Close Menu
    What's Hot

    “கூவத்தைப் பார்த்தபோது தெரியவில்லையா?” – ஆளுநருக்கு சு. வெங்கடேசன் பதிலடி

    பழிக்குப் பழி: நெல்லை அருகே தந்தை, 5 வயது மகன் வெட்டிக்கொலை – தலையை துண்டித்து கொடூரம்

    ஜெயிலர் 2 படத்தின் அசத்தல் அப்டேட்..! படக்குழுவின் அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகம்..!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»அரசியல்»கூட்டாட்சி தத்துவத்திற்கு பெரும் பின்னடைவு! செல்வப்பெருந்தகை கண்டனம்
    அரசியல்

    கூட்டாட்சி தத்துவத்திற்கு பெரும் பின்னடைவு! செல்வப்பெருந்தகை கண்டனம்

    Editor TN TalksBy Editor TN TalksDecember 30, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    selvaperunthagai protest
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சென்னை பல்கலைகழக சட்டத் திருத்த மசோதாவை குடியரசுத் தலைவர் திருப்பி அனுப்பியிருப்பது கூட்டாட்சி தத்துவத்திற்கு பெரிய பின்னடைவு என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

    தமிழ்நாடு அரசு கடந்த 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் சென்னை பல்கலைக் கழக சட்ட திருத்த மசோதாவை சட்டசபையில் தாக்கல் செய்து நிறைவேற்றியது. இந்த சட்டத் திருத்தத்தின் மூலம் சென்னை பல்கலைக் கழக துணை வேந்தர் நியமனம் மற்றும் நீக்கம் தொடர்பான அதிகாரங்களை வேந்தரான ஆளுநரிடமிருந்து மாநில அரசுக்கு மாற்றும் வகையில் திருத்தங்கள் செய்யப்பட்டிருந்தன. அதில் பல்கலைக் கழக சிண்டிகேட் நிதிச் செயலாளரை உறுப்பினராக சேர்ப்பதற்கும் வழிவகை செய்யப்பட்டிருந்தன.

    தமிழ்நாடு சட்டசபையில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், ஆளுநர் ஆர்.என். ரவி அதற்கு ஒப்புதல் தராமல் மூன்றாண்டுகள் கழித்து குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தார்.இந்த நிலையில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்களும், சென்னை பல்கலைக் கழக மசோதாவுக்கு ஒப்புதல் தராமல் திருப்பி அனுப்பியுள்ளார். இதன்மூலம் இந்த சட்ட திருத்த மசோதா அமலுக்கு வராத நிலை உருவாகியுள்ளது.

    ஏற்கனவே, தமிழ்நாடு சட்டப்பேரவை நிறைவேற்றிய 10-க்கும் மேற்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் முடக்கி வைத்திருப்பதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கில் ஏப்ரல் 2025 வாக்கில் உச்சநீதிமன்றம் தெளிவான நெறிமுறைகளை வகுத்தது. தமிழ்நாடு சட்டசபை நிறைவேற்றுகிற மசோதாவுக்கான ஒப்புதலை ஆளுநர் மூன்று மாதங்களுக்கு மேலாக நிலுவையில் வைத்திருக்க முடியாது. திருப்பி அனுப்பிய மசோதாவுக்கு ஆளுநர் ஒரு மாதத்திற்குள் முடிவெடுக்க வேண்டுமென்றும் அந்த தீர்ப்பில் தெளிவாக கூறியிருந்தது.

    இந்நிலையில், மசோதாக்களுக்கு குடியரசு தலைவர் ஒப்புதல் அளிப்பது குறித்து 14 கேள்விகளுக்கு அரசமைப்பு சட்டப் பிரிவு 142 மூலம் கருத்து கேட்கப்பட்டது. உச்சநீதிமன்றம் நவம்பர் 2025 இல் வழங்கிய தீர்ப்பில் மாநில அரசுக்கு முழு அதிகாரம் இருப்பதை ஏற்றுக் கொண்டது. ஒரு மாநிலத்தில் இரு நிர்வாக அதிகாரங்கள் இருக்கக் கூடாது, அமைச்சரவைக்குத் தான் முழு அதிகாரம், மசோதா மற்றும் துணை வேந்தர்கள் நியமனம் தொடர்பான விவகாரத்தில் ஆளுநர் ஆர்.என். ரவிக்கு எதிராக தீர்ப்பில் கூறப்பட்டிருந்தது.

