Close Menu
    What's Hot

    தமிழ் இலக்கிய உலகின் முதுபெரும் கவிஞர் புவியரசு மறைவு..!! முதலமைச்சர் விஜய் இரங்கல்..!!

    பாஸ்போர்ட் எடுக்கப் போகிறீர்களா..?? இன்று முதல் அமலுக்கு வந்த புதிய கட்டணம்.. விவரம் இதோ!

    அரியானா : ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன்..! 21 மணி நேர போராட்டம்..! சடலமாக மீட்பு..!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»இந்தியா»தங்க அங்கி சபரிமலைக்கு புறப்பட்டது… மண்டல பூஜையில் ஐயப்பனுக்கு அணிவிப்பு
    இந்தியா

    தங்க அங்கி சபரிமலைக்கு புறப்பட்டது… மண்டல பூஜையில் ஐயப்பனுக்கு அணிவிப்பு

    Editor TN TalksBy Editor TN TalksDecember 24, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    ayappaaaaa
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    மண்டல பூஜை​யின்​போது ஐயப்​பனுக்கு அணி​விப்​ப​தற்​கான தங்க அங்கி நேற்று ஆரன்​முலா பார்த்​த​சா​ரதி கோயி​லில் இருந்து சபரிமலைக்கு ஊர்​வல​மாக புறப்பட்டது.

    சபரிமலை ஐயப்​பன் கோயி​லில் வரும் 27-ம் தேதி நடை​பெறும் மண்டல பூஜையன்று சுவாமிக்கு தங்க அங்கி அணிவிக்​கப்​படும். இதையொட்​டி, 430 பவுன் எடை கொண்ட தங்க அங்​கியை சபரிமலைக்கு கொண்​டு​வரும் வைபவம் நேற்று தொடங்​கியது.

    ஆரன்​முலா பார்த்​த​சா​ரதி கோயி​லில் சரண கோஷத்​துடன் தங்க அங்கி ரத யாத்​திரை நேற்று தொடங்​கியது. சிறப்பு பூஜைகளுக்​குப் பின்​னர், அலங்​காரத்​துடன் கூடிய வாக​னத்​தில், துப்​பாக்கி ஏந்​திய போலீஸ் பாது​காப்​புடன் தங்க அங்கி ஊர்​வல​மாக கொண்​டு​வரப்​பட்​டது. வழிநெடு​கிலும் ஏராள​மான பக்​தர்​கள் தரிசனம் செய்​தனர்.

    சவுட்​டு​குளம் மகாதேவ கோயில், இலந்​தூர் பகவ​திதேவி கோயில், பிரக்​கானம் இடநாடு பகவதி கோயில் வழி​யாக நேற்று இரவு ஓமல்​லூர் ரத்​தகண்ட சுவாமி கோயிலை தங்க அங்கி வந்​தடைந்​தது. இன்று இரவு கோனி முரிங்​கமங்​கலம் கோயில், நாளை இரவு பெரு​நாடு சாஸ்தா கோயிலை வந்​தடை​யும்.

    வரும் 26-ம் தேதி சாலக்​கா​யம் வழி​யாக பம்​பையை சென்​றடை​யும். அங்​கிருந்து மாலை 3 மணிக்கு தலைச்​சுமை​யாக நீலிமலை வழியே தங்க அங்கி கொண்டு செல்​லப்​படும். சரங்​குத்​தி​யில் வரவேற்பு அளிக்​கப்​பட்ட பின்​னர் 18-ம் படி வழி​யாக தங்க அங்கி எடுத்​துச் செல்​லப்​படும்.

    பின்​னர் நம்​பூ​திரி, மேல்​சாந்​திகளிடம் தங்க அங்கி ஒப்​படைக்​கப்​பட்​டு, மாலை 6.30 மணிக்கு ஐயப்​பன் விக்​கிரகத்​தில் அணிவிக்​கப்​படும். பின்னர் இரவு அங்கி களை​யப்​பட்டு நடை சாத்​தப்​படும். மீண்​டும் வரும் 27-ம் தேதி காலை 10 மணிக்கு அங்கி அணிவிக்​கப்​படும். அன்று முழு​வதும் தங்க அங்​கி​யுடன் கூடிய சுவாமியை பக்​தர்​கள் தரிசிப்​பர். அன்று இரவு 11 மணிக்கு ஹரிவ​ராசனம் பாடலுடன்​ மண்​டல வழி​பாடு​கள்​ நிறைவடையும்​. இந்த சிறப்பு வழிபாட்டுக்காக பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஜோதிட நாள்காட்டி 24.12.2025 | மார்கழி 09
    Next Article ஒரே மாவட்டத்தில் 8 மாதங்களில் 409 குழந்தைகள் பலி! ம.பி.யில் அதிர்ச்சி
    Editor TN Talks

    Related Posts

    பாஸ்போர்ட் எடுக்கப் போகிறீர்களா..?? இன்று முதல் அமலுக்கு வந்த புதிய கட்டணம்.. விவரம் இதோ!

    July 1, 2026

    அரியானா : ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன்..! 21 மணி நேர போராட்டம்..! சடலமாக மீட்பு..!

    July 1, 2026

    பெட்ரோல்-டீசல் மீதான கட்டுப்பாடுகளை நீக்கியது மத்திய அரசு..!! இன்று முதல் முழு சுதந்திரம்..!!

    July 1, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தமிழ் இலக்கிய உலகின் முதுபெரும் கவிஞர் புவியரசு மறைவு..!! முதலமைச்சர் விஜய் இரங்கல்..!!

    பாஸ்போர்ட் எடுக்கப் போகிறீர்களா..?? இன்று முதல் அமலுக்கு வந்த புதிய கட்டணம்.. விவரம் இதோ!

    அரியானா : ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன்..! 21 மணி நேர போராட்டம்..! சடலமாக மீட்பு..!

    தொடரும் சோகம்..!! அமோனியா வாயு கசிவு – பலி எண்ணிக்கை 17 ஆக உயர்வு..!!

    பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் இடையே பதற்றம் உச்சம்..!! தொடரும் டிரோன் அட்டாக்..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.