Close Menu
    What's Hot

    “ஆம்னி பேருந்து கட்டண கொள்ளையைத் தடுக்க மனமில்லையா?” அரசை விளாசிய நீதிமன்றம்

    இனி ஹெலிகாப்டரில் NEET வினாத்தாள்கள்… நெல்லையில் நடந்த சோதனை ஓட்டம்

    மருது சகோதரர்களின் ஜம்புத்தீவு பிரகடன நாள்; ஆளுநர் அர்லேகர் நினைவூட்டல்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
    TN Talks
    Home»அரசியல்»பழனிசாமிக்கு அஜித் படம் பரிசளிப்பு: அதிமுக பிரச்சாரத்தில் சுவாரஸ்யம்!
    அரசியல்

    பழனிசாமிக்கு அஜித் படம் பரிசளிப்பு: அதிமுக பிரச்சாரத்தில் சுவாரஸ்யம்!

    Editor TN TalksBy Editor TN TalksDecember 29, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    edappadi
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சோழிங்கநல்லூரில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அஜித் படம் பரிசளிக்கப்பட்ட நிகழ்வு கவனம் ஈர்த்துள்ளது.

    பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அடுத்ததாக சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட பெருங்குடி, எம்ஜிஆர் பிரதான சாலை திறந்தவெளித் திடலில் பிரச்சாரம் செய்தார்.

    இதில் தமிழ்நாடு மாநில பாஜக முன்னாள் தலைவர், முன்னாள் ஆளுநருமான தமிழிசை சவுந்தர்ராஜன், அதிமுக மற்றும் பாஜக நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர். கூட்டம் நடைபெற்ற பகுதிக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது பிரச்சார வாகனத்தில் வந்து கொண்டிருந்த போது அதிமுக தொண்டர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். பலரும் அவருக்கு மலர்க்கொத்துகளையும், பொன்னாடைகளையும் அன்பளிப்பாக வழங்கினர்.

    அப்போது தொண்டர்கள் சிலர் நடிகர் அஜித் மற்றும் இபிஎஸ் இருவரும் இருக்கும் புகைப்படம் ஒன்றை ஃப்ரேம் செய்து அவருக்கு பரிசளித்தனர். அதனை இபிஎஸ் மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொள்ளும் வீடியோ வைரலாகி வருகிறது.

    கடந்த சில தினங்களுக்கு முன்பு எடப்பாடி பழனிசாமியின் பிரச்சாரக் கூட்டங்களில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடிகள் காணப்பட்டன. இதனையடுத்து விரைவில் அதிமுக கூட்டணியில் தவெக இடம்பெறும் என்று பலரும் கூறிவந்தனர். அதன்பிறகு அதற்கான முன்னெடுப்புகள் எதுவும் நடப்பதாக தெரியவில்லை. அதிமுகவில் இருந்த செங்கோட்டையனும் தற்போது தவெகவில் இணைந்து விட்டார். இந்த சூழலில் எடப்பாடி பழனிசாமியின் பிரச்சாரக் கூட்டத்தில் அவருக்கு அஜித் படம் பரிசாக வழங்கப்பட்ட நிகழ்வு கவனம் ஈர்த்துள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleநயினார் நாகேந்திரனுக்கு கறுப்பு கொடி காட்டிய பெண் : திடீரென மயங்கியதால் பரபரப்பு
    Next Article கூட்டணி பற்றி இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்” – ஜி.கே.மணி தகவல்
    Editor TN Talks

    Related Posts

    மருது சகோதரர்களின் ஜம்புத்தீவு பிரகடன நாள்; ஆளுநர் அர்லேகர் நினைவூட்டல்

    June 16, 2026

    WhySilentCM? ; காட்டாட்சி வீழ்வது உறுதி –  உதயநிதி சாடல்

    June 16, 2026

    ரஜினியுடன் பாஜக தலைவர்கள் சந்திப்பு; அண்ணாமலையால் பீதியா?

    June 16, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    “ஆம்னி பேருந்து கட்டண கொள்ளையைத் தடுக்க மனமில்லையா?” அரசை விளாசிய நீதிமன்றம்

    இனி ஹெலிகாப்டரில் NEET வினாத்தாள்கள்… நெல்லையில் நடந்த சோதனை ஓட்டம்

    மருது சகோதரர்களின் ஜம்புத்தீவு பிரகடன நாள்; ஆளுநர் அர்லேகர் நினைவூட்டல்

    மதுபோதையில் சில்மிஷம்; பெட்ரோல் ஊற்றி தீ வைக்க முயற்சி; கூலிங்கிளாஸ் ஆசாமியை வெளுத்தெடுத்த பெண்கள்

    பெண் படுக்கையில் ஆண் நோயாளி – இது கோவை அரசு மருத்துவமனை அவலம் ;  எமெர்ஜென்சி வார்டில் தொடரும் துயரும்

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.