Close Menu
    What's Hot

    தவெக எம்.எல்.ஏ வெற்றிக்கு எதிராக வழக்கு..! ஊழல் செய்து வெற்றி பெற்றதாக குற்றச்சாட்டு..!

    ஸ்லோவாக்கியாவில் பிரதமர் மோடி..!! மாணவர்களின் யோகா சாகசத்தை கண்டு நெகிழ்ச்சி..!!

    12வது சர்வதேச யோகா தினம்..!! கொல்கத்தா நிகழ்ச்சியில் பங்கேற்கிறார் பிரதமர் மோடி..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
    TN Talks
    Home»சினிமா»1,519 படங்கள் ரிலீஸ்! 10 மட்டுமே சூப்பர் ஹிட்!
    சினிமா

    1,519 படங்கள் ரிலீஸ்! 10 மட்டுமே சூப்பர் ஹிட்!

    Editor TN TalksBy Editor TN TalksDecember 25, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    filmsss
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    2025-ம் ஆண்டில் வெளியான 1,519-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் 10 படங்கள் மட்டுமே பிரம்மாண்ட வெற்றி பெற்றுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

    ஒவ்வொரு வருடமும் இந்தியாவில் உருவாகும் படங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த வருடமும் தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் அதிக திரைப்படங்கள் உருவாகியுள்ளன. இந்தியா முழுவதும் பல மொழிகளில் சுமார் 1,519-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் இந்தாண்டு வெளியாகி இருக்கின்றன. இதன் மூலம் மொத்தம் ரூ.12,291 கோடி வசூலாகியுள்ளன. இதில், 10 படங்கள் மட்டும் ரூ.4,443 கோடியை ஈட்டி அதிக வசூல் செய்த இந்தியத் திரைப்படங்களாக உருவெடுத்துள்ளன.

    இதில் ரன்வீர் சிங், சாரா அர்ஜுன், மாதவன் நடித்த ‘துரந்தர்’, வசூலில் முதலிடத்தில் இருந்த ரிஷப் ஷெட்டியின் ‘காந்தாரா: சாப்டர் 1’ திரைப்படத்தை முந்தியிருக்கிறது. ‘துரந்தர்’ இந்தியாவில் ரூ.600 கோடியும் உலகம் முழுவதும் இப்போது வரை ரூ.925 கோடியையும் வசூலித்து ஓடிக் கொண்டிருக்கிறது. இதன் வசூல் இன்னும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

    ‘காந்தாரா: சாப்டர் 1’ திரைப்படம் இந்தியாவில் மட்டும் ரூ.622 கோடியும் உலகம் முழுவதும் ரூ.852 கோடியும் வசூலித்துள்ளது. விக்கி கவுஷல் நடித்து சூப்பர் ஹிட்டான ‘ஜாவா’ திரைப்படம், இந்தியாவில் மட்டும் ரூ.601 கோடியையும் உலகம் முழுவதும் ரூ.807 கோடியையும் ஈட்டியுள்ளது.

    அஹான் பாண்டே, அனீத் பட்டா நடித்த ‘சயாரா’, இந்தியாவில் ரூ.330 கோடியும் உலகம் முழுவதும் ரூ.570 கோடியும் வசூலித்துள்ளது. முன்னணி ஹீரோக்கள் இல்லாத புதுமுக நடிகர்களின் படம் இவ்வளவு வசூலித்திருப்பது பாலிவுட்டில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

    தமிழில் உருவாகி மற்ற மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்ட ரஜினியின் ‘கூலி’, இந்தியாவில் ரூ.285 கோடியும் உலகம் முழுவதும் ரூ.518 கோடியையும் பெற்றுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்த இப்படம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது.

    இதற்கு அடுத்தடுத்த இடங்களில், வார் 2 (உலகம் முழுவதும் ரூ.364 கோடி), மகாவதார் நரசிம்மா (ரூ.326 கோடி), லோகா சாப்டர் 1: சந்திரா (ரூ.303 கோடி), பவன் கல்யாணின் ஓஜி (ரூ.295 கோடி), அக் ஷய்குமாரின் ஹவுஸ்புல் 5 (ரூ.288 கோடி) ஆகிய திரைப்படங்கள் உள்ளன.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதண்டவாளம் நடுவில் நின்ற ஆட்டோ! வந்தே பாரத் ரயில் தப்பியது
    Next Article இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்! வைகோ கொந்தளிப்பு
    Editor TN Talks

    Related Posts

    பவிஷ் நாராயணின் புதிய அவதாரம்..! ’லவ் ஓ லவ்’ படத்தின் டீசர் வெளியீடு..!

    June 16, 2026

    வாகை சந்திரசேகருக்கு ‘யுவ புரஸ்கார்’ தேசிய விருது அறிவிப்பு..!! கௌரவித்த மத்திய அரசு..!!

    June 16, 2026

    வரும் 18ல் ‘தனுஷ் 55‘அப்டேட்!

    June 15, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தவெக எம்.எல்.ஏ வெற்றிக்கு எதிராக வழக்கு..! ஊழல் செய்து வெற்றி பெற்றதாக குற்றச்சாட்டு..!

    ஸ்லோவாக்கியாவில் பிரதமர் மோடி..!! மாணவர்களின் யோகா சாகசத்தை கண்டு நெகிழ்ச்சி..!!

    12வது சர்வதேச யோகா தினம்..!! கொல்கத்தா நிகழ்ச்சியில் பங்கேற்கிறார் பிரதமர் மோடி..!!

    மாற்றுத்திறனாளி மூதாட்டிக்கு பாலியல் தொல்லை..! 28வயது இளைஞரின் கொடூர செயல்..!

    எத்தியோப்பியாவில் பயங்கரம்: பள்ளத்தில் கவிழ்ந்த பயணிகள் பேருந்து..!! 31 பேர் உயிரிழப்பு..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.