Close Menu
    What's Hot

    முப்படைகளின் வலிமை அதிகரிப்பு.. ரூ.52,000 கோடிக்கு ஆயுதம் கொள்முதல்..!! பாதுகாப்பு கவுன்சில் கிரீன் சிக்னல்..!!

    கட்சி கையவிட்டு போகக்கூடாது..!! 2வது நாளாக நிர்வாகிகளுடன் இபிஎஸ் முக்கிய மீட்டிங்..!!

    கோவையில் மீண்டும் கொடூரம்!. மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் பலாத்காரம்!.

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»‘ரேஸ்’ என்ற பேரில் தாறுமாறாக பைக் ஓட்டுவதை ஏற்க முடியாது – சைலேந்திரபாபு எச்சரிக்கை
    தமிழ்நாடு

    ‘ரேஸ்’ என்ற பேரில் தாறுமாறாக பைக் ஓட்டுவதை ஏற்க முடியாது – சைலேந்திரபாபு எச்சரிக்கை

    Editor TN TalksBy Editor TN TalksDecember 21, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    race
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ரேஸ் என்ற பெயரில் தாறுமாறாக பைக் ஓட்டுவது ஏற்புடையது அல்ல என்று முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்தார்.

    ‘எலிஃபண்டைன் சர்க்யூட்’ என்கிற தனியார் அமைப்பு நடத்தும் ‘சைக்ளோத்தான்’ நிகழ்வு சென்னை அடையாறில் நடைபெற்றது. இதில், கலா அறக்கட்டளையை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட சிறப்பு குழந்தைகள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சைக்கிள் ஓட்டினர். மேலும், இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு சைக்ளோத்தான் போட்டியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஒவ்வொரு குடும்பத்திலும் அப்பா, அம்மா, குழந்தைகள் என அனைவரும் சைக்கிளை எடுத்து பயணம் செய்யுங்கள். முதலில், 5 கி.மீ என ஆரம்பித்து, அதை படிப்படியாக உயர்த்திக் கொள்ளலாம். இந்த சைக்ளோத்தானில் சிறப்பு குழந்தைகள் பங்கேற்றுள்ளது வரவேற்கதக்கது. மனம் சம்பந்தப்பட்ட பல்வேறு பிரச்சனைகளுக்கு சைக்கிள் ஓட்டுவது நல்ல மருந்தாக இருக்கிறது. புத்துணர்ச்சியை அதிகளவு கொடுக்கக்கூடியது சைக்கிளை ஓட்டுவது தான்” என்றார்.

    பைக்கைவிட சைக்கிள் ஓட்டுவதே நல்லது

    நடிகர் அஜித்குமார் கார் ரேஸில் கலந்து கொண்டதால் அதுகுறித்து பரவலாக பேச்சு உள்ளது. ஆனால் சைக்கிள் பந்தயம் குறித்து விழிப்புணர்வு இல்லையே என்ற கேள்விக்கு, ” ’மோட்டார் சைக்கிள் ரேஸ்’ பற்றி எல்லாம் எனக்குத் தெரியாது. ஆனால், உண்மையான உடல்தகுதியோடு இருக்கக்கூடிய விளையாட்டு சைக்கிள் பந்தயம் தான். உலக நாடுகளில் பாரீஸில் 1,800 கி.மீ சைக்கிள் பந்தயமும், லண்டனில் கிட்டத்தட்ட 1,000 கிலோமீட்டருக்கு மேல் சைக்கிள் ஓட்டக்கூடிய பந்தயங்களும் இருக்கின்றன. அங்குள்ளவர்களும் அதற்கு தயாராக இருக்கிறார்கள்.

    ஆனால், நம் ஊரில் இமயமலைக்கு காரில் செல்வதையே பெரிய விஷயமாக பார்க்கிறோம். மூன்று, நான்கு நாட்கள் என தொடர்ச்சியாக அவர்கள் சைக்கிள் ஓட்டுவது அவர்களது மனஉறுதியைக் காட்டுகிறது. அந்த வகையில் மோட்டார் சைக்கிளை ஓட்டுவதை விட, சைக்கிளை ஓட்டுவதே நல்லது,” என்றார்.

    ’சைலன்சர் பாபு’

    மேலும் பேசிய அவர், “இன்றைய காலகட்டத்தில் ஒரு சிலர் தாறுமாறாக பைக்கை ஓட்டி செல்கின்றனர். இதனால், பைக் ஓட்டி செல்பவர்களுக்கும் ஆபத்து, சாலையில் செல்பவர்களுக்கு ஆபத்து. மோட்டார் சைக்கிளில் ரேஸ் என்கின்ற பேரில் வருகிறார்கள். இது ஏற்புடையது அல்ல. அவர்களுக்கு சாலைவிதி சுத்தமாக தெரிவதில்லை.

    நான் கோயமுத்தூரில் காவல்துறை அதிகாரியாக பணியாற்றியபோது ஒரே நாளில் 30 பேரை பிடித்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தேன். அதைப் பார்த்த பலரும், இவர் ‘சைலேந்திரபாபு இல்லை, சைலன்சர் பாபு’ என எனக்கு பட்டமே கொடுத்தார்கள். மேலும், நகரத்திற்குள் மோட்டார் சைக்கிளில் ரேஸ் போவது ஏற்புடையதல்ல. அப்படி செய்யக்கூடிய நபர்களை காவல்துறையினர் கைது செய்ய வேண்டும். எதிர்காலம் நிச்சயமாக சைக்கிளை நம்பியிருக்கிறது” என்று சைலேந்திரபாபு கூறினார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous ArticleU-19 ஆசிய கோப்பை கிரிக்கெட்: இந்தியாவை வீழ்த்தி பட்டம் வென்ற பாகிஸ்தான்
    Next Article வன்முறை எதிரொலி: வங்கதேசத்தின் சிட்டகாங்கில் இந்திய விசா சேவை நிறுத்தி வைப்பு!
    Editor TN Talks

    Related Posts

    கட்சி கையவிட்டு போகக்கூடாது..!! 2வது நாளாக நிர்வாகிகளுடன் இபிஎஸ் முக்கிய மீட்டிங்..!!

    July 4, 2026

    கோவையில் மீண்டும் கொடூரம்!. மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் பலாத்காரம்!.

    July 4, 2026

    வீடு புகுந்து தாக்கிய வழக்கு: இன்று ஆப்சென்ட் ஆன மரிய வில்சன்..!! புதுவை கோர்ட் போட்ட அதிரடி உத்தரவு..!!

    July 4, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    முப்படைகளின் வலிமை அதிகரிப்பு.. ரூ.52,000 கோடிக்கு ஆயுதம் கொள்முதல்..!! பாதுகாப்பு கவுன்சில் கிரீன் சிக்னல்..!!

    கட்சி கையவிட்டு போகக்கூடாது..!! 2வது நாளாக நிர்வாகிகளுடன் இபிஎஸ் முக்கிய மீட்டிங்..!!

    கோவையில் மீண்டும் கொடூரம்!. மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் பலாத்காரம்!.

    வீடு புகுந்து தாக்கிய வழக்கு: இன்று ஆப்சென்ட் ஆன மரிய வில்சன்..!! புதுவை கோர்ட் போட்ட அதிரடி உத்தரவு..!!

    பள்ளிகள் அருகே இதை விற்க முற்றிலும் தடை..!! அமைச்சர் நர்ஹரி ஜிர்வால் முக்கிய அறிவிப்பு..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.