    ஆளுநர் கிடப்பில் போட்டு வைத்து மற்றும் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்திருந்த 10 மசோதாக்களுக்கு பிரிவு 142-ஐ பயன்படுத்தி கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி ஒப்புதல் வழங்கி தீர்ப்பளித்தது. அரசமைப்புப் சட்ட பிரிவு 200, 201 ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவருக்கு உள்ள அதிகாரங்கள் வரையறை செய்யப்பட்டுள்ளன. இதில் ஆளுநரின் அதிகாரங்கள் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதில் கால நிர்ணயம் செய்யப்பட்டது. அந்த அடிப்படையில் குடியரசுத் தலைவர் அலுவலகத்தில் நிலுவையில் இருந்த பல்கலைக்கழக துணை வேந்தர் நியமன மசோதா திருப்பி அனுப்பப்பட்டிருப்பது கூட்டாட்சித் தத்துவத்திற்கு மிகப்பெரிய பின்னடைவாக அமைந்திருக்கிறது. ஒன்றிய பா.ஜ.க. அமைச்சரவையின் அறிவுரை மற்றும் ஆலோசனையின்படி செயல்படுகிற குடியரசுத் தலைவர் தமிழ்நாடு அரசுக்கு எதிராக முடிவெடுத்திருப்பது மிகுந்த கண்டனத்திற்குரியது.

    பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான குஜராத் மற்றும் தெலுங்கானாவில் பல்கலைக் கழக துணை வேந்தர்களை மாநில அரசு தான் நியமிக்கிறது. குஜராத் மாநிலத்திற்கு இருக்கிற உரிமை தமிழ்நாடு அரசுக்கு ஏன் மறுக்கப்படுகிறது ? மாநில அரசின் நிதியிலிருந்து செயல்படுகிற பல்கலைக் கழகங்களுக்கு துணை வேந்தர்களை நியமிக்கிற அதிகாரத்தை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுக்கு வழங்காமல் ஆளுநருக்கு வழங்க முற்படுவது, அதற்கு குடியரசுத் தலைவர் இசைந்து போவது ஏற்கனவே உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்புகளுக்கு எதிரானதாகும்.

    தற்போது குடியரசுத் தலைவர் மூன்றாண்டுகளுக்குப் பிறகு, பல்கலைக் கழக துணை வேந்தர் நியமன மசோதாவை திருப்பி அனுப்பியிருப்பது குறித்து அடுத்தகட்ட சட்டப்பூர்வ நடவடிக்கையை தமிழ்நாடு முதலமைச்சர் பரிசீலிக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். தமிழ்நாடு முதலமைச்சர் எடுக்கின்ற அனைத்து நடவடிக்கைகளுக்கும் தமிழக நலனில் அக்கறையுள்ள அனைத்து கட்சிகளும் உறுதுணையாக இருப்பது மிகமிக அவசியமாகும்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் செல்வப்பெருந்தகை குறிப்பிட்டுள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகாசோலை மோசடி வழக்கு! மதிமுக எம்எல்ஏக்கு 2 ஆண்டு ஜெயில்!
    Next Article பேருந்துகளின் தகுதியை ஆய்வு செய்ய ஆணையம்! மத்திய-மாநில அரசுகளின் பதிலை கோரியது ஐகோர்ட்
    Editor TN Talks

    Related Posts

    “கூவத்தைப் பார்த்தபோது தெரியவில்லையா?” – ஆளுநருக்கு சு. வெங்கடேசன் பதிலடி

    July 2, 2026

    கோவளம் கூட்டத்தில் பங்கேற்காதது ஏன்? இந்திய கம்யூனிஸ்ட் விளக்கம்

    July 2, 2026

    அதே பழைய பெயர் பலகை; சட்டமன்ற அலுவலகத்தை திறந்த எஸ்.பி.வேலுமணி

    July 2, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    “கூவத்தைப் பார்த்தபோது தெரியவில்லையா?” – ஆளுநருக்கு சு. வெங்கடேசன் பதிலடி

    பழிக்குப் பழி: நெல்லை அருகே தந்தை, 5 வயது மகன் வெட்டிக்கொலை – தலையை துண்டித்து கொடூரம்

    ஜெயிலர் 2 படத்தின் அசத்தல் அப்டேட்..! படக்குழுவின் அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகம்..!

    நிலநடுக்கங்களால் வெனிசுலாவில் கடும் பாதிப்பு..! ரூ.95,000கோடி இழப்பு என தகவல்..!

    சிவகாசி : பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து..! மீட்பு பணிகள் தீவிரம்..!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.