Close Menu
    What's Hot

    வெள்ளை  அறிக்கை ஒரு ‘ஃப்ளாப் ஷோ’… தங்கம் தென்னரசு விளாசல்

    தமிழகத்தின் கழுத்தை நெரிக்கும் 6 நிதி நெருக்கடிகள்… வெள்ளை அறிக்கை தரும் பகீர் எச்சரிக்கை!

    இட ஒதுக்கீடு உயர்வு கோரிக்கையை  தவறாகச் சித்தரிப்பதா? பாஜகவுக்கு எஸ்.டி.பி.ஐ கண்டனம்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»இந்தியா»கர்நாடகாவில் ஆம்னி பேருந்து மீது லாரி மோதி விபத்து: தீயில் கருகி 11 பேர் உயிரிழப்பு
    இந்தியா

    கர்நாடகாவில் ஆம்னி பேருந்து மீது லாரி மோதி விபத்து: தீயில் கருகி 11 பேர் உயிரிழப்பு

    Editor TN TalksBy Editor TN TalksDecember 25, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    amni
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

     கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டத்தில் இன்று அதிகாலை படுக்கை வசதியுடன் கூடிய ஆம்னி பேருந்து மீது எதிர்புறம் வந்த லாரி மோதியது. இந்த விபத்தை தொடர்ந்து தீ பற்றியது. இதில் சுமார் 11 பேர் உடல் கருகி உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இந்த விபத்து பெங்களூருவை மும்பை மற்றும் புனே உடன் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை 48-ல் ஹிரியூர் அருகே நிகழ்ந்துள்ளது. 32 பயணிகளுடன் கோகர்ணாவுக்கு அந்தப் பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்திசையில் வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து, தடுப்புக் கட்டையை உடைத்துக்கொண்டு பேருந்து மீது வேகமாக வந்து மோதியது. இதையடுத்து தீ பரவியது. இதில் உயிரிழந்தவர்களில் லாரி ஓட்டுநர், லாரியின் கிளீனர் மற்றும் பேருந்தில் இருந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை காவல் துறை அதிகாரி ரவிகாந்த் கவுடா உறுதி செய்துள்ளார்.

    முதற்கட்ட விசாரணையில் லாரி ஓட்டுநரின் கவனக்குறைவு இந்த விபத்துக்கு காரணம் என தெரியவந்துள்ளது. “தடுப்புக் கட்டையை உடைத்துக் கொண்டு லாரி எங்கள் பேருந்துக்கு எதிரே வந்தது. அப்போது நான் பேருந்தை 60 – 70 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கினேன். மோதலை தடுக்க முயற்சித்தேன். ஆனால், லாரி வேகமாக வந்த காரணத்தால் அது முடியாமல் போனது” என பேருந்து ஓட்டுநர் ரஃபிக் தெரிவித்துள்ளார். தற்போது அவர் சிகிச்சையில் உள்ளார்.

    விபத்து ஏற்பட்ட இடத்தில் மீட்பு பணிகள் நடந்து வருகிறது. காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, கர்நாடக முதல்வர் சித்தராமையா, மத்திய அமைச்சர் குமாரசாமி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article“பியூஷ் கோயல் சென்னை வந்தது ஏன்?” – பெங்களூரு புகழேந்தி புது தகவல்
    Next Article ஆஷஸ் தொடரில் இருந்து ஜோப்ரா ஆர்ச்சர் விலகல்
    Editor TN Talks

    Related Posts

    புதுவை அமைச்சரவை விரிவாக்கம்..!! நாளை 3 புதிய அமைச்சர்கள் பதவியேற்பு..!!

    June 16, 2026

    நாடு முழுவதும் டெலிகிராம் செயலிக்கு தற்காலிக தடை..!! காரணம் என்ன தெரியுமா..??

    June 16, 2026

    12வது சர்வதேச யோகா தினம்..!! கொல்கத்தா நிகழ்ச்சியில் பங்கேற்கிறார் பிரதமர் மோடி..!!

    June 16, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    வெள்ளை  அறிக்கை ஒரு ‘ஃப்ளாப் ஷோ’… தங்கம் தென்னரசு விளாசல்

    தமிழகத்தின் கழுத்தை நெரிக்கும் 6 நிதி நெருக்கடிகள்… வெள்ளை அறிக்கை தரும் பகீர் எச்சரிக்கை!

    இட ஒதுக்கீடு உயர்வு கோரிக்கையை  தவறாகச் சித்தரிப்பதா? பாஜகவுக்கு எஸ்.டி.பி.ஐ கண்டனம்

    தமிழ்நாட்டின் நிதி நிலைமை: வெள்ளை அறிக்கை வெளியிட்டார் நிதி அமைச்சர் மரியவில்சன்

    யாருக்கு யார் பாடம் நடத்துவது?  ஜெயக்குமார் Vs ஜோசப் விஜய்

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.