Close Menu
    What's Hot

    ஜூலை 12ம் தேதி ‘We the leaders’-ன் முதல் மாநாடு..!! அண்ணாமலை அதிரடி அறிவிப்பு..!!

    இனி தவெக தான்..! அனைத்து தேர்தல்களிலும் வெற்றி பெறும்..! சி.விஜயபாஸ்கர் பேச்சு..!

    அரசியல் அரங்கில் அதிரடி எழுச்சி..!! சரித்திரம் படைத்தார் CM விஜய்..!! எம்.ஆர்.விஜயபாஸ்கர் புகழாரம்..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»சினிமா»‘பராசக்தி’ ரிலீஸ் தேதி மாற்றம்? பொங்கலுக்கு வெளியீடு இல்லை
    சினிமா

    ‘பராசக்தி’ ரிலீஸ் தேதி மாற்றம்? பொங்கலுக்கு வெளியீடு இல்லை

    Editor TN TalksBy Editor TN TalksDecember 21, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Parasakthi 1
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘பராசக்தி’ படத்தின் வெளியீட்டுத் தேதியில் மாற்றம் இருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

    சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பராசக்தி’. ஜனவரி 14-ம் தேதி வெளியாகும் என விளம்பரப்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், இதில் மாற்றம் இருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. வெளிநாடுகளில் திரையரங்குகளில் கிடைப்பதில் சிரமம் மற்றும் தெலுங்கில் பல்வேறு படங்கள் வெளியீடு உள்ளிட்டவற்றை கணக்கில் கொண்டு ஜனவரி 10-ம் தேதி ‘பராசக்தி’ படத்தை வெளியிட பேச்சுவார்த்தைகள் தொடங்கப்பட்டுள்ளன.

    தமிழகத்தில் ஜனவரி 10-ம் தேதி ‘பராசக்தி’ வெளியானால் திரையரங்குகள் பிடிப்பதில் கடும் போட்டி இருக்கும். ஏனென்றால் ஜனவரி 9-ம் தேதி விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ வெளியாகவுள்ளது.

    இந்த குழப்பங்கள் இருப்பதால் ‘பராசக்தி’ படத்தின் வெளியீட்டு தேதி என்ன என்பது விரைவில் தெரியவரும். இப்போது வரை ஜனவரி 14-ம் தேதி வெளியீடு என்பது உறுதியாகி இருக்கிறது. ஆனால், அதில் மாற்றங்கள் இருப்பதற்கும் வாய்ப்பு இருக்கிறது.

    சுதா கொங்கரா இயக்கத்தில் ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா, பாசில் ஜோசப் உள்ளிட்ட பலர் சிவகார்த்திகேயன் உடன் நடித்துள்ள படம் ‘பராசக்தி’. டான் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்துக்கு ஒளிப்பதிவாளராக ரவி கே.சந்திரன், இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர். தமிழகத்தில் இப்படத்தினை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடவுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஜோதிட நாள்காட்டி 21.12.2025 | மார்கழி 06
    Next Article “முட்டை சாப்பிடுவதால் புற்றுநோய் வராது” – வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த FSSAI!
    Editor TN Talks

    Related Posts

    இந்த மாதம் வெளியாகிறதா ‘ஜனநாயகன்’? வைரலாகும் பரபரப்பு தகவல்..!!

    July 2, 2026

    வசூல் வேட்டை!. அருந்ததி சாதனையை முறியடித்த சமந்தாவின் ‘மா இண்டி பங்காரம்’ திரைப்படம்!

    July 1, 2026

    யஷ்-இன் ‘டாக்ஸிக்’ நாயகிகள் டீசர் வெளியீடு!. மிரட்டலான தோற்றத்தில் நடிகை நயன்தாரா!

    July 1, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ஜூலை 12ம் தேதி ‘We the leaders’-ன் முதல் மாநாடு..!! அண்ணாமலை அதிரடி அறிவிப்பு..!!

    இனி தவெக தான்..! அனைத்து தேர்தல்களிலும் வெற்றி பெறும்..! சி.விஜயபாஸ்கர் பேச்சு..!

    அரசியல் அரங்கில் அதிரடி எழுச்சி..!! சரித்திரம் படைத்தார் CM விஜய்..!! எம்.ஆர்.விஜயபாஸ்கர் புகழாரம்..!!

    இது வெறும் ட்ரெய்லர் தான்..!! டெல்டாவில் வெடிக்கப் போகும் அரசியல்.!! சி. விஜயபாஸ்கர் சூசக பேச்சு..!!

    இபிஎஸ் நடத்துறது ஒரு கார்பரேட் கம்பெனி..!! போட்டுத்தாக்கிய அமைச்சர் செங்கோட்டையன்..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.