Close Menu
    What's Hot

    ஓ.எஸ்.எம். முறையில் குளறுபடி –  சிபிஎஸ்இ தலைவர் ராகுல்சிங் அதிரடி மாற்றம்

    குடியரசுத் தலைவருடன் தென்னாப்பிரிக்க துணை அதிபர் சந்திப்பு

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»விளையாட்டு»கோலி, ரோஹித் அதிரடி சதம்! டெல்லி, மும்பை அணிகள் வெற்றி
    விளையாட்டு

    கோலி, ரோஹித் அதிரடி சதம்! டெல்லி, மும்பை அணிகள் வெற்றி

    Editor TN TalksBy Editor TN TalksDecember 24, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    rht
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோரின் அதிரடி சதத்தால், விஜய் ஹசாரே கோப்பைக்கான போட்டிகளில் டெல்லி, மும்பை அணிகள் வெற்றி பெற்றன.

    டெல்லியில் நடைபெற்ற விஜய் ஹசாரே கோப்பைக்கான போட்டியில் குரூப் டி பிரிவு அணிகளான ஆந்திராவும், டெல்லியும் பலப்பரீட்சையில் ஈடுபட்டன. முதலில் பேட் செய்த ஆந்திர அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 298 ரன்களை எடுத்தது. ஆந்திர அணி வீரர் ரிக்கி புய் 122 ரன்கள்  விளாசினார்.

    இதன்பின்னர் 299 ரன்களை இலக்காக கொண்டு டெல்லி அணி விளையாடியது. பிரியான்ஸ் ஆர்யா 74, விராட் கோலி 131, நிதிஸ் ராணா 77 ரன்களை விளாசினர். இதனால், போட்டியில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி பெற்றது.

    சச்சின் சாதனை முறியடிப்பு: முதல் தரக் கிரிக்கெட்டில் மிக குறைந்த போட்டிகளில் 16,000 ரன்களை கடந்து, சச்சின் ஏற்கெனவே படைத்த சாதனையை கோலி இப்போட்டியில் முறியடித்தார்.

    குரூப் சி போட்டி: இன்னொரு போட்டியில், குரூப் சி பிரிவு அணிகளான மும்பை, சிக்கிம் விளையாடின. இதில் முதலில் பேட் செய்த சிக்கிம் அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 236 ரன்களை சேர்த்தது.

    இதையடுத்து மும்பை அணி பேட் செய்தது. ரகுவன்சி, ரோஹித் சர்மா ஆகியோர் துவக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். ரகுவன்சி 38 ரன்களில் ஆட்டமிழந்தார்.

    இதையடுத்து ரோஹித்துடன் முசிர்கான் ஜோடி சேர்ந்தார். மறுமுனையில் சிறப்பாக விளையாடிய ரோஹித் சர்மா 155 ரன்களை குவித்தார். இதனால் 30.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 237 ரன்களை எடுத்து, 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை அணி வென்றது. ஆட்ட நாயகனாக சதம் விளாசிய ரோஹித் சர்மா தேர்வு செய்யப்பட்டார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகிங் கோலி மேலும் ஒரு சாதனை! சச்சினின் சாதனை முறியடிப்பு
    Next Article மகாராஷ்டிர மாநகராட்சித் தேர்தல் – உருவானது உத்தவ், ராஜ் தாக்கரே கூட்டணி!
    Editor TN Talks

    Related Posts

    பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதிக்கு முன்னேறிய சபலென்கா..!

    June 2, 2026

    அப்பா சொன்ன கிரிக்கெட் ரகசியம்.. என் லட்சியம் இதுதான்!. மனம் திறந்த வைபவ் சூர்யவன்ஷி!

    June 1, 2026

    அதிக ‘மேன் ஆஃப் தி மேட்ச்’ விருது!. முதலிடத்தைப் பிடித்து விராட் கோலி புதிய வரலாறு!

    June 1, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ஓ.எஸ்.எம். முறையில் குளறுபடி –  சிபிஎஸ்இ தலைவர் ராகுல்சிங் அதிரடி மாற்றம்

    குடியரசுத் தலைவருடன் தென்னாப்பிரிக்க துணை அதிபர் சந்திப்பு

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026

    குடியரசுத் தலைவருடன் தென்னாப்பிரிக்க துணை அதிபர் சந்திப்பு

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.