தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட யூத் தொடரை இந்திய அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
தென்னாப்பிரிக்கா சென்றுள்ள இந்திய அணி யு19 அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில், முதல் ஒருநாள் போட்டி மழை, தொடர முடியாத நிலைமை ஏற்பட்டது. இறுதியில், டிஎல்எஸ் முறைப்படி போட்டியின் முடிவை நடுவர் அறிவித்தார். அப்போது, இந்திய யு19 அணி, 25 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதாக அறிவிக்கப்பட்டது.
இந்தநிலையில், 2வது ஒருநாள் போட்டி பெனோனியில் நடைபெற்றது. முதலில் பேட் செய்த தென்னாப்பிரிக்கா அணி 49.3 ஓவர்களில் 245 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதனிடையே மின்னல் தாக்கி இடையூறு ஏற்பட்டதால், இந்தியா 174 ரன்களை 27 ஓவர்களில் துரத்த வேண்டும் என்று இலக்கு மாற்றப்பட்டது.
அதன்படி, சூர்யவஷியின் அதிரடி அரை சதத்தால், இந்திய அணி 23.3 ஓவர்களிலேயே இலக்கை எட்டி வெற்றிபெற்றது. இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
