Close Menu
    What's Hot

    பிரான்ஸில் அமைச்சர் நிர்மலா சீதாராமன்;  ITER திட்டத்தை பார்வையிட்டார்

    2-வது டி 20; இங்கிலாந்துக்கு 191 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இந்தியா

    பிரதமர் மோடிக்கு ‘மரண மிரட்டல்’ ; ஆஸ்திரேலியா போலீஸ் விசாரணை

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»அரசியல்»சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடு வழங்க தாமதம் ஏன்? அன்புமணி சரமாரி கேள்வி
    அரசியல்

    சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடு வழங்க தாமதம் ஏன்? அன்புமணி சரமாரி கேள்வி

    Editor TN TalksBy Editor TN TalksDecember 23, 2025No Comments3 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    anbumani
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    புயல், மழையால் சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடு வழங்க தாமதம் ஏன்? திமுகவின் வாக்குத் திருட்டுக்கு அப்பாவி உழவர்களுக்கு துரோகம் செய்வதா? என அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

    காவிரி பாசன மாவட்டங்களில் டிட்வா புயல் மழையால் பாதிக்கப்பட்ட சம்பா மற்றும் தாளடி பயிர்களை  கணக்கெடுக்கும் பணிகள் நிறைவடைந்து விட்ட நிலையில், பாதிக்கப்பட்ட உழவர்களுக்கு இன்னும் இழப்பீடு வழங்கப்படவில்லை. அரசின் பல்வேறு ஆதாரங்களில் இருந்த நிதி மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்காக செலவிடப்பட்டதால் தான் உழவர்களுக்கு இன்னும் இழப்பீடு வழங்கப்படவில்லை என்று ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், அது உண்மையாக இருந்தால் கண்டிக்கத்தக்கது.

    காவிரி பாசன மாவட்டங்களில் அக்டோபர் 20, 21 ஆகிய தேதிகளில் பெய்த மழையில் 2 லட்சம் ஏக்கர் பரப்பளவிலான குறுவை மற்றும் சம்பா பயிர்களும், நவம்பர் இறுதியில் டிட்வா புயலால் பெய்த மழையில் 3 லட்சம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த சம்பா மற்றும் தாளடி பயிர்களும் சேதமடைந்தன. பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது.

    அரசு நினைத்தால் 10 நாள்களில் சேதமடைந்த பயிர்களை கணக்கெடுத்து உழவர்களுக்கு நிவாரணம் வழங்கியிருக்க முடியும். ஆனால், அரசின் அலட்சியத்தால் காரணமாக கணக்கெடுப்புப் பணிகள் கடந்த 13&ஆம் தேதி வரை சராசரியாக 60% மட்டுமே நிறைவடைந்திருந்தன.

    அதன்பின் கணக்கெடுப்புப் பணிகள் முடிக்கப்பட்டு, பயிர் சேதம் குறித்த அறிக்கைகள் தலைமைச் செயலகத்திற்கு அனுப்பப்பட்டு விட்டன. ஆனால், அறிக்கை கிடைத்தும் கூட பாதிக்கப்பட்ட உழவர்களுக்கு இன்னும் இழப்பீடு வழங்கப்படவில்லை. அதற்குக் காரணம் தமிழக அரசிடம் நிதி இல்லாதது தான் என்று கூறப்படுகிறது.

    நடப்பு மாதத்திலிருந்து கூடுதலாக 17 லட்சம் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை வழங்க அரசு ஆணையிட்டுள்ளது. அதற்காக அரசின் பல்வேறு ஆதாரங்களிலிருந்து நிதி திருப்பி விடப்பட்டிருப்பது தான் காரணம் என்று ஊடகங்களில் செய்திகள்  வெளியாகியிருக்கின்றன. அந்த செய்திகளின் உண்மைத் தன்மை குறித்து உறுதியாகத் தெரியவில்லை என்றாலும் கூட, களச் சூழல்களை வைத்துப் பார்க்கும் போது, இச்செய்திகள் சரியானவை என நினைக்க காரணங்கள் உள்ளன.

    கடந்த மார்ச் மாதம் தாக்கல் செய்யப்பட்ட தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்திற்காக ரூ.13,087 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிதி ஏற்கனவே இந்தத் திட்டத்தில் சேர்க்கப்பட்டிருந்த 1.16 கோடி பயனாளிகளுக்கு உரிமைத் தொகை வழங்குவதற்கு மட்டுமே போதுமானதாக இருக்கும். இப்போது புதிதாக இந்தத் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ள 17 லட்சம் மகளிருக்கு மார்ச் மாதம் வரை மாதம் ரூ.1000 வழங்க குறைந்தது ரூ.680 கோடி தேவை.

    ஆனால், கடந்த அக்டோபர் மாதம் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட துணை மானியக் கோரிக்கைகளில் கூட இந்தத் திட்டத்திற்காக கூடுதல் நிதி எதுவும் ஒதுக்கப்படாத நிலையில், வேறு துறைகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியைக் கொண்டு தான் இத்திட்டத்தை செயல்படுத்த முடியும் என்று கூறப்படுகிறது.

