Close Menu
    What's Hot

    காங்கிரசுக்கு மாநிலங்களவை சீட் – தவெக தாராளம்! எம்.பி ஆகும் ராகுல்காந்தியின் நண்பர்?

    உள்ளாட்சித் தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் தீவிரம்… வார்டுகளை  மறுவரையறை செய்ய முடிவு!

    உச்சநீதிமன்ற வரலாற்றில் பொன் நாள்..!! 5 புதிய நீதிபதிகள் இன்று பதவியேற்பு..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»அரசியல்»தினந்தோறும் போட்டோ ஷூட் நடத்தும் முதலமைச்சர் ஸ்டாலின்.. ஜெயக்குமார் விமர்சனம்
    அரசியல்

    தினந்தோறும் போட்டோ ஷூட் நடத்தும் முதலமைச்சர் ஸ்டாலின்.. ஜெயக்குமார் விமர்சனம்

    Editor TN TalksBy Editor TN TalksDecember 31, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    admkkk
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தினந்தோறும் போட்டோ ஷூட் நடத்தும் முதலமைச்சர் ஸ்டாலின் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.

    சென்னையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு பின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

    2026 சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகும் வகையில் தேர்தல் பணிகள் குறித்து மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது , கட்சியின் உள்ளரங்க கூட்டம் என்பதால் உள்ளரங்கில் விவாதிக்கப்பட்டது குறித்து பொதுவெளியில் பேச முடியாது ..

    திமுக என்கிற தமிழ்நாட்டை சீரழிக்கின்ற அராஜக ஆட்சியை மீண்டும் எம்ஜிஆர் ஜெயலலிதா ஆசியுடன் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக ஆட்சி அமையும்

    செவிடன் காதில் சங்கு ஊதினால் கூட ஓரளவுக்காவது கேட்கும் , ஆனால் திமுக அரசுக்கு கேட்கவில்லை , செவிலியர்கள் ஆசிரியர்கள் அரசுத்துறை பணியாளர்களுக்கு பல்வேறு தேர்தல் வாக்குறுதியை கொடுத்துவிட்டு இந்த அரசு நிறைவேற்றாமல் இருந்து வருகிறது , செவிலியர்கள் ஆசிரியர்கள் போராட்டம் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் கிஞ்சித்தும் கவலை கொள்ளவில்லை

    கள்ளச்சாராயம் அருந்தி 60க்கும் மேற்பட்டோர் பேர் உயிரிழந்த விவகாரத்தில் கூட கள்ளக்குறிச்சி செல்லாத முதலமைச்சர் தேர்தல் நெருங்கும் காரணத்தால் கள்ளக்குறிச்சி செல்கிறார் , தினந்தோறும் போட்டோ ஷூட் நடத்தி வருகிறார் .

    தமிழகத்தில் வேலை வாய்ப்புக்காக வரும் வடமாநில தொழிலாளருக்கு பாதுகாப்பு இல்லாத சூழலாக திருத்தணி விவகாரம் அமைந்தது , வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாட்டில் தலைகுனிவு சம்பவமாக இது அமைந்துள்ளது .

    தமிழகத்தில் போதை பழக்கவழக்கம் தலை விரித்து ஆடுகிறது , கஞ்சா பயன்பாடு அதிகரித்துள்ளது , கொஞ்சம் கூட வெட்கம் இல்லாமல் தமிழ்நாட்டில் கஞ்சா இல்லை போதை பொருட்கள் புழக்கம் இல்லை என சுகாதாரத்துறை அமைச்சரே பொய் பேசி வருகிறார் .

    தமிழகத்தில் கஞ்சா பயன்பாடு பூஜ்ஜியமாக குறைந்துள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் கூறியது ஜமுக்காலத்தில் வடிகட்டிய போய் என விமர்சனம் செய்தார் .

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஆபரேஷன் சிந்தூரின்போது மத்தியஸ்தம் செய்ததா சீனா? இந்தியா மறுப்பு
    Next Article காங்கிரசில் விருப்ப மனு அவகாசம் நீட்டிப்பா? செல்வ பெருந்தகை பதில்
    Editor TN Talks

    Related Posts

    காங்கிரசுக்கு மாநிலங்களவை சீட் – தவெக தாராளம்! எம்.பி ஆகும் ராகுல்காந்தியின் நண்பர்?

    June 2, 2026

    ஜோசப் விஜய் வாய்ச்சவடால் ஆட்சி;  தத்தக்கா பித்தக்கா தவெக அரசு – கரித்து கொட்டும் ஹெச்.ராஜா

    June 2, 2026

    பாஜக தலைவர் நிதின் நபினுடன் அண்ணாமலை முக்கிய மீட்டிங்..!! எதிர்பார்ப்பு உச்சம்..!!

    June 2, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    காங்கிரசுக்கு மாநிலங்களவை சீட் – தவெக தாராளம்! எம்.பி ஆகும் ராகுல்காந்தியின் நண்பர்?

    உள்ளாட்சித் தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் தீவிரம்… வார்டுகளை  மறுவரையறை செய்ய முடிவு!

    உச்சநீதிமன்ற வரலாற்றில் பொன் நாள்..!! 5 புதிய நீதிபதிகள் இன்று பதவியேற்பு..!!

    ராஜ்யசபா சீட்டுக்கு அடிபோடுகிறதா காங்.,? முதல்வர் விஜய்யை சந்தித்தார் ப.சிதம்பரம்..!!

    புலி பட விவகாரம்..!! முதல்வர் விஜய்க்கு எதிரான மனு தள்ளுபடி..!! சென்னை ஹைகோர்ட் அதிரடி..!!

    Trending Posts

    திரையுலகை ஆளும் சக்ரவர்த்தி ‘இசைஞானி’ இளையராஜா!

    June 2, 2026

    எந்த இடைத்தேர்தலிலும் போட்டியிட மாட்டேன்..!! திருமாவளவன் திட்டவட்டம்..!!

    June 2, 2026

    இசைஞானி இளையராஜா பிறந்தநாள்..! வாழ்த்து தெரிவிக்க குவிந்த ரசிகர்கள்..!

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026

    தமிழக அமைச்சரவை மூப்பு நிலைப் பட்டியல் வெளியீடு: முதல் 3 இடங்களில் முதலமைச்சர் விஜய், ஆனந்த், ஆதவ் அர்ஜூனா!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.