Close Menu
    What's Hot

    இனி சும்மா இருக்கக்கூடாது..!! இபிஎஸ் எடுத்த முக்கிய முடிவு..!! புதுக்கோட்டை அதிமுகவுக்கு புதிய நிர்வாகிகள்..!!

    சி.விஜயபாஸ்கர் மீதான குட்கா முறைகேடு வழக்கு!. உயர்நீதிமன்றம் கெடு விதிப்பு!

    ராணிப்பேட்டை : ஆசிரியர் தகுதி தேர்விற்கு தாமதமாக வந்த பெண்..! அதிகாரிகளிடம் கெஞ்சிய காட்சி வைரல்..! 

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»உலகம்»புதின் வீடு மீது ட்ரோன் தாக்குதல்? – ட்ரம்ப் கோபம்; ஜெலன்ஸ்கி விளக்கம்!
    உலகம்

    புதின் வீடு மீது ட்ரோன் தாக்குதல்? – ட்ரம்ப் கோபம்; ஜெலன்ஸ்கி விளக்கம்!

    Editor TN TalksBy Editor TN TalksDecember 30, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    trump 1
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

     புதின் வீடு மீது உக்ரைன் படைகள் ட்ரோன் தாக்குதல் நடத்தியதாக வெளியான செய்திக்கு அதிபர் ட்ரம்ப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஆனால், “இது ரஷ்யாவின் வழக்கமான பொய்” என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

    உக்ரைன் – ரஷ்யா போர் மூன்றாண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருகிறது. இந்தப் போரை நிறுத்துவதில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அதிக அக்கறை காட்டி வருகிறார். இதுவரை பல போர்களை நிறுத்திவிட்டதாக உரிமை கோரும் ட்ரம்ப்புக்கு உக்ரைன் – ரஷ்யா போரை முடிவுக்குக் கொண்டு வராதது சவாலாகவே இருந்து வருகிறது.

    இந்நிலையில், புதின் வீடு மீது உக்ரைன் படைகள் ட்ரோன் தாக்குதல் நடத்தியதாக வெளியான செய்திக்கு அதிபர் ட்ரம்ப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் ஃப்ளோரிடாவில் செய்தியாளர்களிடம் பேசுகையில், “ரஷ்ய அதிபர் புதின் வீடு மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதை யார் என்னிடம் சொன்னார்கள் தெரியுமா?. புதினே என்னை தொலைபேசியில் அழைத்து இதனைத் தெரிவித்தார். இது நல்லதல்ல. நான் மிகவும் கோபமாக இருக்கிறேன்.

    அதேவேளையில் இந்தச் செய்தி பொய்யாகவும் இருக்கலாம். தாக்குதல் நடக்காமல் இருந்திருக்கவும் வாய்ப்புள்ளது. ஒருவேளை தாக்குதல் உண்மையென்றால். அது நடந்திருக்க இது சரியான தருணம் இல்லை.” என்றார்.

    இந்தத் தாக்குதல் குறித்து ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ், “போரை நிறுத்துவதற்கான அமைதிப் பேச்சுவார்த்தையில் ரஷ்யா ஈடுபட்டாலும், உக்ரைனின் இந்த தாக்குதல் கடும் கண்டனத்துக்குரியது. இந்த தாக்குதல் முயற்சி அரசு தீவிரவாதம் அன்று வேறென்ன? இதற்காக உக்ரைன் மீது எதிர் தாக்குதல் நடத்துவோம். அதற்கான இலக்குகளை தேர்ந்தெடுத்துவிட்டோம்.” என்று தெரிவித்துள்ளார்.

    ரஷ்ய தலைநகர் மாஸ்கோவின் மேற்கே உள்ள நோவாகோரோட் பகுதியில் புதினின் வீடு உள்ளது. இதைத்தன் உக்ரைன் தொலைதூரம் சென்று தாக்கவல்ல ட்ரோன்களை ஏவி தாக்கியுள்ளதாக ரஷ்யா குற்றஞ்சாட்டுகிறது. புதினின் வீட்டைக் குறிவைத்து 91 ட்ரோன்கள் ஏவப்பட்டதாக ரஷ்யா குற்றஞ்சாட்டியுள்ளது.

    ஜெலன்ஸ்கி மறுப்பு: இந்தக் குற்றச்சாட்டுகளை திட்டவட்டமாக மறுக்கும்  உக்ரைன் அதிபர் வொலிடிமிர் ஜெலன்ஸ்கி, “அமெரிக்க அதிபர் ட்ரம்ப் குழுவின் போர் நிறுத்த முயற்சியைக் குலைக்கவே ரஷ்யா இப்படிச் செய்கிறது.

    புதின் வீட்டின் மீதான தாக்குதல் என்பது புனைவுக் கதை. போர் நிறுத்தத்தைத் தடுக்கும் ரஷ்யாவின் முயற்சி. இன்னும் சொல்லப்போனால், இது ரஷ்யாவின் வழக்கமான பொய்.

    ரஷ்யா கீவ் நகர் மீதும், அமைச்சரவை மீதும் ஏற்கெனவே தாக்குதல் நடத்தி உள்ளது. ஆனால், பதில் தாக்குதல் நடத்தினால், போர் நிறுத்த முயற்சி பாதிக்கப்படும் என்று உக்ரைன் எதுவுமே செய்யவில்லை.” என்று கூறியுள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதட்டச்சு, அரசு கணினி தேர்வுக்கு இன்றுமுதல் விண்ணப்பிக்கலாம்
    Next Article அறிவாலயத்தை முற்றுகையிட்ட தூய்மை பணியாளர்கள்!. குண்டுக்கட்டாக கைது!.
    Editor TN Talks

    Related Posts

    ஈரானில் கமேனியின் பிரம்மாண்ட இறுதிச்சடங்கு தொடங்கியது!. மகன் மொஜ்தபா பங்கேற்கவில்லை!

    July 4, 2026

    நியூசிலாந்து செல்கிறார் பிரதமர் மோடி..!! 40 ஆண்டுகளுக்குப் பிறகு வரலாற்றுச் சிறப்புமிக்க சந்திப்பு..!!

    July 3, 2026

    நிலநடுக்கங்களால் வெனிசுலாவில் கடும் பாதிப்பு..! ரூ.95,000கோடி இழப்பு என தகவல்..!

    July 2, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    இனி சும்மா இருக்கக்கூடாது..!! இபிஎஸ் எடுத்த முக்கிய முடிவு..!! புதுக்கோட்டை அதிமுகவுக்கு புதிய நிர்வாகிகள்..!!

    சி.விஜயபாஸ்கர் மீதான குட்கா முறைகேடு வழக்கு!. உயர்நீதிமன்றம் கெடு விதிப்பு!

    ராணிப்பேட்டை : ஆசிரியர் தகுதி தேர்விற்கு தாமதமாக வந்த பெண்..! அதிகாரிகளிடம் கெஞ்சிய காட்சி வைரல்..! 

    த்ரிஷா குறித்த பேச்சு – பாஜகவைப் பார்த்து பயப்படுகிறார் விஜய் – அனிதா ராதாகிருஷ்ணன் பஞ்ச்!

    சூழ்நிலைக்கேற்ப மனதை மாற்றிக் கொள்கிறார் அனிதா ராதாகிருஷ்ணன்; அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.