Close Menu
    What's Hot

    பழிக்கு பழி!. 8 முக்கியப் பாலங்கள் மீது தாக்குதல்!. வளைகுடா நாடுகளுக்கு ஈரான் பகிரங்க எச்சரிக்கை!

    பிரதமர் மோடியுடன் முக்கிய ஆலோசனை!. அண்ணாமலைக்கு பறந்த ‘கட்டாய’ அழைப்பு!

    100% வரி விதித்த டிரம்ப்!. மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் அதிர்ச்சி!. இந்தியாவுக்கு பாதிப்பா?

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»திமுக அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு அதிர்ச்சி கொடுத்த ஐகோர்ட்!. ED நோட்டீஸுக்கு எதிரான மனு தள்ளுபடி!
    தமிழ்நாடு

    திமுக அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு அதிர்ச்சி கொடுத்த ஐகோர்ட்!. ED நோட்டீஸுக்கு எதிரான மனு தள்ளுபடி!

    Editor web3By Editor web3January 5, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    I.periyasamy high court
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சொத்து முடக்கம் தொடர்பாக அமலாக்கத் துறை நோட்டீசை எதிர்த்து தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    கடந்த 2006-2011-ம் ஆண்டுகளில் காலக்கட்டத்தில் வீட்டு வசதித்துறை அமைச்சராக பதவி வகித்தபோது, வருமானத்துக்கு அதிகமாக 2 கோடியே ஒரு லட்சத்து 35 ஆயிரம் ரூபாய் அளவுக்கு சொத்துக்கள் சேர்த்ததாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.

    இந்த வழக்கின் அடிப்படையில், சட்டவிரோத பண பரிமாற்றத் தடைச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த அமலாக்கத் துறை, அமைச்சர் பெரியசாமி, அவரது மகனும், பழனி தொகுதி திமுக எம்.எல்.ஏ.வுமான செந்தில்குமார், மகள் இந்திரா உள்ளிட்டோரின் வீடுகள் மற்றும் அமைச்சர், எம்.எல்.ஏ. அலுவலகங்களில் கடந்த 2025 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சோதனை நடத்தினர்.

    இந்த சோதனையில், சொத்து ஆவணங்கள், முதலீடு விவரங்கள், செல்போன், நிறுவனத்தின் வங்கிக் கணக்கு விவரங்கள் போன்றவற்றை அமலாக்கத் துறையினர் கைப்பற்றினர்.

    இதன் தொடர்ச்சியாக சொத்துக்களை முடக்கம் செய்வது தொடர்பாக விளக்கம் கேட்டு, அமைச்சர் ஐ.பெரியசாமி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு அமலாக்கத் துறை நோட்டீஸ் அனுப்பியது.

    இந்த நோட்டீசை எதிர்த்தும், அமலாக்கத் துறை விசாரணையை எதிர்த்தும் ஐ.பெரியசாமி மற்றும் அவரது குடும்பத்தினர் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த மனு, தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்த போது, சொத்து முடக்கம் தொடர்பான விசாரணை அமலாக்கத் துறை அதிகாரிகள் முன் நிலுவையில் உள்ளதாக, அமைச்சர் பெரியசாமி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து, அமலாக்கத் துறையை அணுகும்படி அறிவுறுத்திய நீதிபதிகள், அமைச்சர் ஐ.பெரியசாமி உள்ளிட்டோரின் மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஅமெரிக்காவில் இந்தியப் பெண் கொலை!. தமிழ்நாட்டைச் சேர்ந்த முன்னாள் காதலன் கைது!
    Next Article வங்கதேசத்தில் ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்ப தடை!. முகமது யூனுஸ் அதிரடி!.
    Editor web3
    • Website

    Related Posts

    பிரதமர் மோடியுடன் முக்கிய ஆலோசனை!. அண்ணாமலைக்கு பறந்த ‘கட்டாய’ அழைப்பு!

    April 3, 2026

    தங்கம் விலை அதிரடி உயர்வு!. சவரனுக்கு ரூ.800 உயர்ந்தது!. இன்றைய ரேட் இதோ!

    April 3, 2026

    தந்தை-மகன் கொலை வழக்கு: தூக்கு தண்டனை வழங்க வேண்டும்..! சிபிஐ தரப்பு வாதம்..!

    April 2, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    பழிக்கு பழி!. 8 முக்கியப் பாலங்கள் மீது தாக்குதல்!. வளைகுடா நாடுகளுக்கு ஈரான் பகிரங்க எச்சரிக்கை!

    பிரதமர் மோடியுடன் முக்கிய ஆலோசனை!. அண்ணாமலைக்கு பறந்த ‘கட்டாய’ அழைப்பு!

    100% வரி விதித்த டிரம்ப்!. மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் அதிர்ச்சி!. இந்தியாவுக்கு பாதிப்பா?

    சர்ச்சை கேட்ச்!. ஆபாச வார்த்தைகளை பயன்படுத்தினாரா அபிஷேக் சர்மா?. ஷாக் கொடுத்த பிசிசிஐ!

    தங்கம் விலை அதிரடி உயர்வு!. சவரனுக்கு ரூ.800 உயர்ந்தது!. இன்றைய ரேட் இதோ!

    Trending Posts

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.