Close Menu
    What's Hot

    வாட்ஸ்அப்பில் புதிய ‘Username’ வசதி… புதிய மோசடிகளுக்கான ஆயுதமா?

    பாடப்புத்தகத்தில் ஐஸ்வர்யா ராய் பாட்டு! ஒடிசாவில் பெரும் சர்ச்சை!

    இந்தியாவில் தாக்குதல் நடத்த சதி திட்டம்!. 8 தீவிரவாதிகள் கைது!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»இந்தியா»திருப்பதி கோவிந்தராஜர் கோயிலில் 50 கிலோ தங்கம் மாயம்! பக்தர்கள் அதிர்ச்சி
    இந்தியா

    திருப்பதி கோவிந்தராஜர் கோயிலில் 50 கிலோ தங்கம் மாயம்! பக்தர்கள் அதிர்ச்சி

    Editor TN TalksBy Editor TN TalksDecember 24, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    temple gold
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    திருப்பதி கோவிந்தராஜர் கோயிலில் 50 கிலோ தங்கம் மாயமாகி இருப்பது பக்தர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

    ஆந்திர மாநிலம், திருப்பதி திரு​மலை தேவஸ்​தானத்​தின் முக்​கிய கோயில்​களில் திருப்​பதி கோவிந்​த​ராஜர் கோயிலும் ஒன்​றாகும். இந்த கோயி​லில், முன்​னாள் முதல்​வர் ஜெகன்​மோகன் ரெட்​டி​யின் ஆட்​சி​யின்​போது விமான கோபுரத்​துக்கு தங்க தகடு​கள் (100 கிலோ) பதிக்​கப்​பட்​டன. தற்​போது கோயி​லில் மராமத்து பணி​கள் நடை​பெற்று வரு​கின்​றன. இதில் விமான கோபுரத்​தில் 50 கிலோ தங்​கம் மாய​மாகி இருப்​பது தெரிய​வந்​துள்​ளது.

    கடந்த 2022-23-ம் ஆண்​டில் கோவிந்​த​ராஜர் கோயில் விமான கோபுரத்​தில் தங்க தகடு​கள் பதிக்​கும் பணி நடை​பெற்​றது. இதற்​காக திருப்​பதி தேவஸ்​தானம் 100 கிலோ தங்​கத்தை வழங்​கியது. 9 அடுக்கு தங்க தகடு​களை பதிக்க ஒப்​பந்​தம் கொடுக்​கப்​பட்​டது. ஆனால், தற்​போதைய பரிசோதனை​யில் 2 அடுக்கு தங்க தகடு​கள் மட்​டுமே பொருத்​தப்​பட்​டிருப்​பது தெரிய​வந்​துள்​ளது.

    மேலும் தங்க தகடு​களை பொருத்​தி​ய​போது விமான கோபுரத்​தில் இருந்த சுமார் 30 சிலைகள் உடைக்​கப்​பட்டு உள்​ளன. அப்​போதைய அறங்​காவலர் குழுத் தலை​வரும் ஜெகன்​மோகன் ரெட்​டி​யின் சித்​தப்பாவு​மான ஒய்​.வி சுப்பா ரெட்​டி, நிர்​வாக அதி​காரி தர்மா ரெட்டி ஆகியோர் இந்த விவ​காரத்தை வெளியே வரவி​டா​மல் தடுத்​து​விட்​ட​தாகக் கூறப்​படு​கிறது.

    தற்​போது தங்​கம் மாய​மான விவ​காரம் குறித்து திருப்​பதி தேவஸ்​தான விஜிலென்ஸ் துறை தீவிர விசா​ரணை நடத்தி வரு​கிறது. தங்க தகடு​கள் பொருத்​திய தொழிலா​ளர்​கள், ஒப்​பந்​த​தா​ரர்​களிடம் முழு​மை​யாக விசா​ரணை நடத்​தப்பட உள்​ளது.

    ஏற்கனவே ஏழுமலையான் கோயில் லட்டு பிரசாதத்தில் கலப்பட நெய் கலந்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பின்னர் பரகாமணியில் ரூ.100 கோடி கொள்ளை அடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபாஜகவினர் விஜய் குறித்து விமர்சிக்க வேண்டாம்!. பியூஸ் கோயல்!.
    Next Article இளைஞர்களின் ஆற்றலில் இஸ்ரோவின் எழுச்சி!. பிரதமர் மோடி பெருமிதம்!
    Editor TN Talks

    Related Posts

    பாடப்புத்தகத்தில் ஐஸ்வர்யா ராய் பாட்டு! ஒடிசாவில் பெரும் சர்ச்சை!

    July 3, 2026

    இந்தியாவில் தாக்குதல் நடத்த சதி திட்டம்!. 8 தீவிரவாதிகள் கைது!

    July 3, 2026

    இன்ஸ்டாகிராமில் ஆபாச விளம்பரங்கள்!. மெட்டா நிறுவனத்திற்கு மத்திய அரசு கடும் கண்டனம்!

    July 3, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    வாட்ஸ்அப்பில் புதிய ‘Username’ வசதி… புதிய மோசடிகளுக்கான ஆயுதமா?

    பாடப்புத்தகத்தில் ஐஸ்வர்யா ராய் பாட்டு! ஒடிசாவில் பெரும் சர்ச்சை!

    இந்தியாவில் தாக்குதல் நடத்த சதி திட்டம்!. 8 தீவிரவாதிகள் கைது!

    “தவெக-வில் சேர வற்புறுத்தினார்கள்” – அனிதா ராதாகிருஷ்ணன் பரபரப்பு குற்றச்சாட்டு!

    இன்ஸ்டாகிராமில் ஆபாச விளம்பரங்கள்!. மெட்டா நிறுவனத்திற்கு மத்திய அரசு கடும் கண்டனம்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.