Close Menu
    What's Hot

    பள்ளி வேன் சக்கரத்தில் சிக்கி 3-ம் வகுப்பு மாணவி உயிரிழப்பு!. ஏற்காடு அருகே சோகம்!

    ஜூன் 21, 22ம் தேதி வண்டலூர் பூங்கா போறீங்களா..!! அப்போ முதல்ல இத தெரிஞ்சிக்கோங்க..!!

    இளைஞர்களின் நலன் காக்க ரூ.2400 கோடி நிதி ஒதுக்கீடு..!! மோடி அரசுக்கு நயினார் நன்றி..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»விளையாட்டு»பிரதமரின் ராஷ்ட்ரிய பால புரஸ்கார் விருதை பெற்றார் வைபவ் சூர்யவன்ஷி
    விளையாட்டு

    பிரதமரின் ராஷ்ட்ரிய பால புரஸ்கார் விருதை பெற்றார் வைபவ் சூர்யவன்ஷி

    Editor TN TalksBy Editor TN TalksDecember 26, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    award
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    வளர்ந்து வரும் இளம் இந்திய கிரிக்கெட் வீரரான, 14 வயதே ஆன வைபவ் சூர்யவன்ஷிக்கு, பிரதமரின் ராஷ்ட்ரிய பால புரஸ்கார் விருதை ஜனாதிபதி திரவுபதி முர்மு வழங்கினார்.

    வீரம், கலை, கலாசாரம், சமூக சேவை மற்றும் விளையாட்டு உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்கும் குழந்தைகளுக்கு பிரதமரின் தேசிய சிறார் விருது ( ராஷ்ட்ரிய பால புரஸ்கார்) விருது ஆண்டுதோறும் வழங்கி கவுரவிக்கப்படுகிறது. அந்த வகையில் , இந்தாண்டுக்கான விருதுக்கு 20 சிறுவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    சிறுவர்களுக்கான விருதை டில்லியில் உள்ள விக்யான் பவனில் நடந்த நிகழ்ச்சியில் ஜனாதிபதி திரவுபதி முர்மு வழங்கினார். இந்த விருதை கிரிக்கெட் போட்டிகளில் சாதனை மேல் சாதனை குவித்து வரும் 14 வயதேயான வைபவ் சூர்யவன்ஷி பெற்றுக் கொண்டார்.
    தொடர்ந்து, விருது பெற்ற குழந்தைகளுடன் பிரதமர் மோடி உரையாற்ற இருக்கிறார்.

    யார் இந்த வைபவ் சூர்யவன்ஷி?

    தற்போது நடந்து வரும் விஜய் ஹசாரே கிரிக்கெட் தொடரில் பீஹார் அணிக்காக விளையாடிய வைபவ் சூர்யவன்ஷி, அதிரடியாக விளையாடி 36 பந்தில் சதம் அடித்தார். இதன் மூலம் லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் குறைந்த வயதில் சதம் அடித்த இளம் வீரர் எனும் சாதனையை படைத்தார். மேலும் 59 பந்துகளில் 150 ரன் எட்டியபோது அதிவேக 150 ரன்கள் எடுத்த ஏபிடி வில்லியர்ஸின் சாதனையை முறியடித்தார். இந்தப் போட்டியில் 84 பந்துகளில் 190 ரன் குவித்தார்.
    இவர் ஏற்கனவே 2025 பிரீமியர் கிரிக்கெட் சீசனில் ராஜஸ்தான் அணிக்காக 38 பந்துகளில் 101 ரன் அடித்து, டி20 ஆண்கள் கிரிக்கெட்டில் சதம் அடித்த மிக இளைய வீரர் ஆனார். அதுமட்டுமில்லாமல், அண்மையில் நடந்து முடிந்த 19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசிய கோப்பை தொடரில் 95 பந்தில் 171 ரன் சேர்த்தார். 56 பந்தில் சதம் அடித்தார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஇங்கிலாந்து அணி பயிற்சியாளராக ரவி சாஸ்திரியை நியமிக்க மான்டி பனேசர் கோரிக்கை
    Next Article 2026ம் ஆண்டின் முதல் கூட்டத்தொடர்: ஜனவரி 20ல் கூடுகிறது தமிழக சட்டசபை
    Editor TN Talks

    Related Posts

    எங்களுக்கு இவருதான் தல..! மெஸ்ஸிக்கு புதிய பட்டம்..! ஃபிஃபா வெளியிட்ட புகைப்படம் வைரல்..!

    June 19, 2026

    தென் கொரியாவை சாய்த்த மெக்ஸிகோ!. உலகக்கோப்பை களத்தில் விறுவிறுப்பு!

    June 19, 2026

    ஃபிஃபா அப்டேட் : செக் குடியரசு – தென்னாப்ரிக்கா இடையிலான போட்டி டிரா..!

    June 19, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    பள்ளி வேன் சக்கரத்தில் சிக்கி 3-ம் வகுப்பு மாணவி உயிரிழப்பு!. ஏற்காடு அருகே சோகம்!

    ஜூன் 21, 22ம் தேதி வண்டலூர் பூங்கா போறீங்களா..!! அப்போ முதல்ல இத தெரிஞ்சிக்கோங்க..!!

    இளைஞர்களின் நலன் காக்க ரூ.2400 கோடி நிதி ஒதுக்கீடு..!! மோடி அரசுக்கு நயினார் நன்றி..!!

    ஜூன் 29-ல் முதல்வர் விஜய் தலைமையில் ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் அதிகாரிகள் மாநாடு!

    வால்பாறை குடியிருப்பு பகுதியில் உலா வரும் சிறுத்தை!. பொதுமக்கள் அச்சம்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.