Close Menu
    What's Hot

    டுவிஸ்ட்!. காங்கிரஸுடன் கூட்டணி அமைக்க தவெக விருப்பம்!. கிரிஷ் சோடங்கர் பதில்!

    கூட்டணியை இறுதி செய்தார் ராமதாஸ்!. ஆனால்…. தொண்டர்களுக்கு மடல்!.

    தள்ளிப்போகிறதா தேர்தல்?. சென்னை வந்த தேர்தல் ஆணைய குழுவின் பிளான் என்ன?

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»அரசியல்»செங்கரும்பை உழவர்களிடமிருந்து நேரடியாக வாங்க வேண்டும்! அன்புமணி வலியுறுத்தல்
    அரசியல்

    செங்கரும்பை உழவர்களிடமிருந்து நேரடியாக வாங்க வேண்டும்! அன்புமணி வலியுறுத்தல்

    Editor TN TalksBy Editor TN TalksJanuary 5, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    anbumani 1
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp
    செங்கரும்பை இடைத்தரகர்களிடம் வாங்காமல், உழவர்களிடமிருந்து நேரடியாக வாங்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
    இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

    தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளையொட்டி, குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுடன் சேர்த்து வழங்கப்படும்  பன்னீர் கரும்பை  நடப்பாண்டிலும் உழவர்களிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்யாமல், இடைத்தரகர்களிடமிருந்து வாங்குவதற்காக நடவடிக்கைகளில் திமுக அரசு ஈடுபட்டிருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. கரும்பு கொள்முதல் செய்வதில் கூட  திமுக அரசு உழவர்களை சுரண்டுவது கண்டிக்கத்தக்கது.

    பொங்கல் பரிசுத் தொகுப்பு குறித்த அறிவிப்பை திமுக அரசு வெளியிடுவதற்கு முன்பாகவே பொங்கல் கரும்பை உழவர்களிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும்; ஒரு கரும்புக்கு ரூ.50 விலை வழங்க வேண்டும் என்று கடந்த திசம்பர் 31-ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் வலியுறுத்தியிருந்தேன்.  ஆனால், அதன் பின் பொங்கல் பரிசுத் தொகுப்பை அறிவித்த தமிழக அரசு, கரும்பு என்ன விலைக்கு, எவ்வாறு கொள்முதல் செய்யப்படும்? என்பது குறித்து இதுவரை அறிவிக்கவில்லை.

    பொங்கல் பரிசுத் தொகுப்புகள் வரும் 8-ஆம் தேதி முதல் வழங்கப்படவிருக்கும் நிலையில், அதற்கு இன்னும் இரு நாள்கள் மட்டுமே உள்ளன. அரசுத் தரப்பில் இதுவரை எந்த அறிவிப்பும் வழங்கப்படாத நிலையில், அதைப் பயன்படுத்திக் கொண்டு செங்கரும்புகளை இடைத் தரகர்கள் வாங்கிக் குவிக்கின்றனர். தமிழக அரசிடமிருந்து நேரடி கொள்முதல் குறித்த எந்த அறிவிப்பும் வெளியாகாத நிலையில், வேறு வழியின்றி இடைத்தரகர்களிடம் கரும்புகளை விற்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகியுள்ளனர்.

    தமிழ்நாடு அரசு இந்த முறை ஒரு கரும்புக்கு ரூ.35 வழங்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், உழவர்களுக்கு ஒரு கரும்புக்கு ரூ.15  மட்டுமே வழங்கப்படும் என்று இடைத்தரகர்கள் கூறியுள்ளனர். இதில் கரும்பு பறிக்கும் செலவு, கட்டும் செலவு, ஏற்றுக்கூலி ஆகியவை போக ஒரு கரும்புக்கு  ரூ.12 மட்டுமே உழவர்களுக்கு கிடைக்கும். இதன் மூலம் ஏக்கருக்கு ரூ.2.15 லட்சம் மட்டுமே உழவர்களுக்கு கிடைக்கும். பன்னீர் கரும்பு சாகுபடிக்கு ஏக்கருக்கு ரூ.2.5 லட்சம் செலவாகும் நிலையில், இவ்வளவு குறைந்த விலைக்கு கரும்பை விற்பனை செய்தால் உழவர்களுக்கு  பெரும் இழப்பு ஏற்படும்.

    பொங்கல் கரும்பை கொள்முதல் செய்வதில் கூட கலஎக்‌ஷன், கமிஷன், கரப்ஷன் செய்ய ஆட்சியாளர்கள் துடிப்பது தான் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் காரணம் ஆகும்.  இந்த அணுகுமுறையை கைவிட்டு நடப்பாண்டிலாவது கரும்பை உழவர்களிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்ய அரசு முன்வர வேண்டும்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் அன்புமணி ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமா.செயலர்களின் கருத்தை பொறுத்து கூட்டணி அமையும்!. பிரேமலதா விஜயகாந்த்!.
    Next Article எல்.கணேசன் மறைவு! வைகோ இரங்கல்
    Editor TN Talks

    Related Posts

    காங்கிரசுக்கு எத்தனை தொகுதிகள்? – முதலமைச்சருடன் கே.சி.வேணுகோபால் பேச்சுவார்த்தை

    February 23, 2026

    தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையைத் தொடங்கியது திமுக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியுடன் இன்று பேச்சுவார்த்தை

    February 22, 2026

    பழனிசாமிக்கு பாடம் புகட்டிய பிரேமலதா! நழுவவிட்ட அதிமுக.. தட்டித்தூக்கிய திமுக..! எப்படி?

    February 20, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    டுவிஸ்ட்!. காங்கிரஸுடன் கூட்டணி அமைக்க தவெக விருப்பம்!. கிரிஷ் சோடங்கர் பதில்!

    கூட்டணியை இறுதி செய்தார் ராமதாஸ்!. ஆனால்…. தொண்டர்களுக்கு மடல்!.

    தள்ளிப்போகிறதா தேர்தல்?. சென்னை வந்த தேர்தல் ஆணைய குழுவின் பிளான் என்ன?

    காணாமல் போகும் மீனவர் குடும்பங்களுக்கு மாதம் ரூ.2,000!. முதலமைச்சர் அதிரடி அறிவிப்பு!.

    தேர்தல் பரபரப்பு!. தமிழகம் வந்தார் இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்!. 

    Trending Posts

    2 மாத குழந்தையை அடுப்பில் போட்டு கொன்ற கொடூர தாய்!. தெலங்கானாவில் அதிர்ச்சி!

    February 25, 2026

    “நான் மட்டும் இல்லையென்றால் 3.5 கோடி பேர் இறந்திருப்பார்கள்!. டிரம்ப் பரபரப்பு தகவல்!

    February 25, 2026

    காணாமல் போகும் மீனவர் குடும்பங்களுக்கு மாதம் ரூ.2,000!. முதலமைச்சர் அதிரடி அறிவிப்பு!.

    February 25, 2026

    டுவிஸ்ட்!. காங்கிரஸுடன் கூட்டணி அமைக்க தவெக விருப்பம்!. கிரிஷ் சோடங்கர் பதில்!

    February 25, 2026

    கூட்டணியை இறுதி செய்தார் ராமதாஸ்!. ஆனால்…. தொண்டர்களுக்கு மடல்!.

    February 25, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.