Close Menu
    What's Hot

    நீர்கொழும்பு சிறையில் பயங்கர மோதல்!. போலீஸ் அதிகாரிகள் உட்பட 30 பேர் பலி; 100க்கும் மேற்பட்டோர் காயம்!

    மு.க.ஸ்டாலின் பெயர்தாங்கிய கல்வெட்டு அகற்றம்;  திமுக போராட்டம் அறிவிப்பு  

    “அரசுப் பள்ளிகளை புறக்கணிப்பது ஏன்?” – அமைச்சர் ராஜ்மோகனுக்கு சீமான் கேள்வி 

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»நாளை பிரதமர் மோடி வருகை!. தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்!
    தமிழ்நாடு

    நாளை பிரதமர் மோடி வருகை!. தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்!

    Editor web3By Editor web3January 22, 2026No Comments3 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Traffic changes
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    நாளை பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    சட்டமன்ற தேர்தல் எதிரொலியாக, மதுராந்தகத்தில் நாளை (ஜன. 23ம் தேதி) நடைபெறும் பாஜ பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார். அப்போது கூட்டணி கட்சி தலைவர்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன. பிரதமர் வருகையை தொடர்ந்து, சென்னை விமான நிலையம் மற்றும் மதுராந்தகத்தில் பொதுக்கூட்டம் நடைபெறும் இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    இக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக, திருவனந்தபுரத்தில் இருந்து வரும் 23ம் தேதி மதியம் 1.15 மணியளவில் புறப்பட்டு, மதியம் 2.15 மணியளவில் பிரதமர் மோடி தனி விமானத்தில் சென்னை பழைய விமான நிலையத்தில் வந்திறங்குகிறார். பின்னர், அங்கிருந்து தனி ஹெலிகாப்டரில் மதியம் 2.25 மணியளவில் பொதுக்கூட்டம் நடைபெறும் மதுராந்தகத்துக்கு பிரதமர் மோடி புறப்பட்டு செல்கிறார்.

    மாலை 3 மணியளவில் பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்துக்கு சென்றடைகிறார். பின்னர் மாலை 3 மணியிலிருந்து 4.30 மணிவரை மதுராந்தகத்தில் நடைபெறும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார். இதைத் தொடர்ந்து, மதுராந்தகத்தில் மாலை 4.30 மணியளவில் தனி ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு, சென்னை பழைய விமானநிலையத்திற்கு மாலை 5 மணியளவில் வந்தடைகிறார்.

    இதனால், சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

    இதுகுறித்து செங்கல்பட்டு காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், “23.01.2026 அன்று பாரத பிரதமர் பங்கேற்கும் பொதுக்கூட்டம் சென்னை திண்டிவனம் ஜிஎஸ்டி நெடுஞ்சாலையில் மதுராந்தகத்தில் நடைபெறுவதால் கனரக வாகனங்கள் காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை ஜிஎஸ்டி சாலையில் சென்னை – திருச்சி மார்க்கமாகவும் மற்றும் திருச்சி – சென்னை மார்க்கமாகவும் கீழ்கண்ட வழிகளில் போக்குவரத்து மாற்று பாதையில் செல்ல அறிவுறுத்தப்படுகிறது.

    சென்னையிலிருந்து திண்டிவனம் நோக்கி செல்லும் கனரக வாகனங்கள் 23.01.2026 காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை சென்னை – திண்டிவனம் மார்க்கமாகச் செல்லும் வாகனங்கள் வண்டலூர், கேளம்பாக்கம், மாமல்லபுரம், கிழக்கு கடற்கரை சாலையில் சென்று மரக்காணம் வழியாக திண்டிவனம் வந்து ஜிஎஸ்டி சாலையை அடையலாம். அல்லது சென்னை – திண்டிவனம் மார்க்கமாக செல்லும் வாகனங்கள் வண்டலூர், படப்பை, ஒரகடம், வாலாஜாபாத், காஞ்சிபுரம் வழியாக வந்தவாசி, தெள்ளார், வெள்ளிமேடுபேட்டை, தீவனூர் கூட்டேரிப்பட்டு சந்திப்பு சாலை வழியாக ஜிஎஸ்டி சாலையை அடையலாம். அல்லது திருப்பெரும்புதூர். ராணிப்பேட்டை, ஆற்காடு, ஆரணி, திருவண்ணாமலை, திருக்கோவிலூர் விழுப்புரம் சென்று ஜிஎஸ்டி சாலையை அடையலாம்.

    திருச்சியிலிருந்து சென்னை மார்க்கமாக செல்ல வேண்டிய கனரக வாகனங்கள் உளுந்தூர்பேட்டை, மடப்பட்டு வழியாக திருக்கோவிலூர். திருவண்ணாமலை, வந்தவாசி, காஞ்சிபுரம் (பாலாறு – செவிலிமேடு சந்திப்பு) கீழம்பி புறவழிச்சாலை வழியாக செல்லலாம்.

    சேலத்திலிருந்து சென்னை மார்க்கமாக செல்ல வேண்டிய கனரக வாகனங்கள் பிரிதிவிமங்களம் வழியாக தியாகதுர்கம், மணலூர்பேட்டை, திருவண்ணாமலை, வந்தவாசி, காஞ்சிபுரம் (பாலாறு செவிலிமேடு சந்திப்பு) கீழம்பி புறவழிச்சாலை வழியாக சென்னை செல்லலாம்.

