Close Menu
    What's Hot

    ஊர்க்காவல் படையினருக்கு காலமுறை ஊதிய வழங்க வேண்டும் – மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

    வாரத்தில் 2 நாட்கள் ‘ஒர்க் ஃபிரம் ஹோம்’! டெல்லி அரசு அதிரடி உத்தரவு!

    அடையாறு ஆற்றில் குதித்து தயாரிப்பாளர் கே.ராஜன் தற்கொலை!. அதிர்ச்சியில் கோலிவுட்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»உலகம்»வன்முறை எதிரொலி: வங்கதேசத்தின் சிட்டகாங்கில் இந்திய விசா சேவை நிறுத்தி வைப்பு!
    உலகம்

    வன்முறை எதிரொலி: வங்கதேசத்தின் சிட்டகாங்கில் இந்திய விசா சேவை நிறுத்தி வைப்பு!

    Editor TN TalksBy Editor TN TalksDecember 21, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    passport
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    பிரபல இளைஞர் தலைவர் ஷெரீப் உஸ்மான் ஹாடி மரணத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட வன்முறையை அடுத்து, வங்கதேசத்தின் இரண்டாவது பெரிய நகரமான சிட்டகாங்கில் உள்ள இந்திய விசா விண்ணப்ப மையத்தில் விசா சேவைகள் மறு அறிவிப்பு வரும் வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

    கடந்த ஆண்டு வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் அரசாங்கத்தை அகற்றிய மாணவர் போராட்டங்களின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான ஹாடி, பிப்ரவரி 12 அன்று நடைபெறவிருந்த பொதுத் தேர்தலுக்கான வேட்பாளராக இருந்தார்.

    மத்திய டாக்காவின் பிஜோய்நகர் பகுதியில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தின்போது, ​​டிசம்பர் 12 அன்று முகமூடி அணிந்த மர்ம நபர்களால் அவர் தலையில் சுடப்பட்டார். சிங்கப்பூரில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் டிசம்பர் 18ல் உயிரிழந்தார்.

    அவரது மரணம் காரணமாக வங்கதேசம் முழுவதும் வன்முறை வெடித்தது. கடந்த வியாழக்கிழமை (டிசம்பர் 18) அன்று சிட்டகாங்கில் உள்ள இந்திய துணைத் தூதரின் இல்லத்தின் மீது கல்வீச்சு நடத்தப்பட்டது.

    அதேபோல, சிட்டகாங்கில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தின் மீதும் சமீபத்தில் தாக்குதல் நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து சிட்டகாங்கில் இந்திய விசா விண்ணப்பங்கள் காலவரையின்றி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன என்று இந்திய விசா விண்ணப்ப மையம் (IVAC) தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இந்திய விசா விண்ணப்ப மையம் வெளியிட்ட தகவல்களின் படி, சிட்டகாங்கில் உள்ள அனைத்து இந்திய விசா தொடர்பான சேவைகளும் டிசம்பர் 21 முதல் மறு அறிவிப்பு வரும் வரை மூடப்படும். பாதுகாப்பு நிலைமை குறித்து மதிப்பாய்வு செய்யப்பட்ட பிறகு, விசா விண்ணப்ப மையம் மீண்டும் திறப்பது குறித்து அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article‘ரேஸ்’ என்ற பேரில் தாறுமாறாக பைக் ஓட்டுவதை ஏற்க முடியாது – சைலேந்திரபாபு எச்சரிக்கை
    Next Article அடேங்கப்பா!. மெஸ்ஸியின் இந்திய வருகைக்கு ரூ. 100 கோடி சம்பளமாம்!.
    Editor TN Talks

    Related Posts

    ஆப்பிரிக்காவை உலுக்கும் அரிய வகை எபோலா வைரஸ்!. காங்கோவில் 80 பேர் பலி!.

    May 17, 2026

    டிரம்ப் போட்ட ‘ஒரே ஒரு போஸ்ட்!. மீண்டும் போர் தொடக்கம்?. உலக நாடுகள் அச்சம்!

    May 17, 2026

    லெபனானில் தொடரும் அட்டூழியம்..! கன்னி மரியாள் சிலையில் சிகரெட்..!

    May 7, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ஊர்க்காவல் படையினருக்கு காலமுறை ஊதிய வழங்க வேண்டும் – மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

    வாரத்தில் 2 நாட்கள் ‘ஒர்க் ஃபிரம் ஹோம்’! டெல்லி அரசு அதிரடி உத்தரவு!

    அடையாறு ஆற்றில் குதித்து தயாரிப்பாளர் கே.ராஜன் தற்கொலை!. அதிர்ச்சியில் கோலிவுட்!

    சிஎம் முடிவில் தலையிடாதீங்க!. ஓட்டு கேட்டு ஜெயிச்சுட்டு பேசுங்க… விஷாலுக்கு அருண் விஜய் நச் பதில்!

    பிரதமர் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி நன்றி – ஏன்?

    Trending Posts

    ஊர்க்காவல் படையினருக்கு காலமுறை ஊதிய வழங்க வேண்டும் – மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

    May 17, 2026

    வாரத்தில் 2 நாட்கள் ‘ஒர்க் ஃபிரம் ஹோம்’! டெல்லி அரசு அதிரடி உத்தரவு!

    May 17, 2026

    அடையாறு ஆற்றில் குதித்து தயாரிப்பாளர் கே.ராஜன் தற்கொலை!. அதிர்ச்சியில் கோலிவுட்!

    May 17, 2026

    சிஎம் முடிவில் தலையிடாதீங்க!. ஓட்டு கேட்டு ஜெயிச்சுட்டு பேசுங்க… விஷாலுக்கு அருண் விஜய் நச் பதில்!

    May 17, 2026

    பிரதமர் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி நன்றி – ஏன்?

    May 17, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.