Close Menu
    What's Hot

    ஜனநாயகன் லீக் விவகாரம்!. முதல்வர் ஸ்டாலின் கொடுத்த ஒரே பதில்!.

    அதலபாதாளத்திற்குச் சரியும் தங்கம் விலை!. உலகப் பொருளாதாரத்தில் அதிரடி மாற்றம்!

    போர்!. ஈரான் – அமெரிக்கா இடையே பேச்சுவார்த்தை தோல்வி!. அடுத்து என்ன நடக்கும்?

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»இந்தியா»இளைஞர்களின் ஆற்றலில் இஸ்ரோவின் எழுச்சி!. பிரதமர் மோடி பெருமிதம்!
    இந்தியா

    இளைஞர்களின் ஆற்றலில் இஸ்ரோவின் எழுச்சி!. பிரதமர் மோடி பெருமிதம்!

    Editor web3By Editor web3December 24, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    modi
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ உள்நாடு, வெளிநாடுகளின் செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவி வருகிறது. அந்த வகையில் அமெரிக்காவின் ஏ.எஸ்.டி. தொலை தொடர்பு நிறுவனத்திற்கு சொந்தமான தகவல் தொடர்பு சேவைக்கான புளூபேர்ட்- 6 செயற்கைக்கோளை இஸ்ரோ இன்று வெற்றிகரமாக விண்ணில் ஏவியுள்ளது.

    விண்வெளியில் இருந்து நேரடியாக ஸ்மார்ட் போன்களுக்கே அதிவேக இணைய சேவையை வழங்குவதுதான் இந்த செயற்கைக்கோளின் பிரதான நோக்கமாகும். இதன் மூலம் செல்போன் டவர்கள் இல்லாத அடர்ந்த காடுகள், மலைப்பகுதிகளிலும் 5ஜி வேகத்தில் இணையம், வீடியோ அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்தி சேவைகளை பெற முடியும்.

    புளூபேர்ட்- 6 செயற்கைக்கோள் 6,100 கிலோ எடை கொண்டதாகும். இந்த செயற்கைக்கோள் பாகுபலி ராக்கெட்டான எல்.வி.எம்.3- எம்.6 மூலம் விண்ணில் ஏவப்பட்டது. மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2வது ஏவுதளத்தில் இருந்து காலை 8.55 மணிக்கு பாகுபலி ராக்கெட் மூலம் செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்டது. இதன் மூலம் 6,100 கிலோ எடை கொண்ட செயற்கைக்கோளை முதன் முதலாக வெற்றிகரமாக விண்ணில் ஏவி இஸ்ரோ சாதனை படைத்துள்ளது.

    இது இந்தியாவின் விண்வெளித்துறையில் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றம் என்று இஸ்ரோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்திய இளைஞர்களின் ஆற்றலால் நமது விண்வெளி திட்டங்கள் மிக வலிமையாக மாறியுள்ளதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார். புளூபேர்ட் செயற்கைகோளை ஏவிய LVM3 ராக்கெட்டின் நம்பகமான செயல்பாடுகள், ககன்யான் போன்ற எதிர்கால திட்டங்களுக்கு வலுவான அடித்தளத்தை அமைப்பதாக பெருமிதம் தெரிவித்த பிரதமர் மோடி, வணிக ரீதியிலான விண்வெளி சேவைகள் விரிவுபடுத்தவும், சர்வதேச கூட்டணிகளை விரிவுப்படுத்தவும் இது உதவுவதாக கூறினார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதிருப்பதி கோவிந்தராஜர் கோயிலில் 50 கிலோ தங்கம் மாயம்! பக்தர்கள் அதிர்ச்சி
    Next Article திமுக அரசின் மூடிக்கிடக்கும் சமூகநீதி கண்களை பெரியாராவது திறக்கட்டும்! அன்புமணி விளாசல்
    Editor web3
    • Website

    Related Posts

    அதலபாதாளத்திற்குச் சரியும் தங்கம் விலை!. உலகப் பொருளாதாரத்தில் அதிரடி மாற்றம்!

    April 12, 2026

    இனி குழந்தைகளுக்கு டிஜிட்டல் பாக்கெட் மணி!. ‘GPay-ல் புதிய அம்சம்!. எப்படி செயல்படுகிறது?

    April 11, 2026

    தமிழ்நாட்டில் தேர்தலை நிறுத்த வேண்டும்!. உச்ச நீதிமன்றத்தில் அவரச வழக்கு!

    April 11, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ஜனநாயகன் லீக் விவகாரம்!. முதல்வர் ஸ்டாலின் கொடுத்த ஒரே பதில்!.

    அதலபாதாளத்திற்குச் சரியும் தங்கம் விலை!. உலகப் பொருளாதாரத்தில் அதிரடி மாற்றம்!

    போர்!. ஈரான் – அமெரிக்கா இடையே பேச்சுவார்த்தை தோல்வி!. அடுத்து என்ன நடக்கும்?

    இனி குழந்தைகளுக்கு டிஜிட்டல் பாக்கெட் மணி!. ‘GPay-ல் புதிய அம்சம்!. எப்படி செயல்படுகிறது?

    ஜனநாயகன் லீக் விவகாரம்!. நடிகை பூஜா ஹெக்டே வருத்தம்!. 

    Trending Posts

    ஜனநாயகன் லீக் விவகாரம்!. முதல்வர் ஸ்டாலின் கொடுத்த ஒரே பதில்!.

    April 12, 2026

    அதலபாதாளத்திற்குச் சரியும் தங்கம் விலை!. உலகப் பொருளாதாரத்தில் அதிரடி மாற்றம்!

    April 12, 2026

    போர்!. ஈரான் – அமெரிக்கா இடையே பேச்சுவார்த்தை தோல்வி!. அடுத்து என்ன நடக்கும்?

    April 12, 2026

    ‘ஜனநாயகன்’ படத்தை லீக் செய்தது ஆதவ் அர்ஜுனாவா?. வினோஜ் பி.செல்வம் புதிய சர்ச்சை!

    April 11, 2026

    இனி குழந்தைகளுக்கு டிஜிட்டல் பாக்கெட் மணி!. ‘GPay-ல் புதிய அம்சம்!. எப்படி செயல்படுகிறது?

    April 11, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.