    2021&ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி திமுக அரசு வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், குடும்ப அட்டை வைத்திருக்கும் அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் மாதம் ரூ.1000 வழங்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், இரண்டரை ஆண்டுகள் எதுவும் செய்யாமல் இருந்து விட்டு, 2024 மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு  6 மாதங்கள் முன்பாக 1.16 கோடி பெண்களுக்கு மட்டுமே இந்த தொகையை திமுக அரசு வழங்கியது. மீதமுள்ள  1.25 கோடி பெண்களுக்கு உதவித் தொகை வழங்காததால் ஏற்பட்ட எதிர்ப்பையும், வெறுப்பையும் சமாளிக்கும் வகையில் தான் சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு இன்னும் இரு மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், இப்போது 17 லட்சம் பெண்களுக்கு மாதம் ரூ.1000  உதவித் தொகை வழங்குவதற்கான திட்டத்தை  அரசு தொடங்கியுள்ளது. அந்த வகையில் இத்திட்டம் பெண்களை ஏமாற்றி அவர்களின் வாக்குகளை பறிக்கும் நோக்குடன் கொண்டு வரப்பட்டிருக்கும் அப்பட்டமான வாக்குத் திருட்டு முயற்சி என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

    வாக்குகளைத் திருடும் திமுகவின் பேராசைக்காகவும், மோசடிக்காகவும் ஏற்கனவே பாதிக்கப்பட்டிருக்கும் உழவர்களின் நலன்களை பலி கொடுப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. உலகிற்கே உணவு படைக்கும் கடவுள்கள் உழவர்கள் தான். ஆனால், வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் உழவர்களுக்குத் தான் திமுக அரசு துரோகம் செய்கிறது. மயிலாடுதுறை மாவட்டத்தில்  கடந்த ஆண்டு நவம்பர் மற்றும் நடப்பாண்டு ஜனவரி மாதத்தில் பெய்த கனமழையில் சேதமடைந்த  ஒன்றரை லட்சம் ஏக்கருக்கும் கூடுதலான நெல் பயிர்களுக்கு இன்னும் இழப்பீடு வழங்கப்படவில்லை; கடந்த அக்டோபர் மாத மழையில் சேதமடைந்த  2 லட்சம் ஏக்கர் பயிர்களுக்கும் நிவாரணம் வழங்கப்படவில்லை. அதே வரிசையில் டிட்வா புயலில் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கும் இழப்பீட்டிற்கு பதிலாக ஏமாற்றம் தான் கிடைக்குமோ? என உழவர்கள் அஞ்சுகின்றனர்.

    உழவர்களுக்கு இழப்பீடு வழங்காமல் ஏமாற்ற முயன்றால், திமுக அரசுக்கு எதிராக காவிரி பாசன மாவட்ட மக்கள் கொந்தளிப்பதைத் தவிர்க்க முடியாது. எனவே, பாதிக்கப்பட்ட உழவர்களின் உணர்வுகளையும், துயரத்தையும் அரசு புரிந்து கொண்டு அவர்களுக்கு ஏக்கருக்கு ரூ.40,000 வீதம் இழப்பீடு வழங்க வேண்டும்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் அன்புமணி தெரிவித்துள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஇன்று தமிழகம் வருகிறார் பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஸ் கோயல்!. EPS உடன் பேச்சுவார்த்தை!.
    Next Article 2026ல் 75 மாநிலங்களவை இடங்களுக்கும் தேர்தல் நடத்த திட்டம்!. அரசியலை மாற்றியமைக்குமா?.
    Editor TN Talks

    Related Posts

    புரட்சித்தலைவியிடம் பாடம் பயின்றவர்கள்; தவெக வெற்றிக்காக உழைப்போம் – டாக்டர் சி.விஜயபாஸ்கர்

    July 4, 2026

    திமுக, அதிமுக அளித்த புகார் மனுக்களில் இருந்தது என்ன? ஆளுநர் மாளிகை தகவல்

    July 4, 2026

    அவதூறு வழக்குகளுக்கெல்லாம் கைதா..?? திமுக ஆட்சியில் அப்படி நடந்ததே இல்ல.!! ஆர்.எஸ்.பாரதி காட்டம்..!!

    July 4, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    பிரான்ஸில் அமைச்சர் நிர்மலா சீதாராமன்;  ITER திட்டத்தை பார்வையிட்டார்

    2-வது டி 20; இங்கிலாந்துக்கு 191 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இந்தியா

    பிரதமர் மோடிக்கு ‘மரண மிரட்டல்’ ; ஆஸ்திரேலியா போலீஸ் விசாரணை

    அமெரிக்க சுதந்திரத்தின் 250-வது ஆண்டு விழா: டிரம்புக்கு பிரதமர் மோடி வாழ்த்து

    சச்சினை விஞ்சிய சூர்வன்ஷி!  15 வயதில் டி 20 போட்டியில் அறிமுகமாகி புது வரலாறு

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.