Close Menu
    What's Hot

    தொகுதி மறுவரையரை என்றால் என்ன?. சர்ச்சையும் தென்மாநிலங்களின் அச்சமும்!. 

    நடுவானில் 300 அடி சரிந்த விமானம்!. போதைப்பொருள் சோதனையில் சிக்கிய பைலட்?. ஏர் இந்தியா கொடுத்த விளக்கம்!

    U20 சர்வதேச தடகளப் போட்டி!. இந்தியவுக்கு பெருமை சேர்த்த பசந்த் குமார் மேக்வால்!. வெள்ளி வென்று அசத்தல்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»அரசியல்»திமுகவுடன் கூட்டணி இருக்கா? இல்லையா? – செல்வப்பெருந்தகை சொன்ன பதில்
    அரசியல்

    திமுகவுடன் கூட்டணி இருக்கா? இல்லையா? – செல்வப்பெருந்தகை சொன்ன பதில்

    Editor TN TalksBy Editor TN TalksJanuary 20, 2026Updated:January 21, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    images 1
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    திமுக கூட்டணி தொடர்வதால் எந்த குழப்பத்தையும் ஏற்படுத்தாதீர்கள் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கேட்டுக் கொண்டுள்ளார்.

    சென்னை ராயப்பேட்டையில் உள்ள சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செயற்குழு கூட்டம் அக்கட்சியின் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர்கள் சூரஜ் எம்.என். ஹெக்டே, நிவேதித் ஆல்வா, சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் ராஜேஷ்குமார், ஆகியோர் பங்கேற்றனர்.
    தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் புதிய மாவட்டத் தலைவர்கள் நியமனத்திற்குப் பிறகு முதல் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

    இந்த செயற்க்குழு கூட்டத்தில் 2026 ஆம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தல் ஆயத்தப் பணிகள், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் ஆக்கப் பணிகள் குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இக்கூட்டத்தில் பங்கேற்க 52 செயற்குழு உறுப்பினர்கள், 39 சிறப்பு அழைப்பாளர்கள் என 91 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் 60 பேர் மட்டுமே பங்கேற்றனர்.

    பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, இன்றயை தினம் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. தமிழக காங்கிரஸ் கட்சியில் புதிதாக பொறுப்பேற்றுள்ள மாவட்ட தலைவர்களுக்கு வாழ்த்துக்கள், ஏற்கனவே இருந்த மாவட்ட தலைவர்களுக்கு விரைவில் மாநில அளவில் பொறுப்பு வழங்கப்பட உள்ளது என தெரிவித்தார்.

    இந்த கூட்டத்தில் வருகின்ற சட்டமன்ற தேர்தல் பணிகள் குறித்தும், காங்கிரஸ் கிராம கமிட்டி மாநாட்டில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி மற்றும் பிரியங்கா காந்தி உள்ளிட்டோரின் தமிழக வருகை குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. மேலும் பல ஆயுத்த பணிகளை மேற்கொண்டுள்ளோம் என தெரிவித்தார்.

    திமுக கூட்டணி குறித்தான கேள்விக்கு “ஏற்கனவே திமுக உடன் தான் பேசி வருகிறோம்.
    முதலமைச்சரை சந்தித்துள்ளோம். அதில் என்ன பிரச்சனை எனவும் குழப்பத்தை ஏற்படுத்தாதீர்கள்” எனவும் தெரிவித்தார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் பேசியதாவது, 2025ம் ஆண்டு என்பது காங்கிரஸின் மறு கட்டமைப்புக்கான ஆண்டு என கூறினார்.
    இதனையொட்டியே தமிழ்நாட்டி புதிய காங்கிரஸ் மாவட்டத் தலைவர்கள் நியமிக்கப்பட்டனர்.
    14 மாநிலங்களில் 530 மாவட்டத் தலைவர்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளனர். மாவட்டத் தலைவர்கள் மெரிட் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். 6 மாதங்கள் மாவட்ட தலைவர்களின் செயல்பாடுகள் கண்காணிக்கப்படும். அவர்கள் சரியாக பணியாற்றப்படவில்லை எனில் மாற்றப்படுவார்கள்
    என தெரிவித்தார்.

    2026 Election congress DMK MK Stalin selvapperunthagai செல்வப்பெருந்தகை
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleசட்டப்பேரவையில் என்ன நடந்தது? – அப்பாவு விளக்கம்
    Next Article ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் – அதிர்ச்சியில் உறைந்த பெண்கள்!
    Editor TN Talks

    Related Posts

    தவெக அரசை கண்டித்து ஆகஸ்ட் 14-ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்!. இபிஎஸ் அறிவிப்பு!

    August 9, 2026

    கேஸ் சிலிண்டர் பயன்படுத்துவோர் கவனத்திற்கு!. ஆகஸ்ட் 16-க்குள் இதை கட்டாயம் முடிக்க வேண்டும்!

    August 9, 2026

    “தமிழ்நாட்டின் 39 சீட்டில் கைவைத்தால் அவ்ளோதான்!”. டெல்லிக்கு முதல்வர் விஜய் போட்ட மெகா ஸ்கெட்ச்!. அதிர்ச்சியில் பாஜக!

    August 9, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தொகுதி மறுவரையரை என்றால் என்ன?. சர்ச்சையும் தென்மாநிலங்களின் அச்சமும்!. 

    நடுவானில் 300 அடி சரிந்த விமானம்!. போதைப்பொருள் சோதனையில் சிக்கிய பைலட்?. ஏர் இந்தியா கொடுத்த விளக்கம்!

    U20 சர்வதேச தடகளப் போட்டி!. இந்தியவுக்கு பெருமை சேர்த்த பசந்த் குமார் மேக்வால்!. வெள்ளி வென்று அசத்தல்!

    தவெக அரசை கண்டித்து ஆகஸ்ட் 14-ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்!. இபிஎஸ் அறிவிப்பு!

    மகாராஷ்டிராவில் அடுத்தடுத்து நிலநடுக்கம்!. வீடுகளில் விரிசல் ஏற்பட்டதால் வீதிகளில் தஞ்சமடைந்த மக்கள்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.