    கூட்டேரிப்பட்டிலிருந்து சென்னை மார்க்கமாக செல்ல வேண்டிய கனரக வாகனங்கள் வெள்ளிமேடுபேட்டை, வந்தவாசி. காஞ்சிபுரம் (பாலாறு செவிலிமேடு சந்திப்பு) கீழம்பி புறவழிச்சாலை வழியாக சென்னை செல்லலாம்.

    திண்டிவனத்திலிருந்து சென்னை மார்க்கமாக செல்ல வேண்டிய கனரக வாகனங்கள் மரக்காணம் சென்று கிழக்கு கடற்கரை சாலை (ECR) வழியாக சென்னை செல்லலாம்.

    சென்னையிலிருந்து திண்டிவனம் நோக்கி செல்லும் அரசு பேருந்துகள், இலகுரக வாகனங்கள் 23.01.2026 காலை 11 மணி முதல் மாலை 7 மணி வரை சென்னையிலிருந்து திண்டிவனம் மார்க்கமாக செல்ல வேண்டிய வாகனங்கள் வண்டலூர், கேளம்பாக்கம், மாமல்லபுரம், கிழக்கு கடற்கரை சாலையில் சென்று மரக்காணம் வழியாக திண்டிவனம் சென்று ஜிஎஸ்டி சாலையை அடையலாம் அல்லது வண்டலூர் படப்பை ஒரகடம் வாலாஜாபாத் காஞ்சிபுரம் வந்தவாசி தெள்ளார் வெள்ளிமேடு பேட்டை, தீவனூர் வழியாக கூட்டேரிப்பட்டு சென்று ஜிஎஸ்டி சாலையை அடையலாம்.

    கூடுவாஞ்சேரி – மறைமலைநகர் சிங்கப்பெருமாள் கோவிலில் இருந்து விழுப்புரம் மார்க்கமாக செல்லும் வாகனங்கள் செங்கல்பட்டு ராட்டினம் கிணறு, திருக்கழுக்குன்றம் வெங்கம்பாக்கம் சந்திப்பு சாலை, கிழக்கு கடற்கரை சாலை, மரக்காணம், திண்டிவனம் வழியாகவும் ஜிஎஸ்டி சாலையை அடையலாம்.

    சிங்கப்பெருமாள் கோவிலிலிருந்து ஒரகடம், வாலாஜாபாத், காஞ்சிபுரம், வந்தவாசி, தெள்ளார், வெள்ளிமேடு பேட்டை, தீவனூர் கூட்டேரிப்பட்டு சந்திப்பு சாலை வழியாகவும் ஜிஎஸ்டி சாலையை அடையலாம்.

    விழுப்புரத்திலிருந்து சென்னை நோக்கி செல்லும் அரசு பேருந்துகள், இலகுரக வாகனங்கள் 23.01.2026 காலை 11 மணி முதல் மாலை 7 மணி வரை விழுப்புரத்திலிருந்து சென்னை மார்க்கமாக செல்ல வேண்டிய வாகனங்கள் திண்டிவனம் பாண்டிச்சேரி சந்திப்பு சாலை வழியாக மரக்காணம் சென்று கிழக்கு கடற்கரை சாலை, மாமல்லபுரம் வழியாக சென்னை செல்லலாம்.

    அல்லது

    திண்டிவனம் கல்லூரி சாலை வழியாக வெள்ளிமேடுபேட்டை, தெள்ளார், வந்தவாசி, காஞ்சிபுரம், வாலாஜாபாத், வண்டலூர் வழியாக சென்னைக்கு செல்லலாம். அல்லது திண்டிவனம் -கல்லூரி சாலை வழியாக வெள்ளிமேடு பேட்டை தெள்ளார் வந்தவாசி காஞ்சிபுரம் (செவிலிமேடு பாலார் சந்திப்பு) – கீழம்பி புற வழிச்சாலை ஜிடபிள்யூடி சாலையை அடைந்து ஸ்ரீபெரும்பத்தூர் வழியாக சென்னைக்கு செல்லாம்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஜம்மு-காஷ்மீரில் ராணுவ வாகனம் விபத்து!.10 வீரர்கள் உயிரிழப்பு!. பெரும் சோகம்!
    Next Article காவலாளி அஜித்குமார் மரண வழக்கு!. ஐகோர்ட் கிளை சரமாரி கேள்வி!
    Editor web3
    • Website

    Related Posts

    மு.க.ஸ்டாலின் பெயர்தாங்கிய கல்வெட்டு அகற்றம்;  திமுக போராட்டம் அறிவிப்பு  

    July 6, 2026

    “அரசுப் பள்ளிகளை புறக்கணிப்பது ஏன்?” – அமைச்சர் ராஜ்மோகனுக்கு சீமான் கேள்வி 

    July 6, 2026

    கடல்நீரை குடிநீராக்கும் திட்டப்பணி; முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் ஆய்வு!

    July 6, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    நீர்கொழும்பு சிறையில் பயங்கர மோதல்!. போலீஸ் அதிகாரிகள் உட்பட 30 பேர் பலி; 100க்கும் மேற்பட்டோர் காயம்!

    மு.க.ஸ்டாலின் பெயர்தாங்கிய கல்வெட்டு அகற்றம்;  திமுக போராட்டம் அறிவிப்பு  

    “அரசுப் பள்ளிகளை புறக்கணிப்பது ஏன்?” – அமைச்சர் ராஜ்மோகனுக்கு சீமான் கேள்வி 

    கடல்நீரை குடிநீராக்கும் திட்டப்பணி; முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் ஆய்வு!

    2,000 ஆண்டுகளுக்கு முந்தைய புதையல்!. தாய்லாந்தில் கிடைத்த வரலாற்று சான்றுகள்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.