Close Menu
    What's Hot

    அதிமுகவுக்கு இந்த கதியா?. செம்மலை வருத்தத்துடன் விலகல்!. இபிஎஸ்-க்கு பேரதிர்ச்சி!

    காதலியை துடிக்க துடிக்க தாக்கிய காதலன்..! ஐஜி பங்களா எதிரே நடந்த கொடூரம்..!

    பிரதமர் மோடிக்கு ஸ்வீடனின் உயரிய விருது வழங்கி கவுரவிப்பு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»“ஜனநாயகன்” சென்சார் சான்றிதழ் வழக்கு!. நாளை காலை 10.30 மணிக்கு தீர்ப்பு!
    தமிழ்நாடு

    “ஜனநாயகன்” சென்சார் சான்றிதழ் வழக்கு!. நாளை காலை 10.30 மணிக்கு தீர்ப்பு!

    Editor web3By Editor web3January 8, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Jananayagan ticket booking
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    நடிகர் விஜய்யின் ஜனநாயகன் படத்துக்கு சென்சார் சான்றிதழ் வழங்க கோரிய வழக்கில் நாளை காலை 10.30 மணிக்கு சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    நடிகர் விஜய்யின் ஜனநாயகன் படம் நாளை (ஜனவரி 9 ம் தேதி) வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்படவில்லை எனக் கூறி, படத்துக்கு தணிக்கை சான்று வழங்க உத்தரவிடக் கோரி, கே. வி. என் புரொடக்சன்ஸ் படத் தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தது.

    இந்த வழக்கின் விசாரணையானது நீதிபதி பி.டீ ஆஷா முன் நடைப்பெற்ற வந்தது. ஜனநாயகன் படத்தில் சில காட்சிகளுக்கு ஆட்சேபம் தெரிவித்து தணிக்கை குழு உறுப்பினர் ஒருவர் புகார் அளித்திருப்பதால் படத்திற்கு சென்சார் சான்று நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், புகார் இருந்தால் திரைப்படத்தை மறு தணிக்கை செய்வதற்கு தங்களுக்கு முழு அதிகாரம் உள்ளதாகவும், சென்சார் சான்று வழங்கும் முன் இந்த வழக்கு தொடரப்பட்டிருப்பதாகவும் சென்சார் போர்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது.

    ஜனநாயகன் பட தயாரிப்பு நிறுவனம் தரப்பில், தணிக்கை குழுவின் இடம்பெற்ற உறுப்பினர்களின் பெரும்பான்மையானவர்கள் முடிவை எடுத்துக் கொள்ளாமல் ஒரே ஒரு உறுப்பினர் அளித்த புகாரின் அடிப்படையில் சென்சார் சான்று நிறுத்தி வைப்பதை ஏற்க முடியாது என்றும் 500 கோடி முதலீட்டில் உருவாக்கி உள்ள திரைப்படம் குறிப்பிட்ட தேதியில் வெளியாகவிட்டால் பெரும் இழப்பு ஏற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

    இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்திருந்தார். இதன் காரணமாக நாளை (ஜனவரி 9 ம் தேதி) வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட ஜனநாயகன் திரைப்படம் வெளியிட்டு தேதி தள்ளி வைக்கப்படுவதாக பட தயாரிப்பு நிறுவனமும் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இந்நிலையில் நாளை காலை 10.30 மணிக்கு இந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleவிஜய் ஹசாரே டிராபி!. 1 ரன் வித்தியாசத்தில் மும்பை தோல்வி!. பஞ்சாப் அபார வெற்றி!
    Next Article சட்டசபை தேர்தல்!. நாளை அதிமுக வேட்பாளர் நேர்காணல் தொடக்கம்!. 
    Editor web3
    • Website

    Related Posts

    அதிமுகவுக்கு இந்த கதியா?. செம்மலை வருத்தத்துடன் விலகல்!. இபிஎஸ்-க்கு பேரதிர்ச்சி!

    May 18, 2026

    காதலியை துடிக்க துடிக்க தாக்கிய காதலன்..! ஐஜி பங்களா எதிரே நடந்த கொடூரம்..!

    May 18, 2026

    ஊர்க்காவல் படையினருக்கு காலமுறை ஊதிய வழங்க வேண்டும் – மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

    May 17, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    அதிமுகவுக்கு இந்த கதியா?. செம்மலை வருத்தத்துடன் விலகல்!. இபிஎஸ்-க்கு பேரதிர்ச்சி!

    காதலியை துடிக்க துடிக்க தாக்கிய காதலன்..! ஐஜி பங்களா எதிரே நடந்த கொடூரம்..!

    பிரதமர் மோடிக்கு ஸ்வீடனின் உயரிய விருது வழங்கி கவுரவிப்பு!

    இந்தியா- நெதர்லாந்து இடையே 17 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!

    ஊர்க்காவல் படையினருக்கு காலமுறை ஊதிய வழங்க வேண்டும் – மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

    Trending Posts

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.