Close Menu
    What's Hot

    ஓ.எஸ்.எம். முறையில் குளறுபடி –  சிபிஎஸ்இ தலைவர் ராகுல்சிங் அதிரடி மாற்றம்

    குடியரசுத் தலைவருடன் தென்னாப்பிரிக்க துணை அதிபர் சந்திப்பு

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»உலகம்»வெளிநாடுகளில் இருந்து இந்தியர்கள் வெளியேற்றம்: அமெரிக்காவை விட முஸ்லிம் நாடுகளில் அதிகம்
    உலகம்

    வெளிநாடுகளில் இருந்து இந்தியர்கள் வெளியேற்றம்: அமெரிக்காவை விட முஸ்லிம் நாடுகளில் அதிகம்

    Editor TN TalksBy Editor TN TalksDecember 29, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    trump 2
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    அமெரிக்​கா​வில் சட்டவிரோதமாக வசிக்கும் வெளி​நாட்டினரை அதிபர் டொனல்டு ட்ரம்ப் நாடு கடத்தி வருகிறார். அதன்படி இந்தியர்களும் ஆயிரக்கணக்கில் திருப்பி அனுப்பப்பட்டனர்.

    எனினும், அமெரிக்​காவை விட முஸ்​லிம் நாடு​களில் இருந்து வெளி​யேற்​றப்​படும் இந்தியர்களின் எண்​ணிக்கை அதி​க​மாக உள்​ளது. இது குறித்து சமீபத்தில் முடிவடைந்த நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் போது, மாநிலங்​களவை​யில் கேட்​கப்​பட்ட ஒரு கேள்விக்கு எழுத்​துப்​பூர்​வ​மாக வெளி​யுறவுத் துறை இணை அமைச்​சர் கீர்த்தி வர்​தன் சிங் அளித்த பதிலில் கூறி​யிருப்​ப​தாவது:

    கடந்த 5 ஆண்​டு​களில் அமெரிக்​காவை விட சவுதி அரேபியா அதிக இந்​தி​யக் குடிமக்​களை நாடு கடத்​தி​யுள்​ளது. இதில், விசா காலா​வதி மற்​றும் தொழிலா​ளர் சட்ட மீறல்​கள் அடங்​கும்.

    உண்​மை​யில், பல வெளி​நாட்டு அரசுகள் தடுப்​புக்​காவல் தரவு​களைப் பகிர்​வ​தில்​லை. இருப்​பினும், அவசர கால விசாக்​களின் மூலம் வெளி​நாடு​களில் உள்ள இந்​தி​யர்​களுக்கு எதி​ராக எடுக்​கப்​பட்ட நடவடிக்​கை​களின் விவரங்​கள் வெளி​யாகி உள்ளது.

    அமெரிக்​கா​வில் கடுமை​யான குடியேற்​றச் சட்​டங்​கள் அறிவித்த போதி​லும், அங்​கிருந்து நாடு கடத்​தப்​பட்ட இந்​தி​யக் குடிமக்​களின் எண்​ணிக்கை குறை​வாகவே உள்​ளது.

    அமெரிக்​கா​வில் உள்ள இந்​தி​யத் தூதரகங்​களிட​மிருந்து வெளி​யுறவுத் துறை அமைச்​சகத்​தால் பெறப்​பட்ட தரவு​களின்​படி, அமெரிக்க தூதரகங்​களான சான் பிரான்​சிஸ்​கோ, நியூ​யார்க், அட்​லாண்​டா, ஹூஸ்​டன், சிகாகோ ஆகிய​வற்​றின்​படி, இந்​தி​யர்​கள் வெளி​யேற்​றப்​படு​வது பெரும்​பாலும் இரண்டு இலக்​கங்​களில் அல்​லது ஒரு சில நூறு எண்​ணிக்​கை​யில் மட்​டுமே உள்​ளன, இது வளை​குடா நாடு​களின் புள்​ளி​விவரங்​களை விட மிகக் குறைவு.

    இந்​தி​யர்​களின் வெளி​யேற்​றங்​கள் பெரும்​பாலும், விசா காலா​வ​தி​யான பிறகு தங்​கு​வது, பணி அனு​மதி இல்​லாமல் வேலை செய்​வது, உரிமை​யாளர்​களிட​மிருந்து தப்பி ஓடு​வது, உள்​ளூர் தொழிலா​ளர் சட்​டங்​களை மீறு​வது உள்​ளிட்ட காரணங்​களால் இந்​தி​யர்​கள் வெளி​யேற்​றப்​பட்​டுள்​ளனர். பல இந்​தி​யர்​களிடம் செல்​லுபடி​யாகும் பயண ஆவணங்​கள் இருப்​ப​தால், அவசர​கால விசாக்​களின் தேவை குறைந்​துள்​ளது. இவ்​வாறு அமைச்​சர் தெரி​வித்​தார்.

    அமைச்​சர் கீர்த்தி சிங் பதிலின் இணைப்​பில் சில புள்ளி விவரங்களும் அளிக்​கப்​பட்​டுள்​ளன. அதன்​படி, சவுதி அரேபி​யா​விலிருந்து கடந்த 2021-ல் 8,887, 2022-ல் 10,277, 2023-ல் 11,486, 2024 -ல் 9,206 மற்​றும் 2025 -ல் இது​வரை 7,019 இந்​தி​யர்​கள் வெளி​யேற்​றப்​பட்​டுள்​ளனர்.

    அமெரிக்​கா​வின் புள்​ளி​விவரத்​தின்​படி, 2021-ல் 805, 2022-ல் 862, 2023-ல் 617, 2024 -ல் 1,368 மற்​றும் 2025 -ல் 3,414 இந்​தி​யர்​கள்​ வெளி​யேற்​றப்​பட்​டுள்​ளனர்​.

     

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article“திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 10 தொகுதிகள் வேண்டும்” – வைகோவிடம் நிர்வாகிகள் வலியுறுத்தல்
    Next Article சிறை’ விமர்சனம்: மனிதத்தை வலியுறுத்தும் உணர்வுபூர்வ சினிமா!
    Editor TN Talks

    Related Posts

    இந்தியாவை நாங்கள் ஆக்கிரமித்துள்ளோம்!. நேபாள பிரதமர் பேச்சு!.

    June 1, 2026

    உரிமைகளை பாதுகாக்க தவறும் ஒப்பந்தத்தை ஏற்கமாட்டோம்!- ஈரான்

    May 31, 2026

    வன்முறையாக மாறிய சாம்பியன்ஸ் லீக் கொண்டாட்டம்!. கலவர பூமியான பாரிஸ்!.

    May 31, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ஓ.எஸ்.எம். முறையில் குளறுபடி –  சிபிஎஸ்இ தலைவர் ராகுல்சிங் அதிரடி மாற்றம்

    குடியரசுத் தலைவருடன் தென்னாப்பிரிக்க துணை அதிபர் சந்திப்பு

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026

    குடியரசுத் தலைவருடன் தென்னாப்பிரிக்க துணை அதிபர் சந்திப்பு

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.