் வீழ்த்​தினர். கைவசம் 4 விக்​கெட்​கள் இருக்க வெற்​றிக்கு மேற்​கொண்டு 228 ரன்​கள் தேவை என்ற நிலை​யில் இங்​கிலாந்து அணி இன்​று கடைசி நாள்​ ஆட்​டத்​தை எதிர்கொண்டது.

    கடைசி நாள் ஆட்டம் மூன்று செஷன் வரை நீடித்தது. வில் ஜேக்ஸ் மற்றும் ஜேமி ஸ்மித் இணைந்து 91 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். ஜேமி ஸ்மித், 83 பந்துகளில் 60 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அது ஆட்டத்தில் திருப்புமுனையாக அமைந்தது.

    தொடர்ந்து வில் ஜேக்ஸ், ஆர்ச்சர், டங்க் ஆகியோர் ஆட்டமிழந்தனர். வில் ஜேக்ஸ் 47 ரன்களில் விக்கெட்டை இழந்தார். 102.5 ஓவர்களில் 352 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது இங்கிலாந்து. இதன் மூலம் 82 ரன்களில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. ஆட்ட நாயகன் விருதை அலெக்ஸ் கேரி வென்றார். இந்த தொடரின் அடுத்த போட்டி வரும் 26-ம் தேதி தொடங்குகிறது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதிமுகவுடன் மோதினால் எதிரிக்குதான் சேதாரம்!. ஆர்.எஸ். பாரதி சாடல்!
    Next Article இன்றைய ராசிபலன் @ 21 டிசம்பர் 2025
    Editor TN Talks

    Related Posts

    FIFA World Cup 2026: ஸ்வீடனை 3-0 கணக்கில் துவம்சமாக்கியது பிரான்ஸ் அணி..!!

    July 1, 2026

    FIFA World Cup 2026: 2-1 கணக்கில் நார்வே அணி அபார வெற்றி..!! ஐவரி கோஸ்டை வீழ்த்திய ஹாலேண்ட் படை..!!

    July 1, 2026

    இங்கிலாந்துக்கு எதிரான T20 தொடர்!. சஞ்சு சாம்சன் vs சூர்யவன்ஷி!. யாருக்கு வாய்ப்பு?

    June 30, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தமிழ் இலக்கிய உலகின் முதுபெரும் கவிஞர் புவியரசு மறைவு..!! முதலமைச்சர் விஜய் இரங்கல்..!!

    பாஸ்போர்ட் எடுக்கப் போகிறீர்களா..?? இன்று முதல் அமலுக்கு வந்த புதிய கட்டணம்.. விவரம் இதோ!

    அரியானா : ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன்..! 21 மணி நேர போராட்டம்..! சடலமாக மீட்பு..!

    தொடரும் சோகம்..!! அமோனியா வாயு கசிவு – பலி எண்ணிக்கை 17 ஆக உயர்வு..!!

    பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் இடையே பதற்றம் உச்சம்..!! தொடரும் டிரோன் அட்டாக்..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.