Close Menu
    What's Hot

    தமிழகத்தில் 2,000 புதிய மின்சார ஏசி பேருந்துகள்…  எந்தெந்த நகரங்களில் இயக்கப்படும்?

    மேகதாது அணை கட்ட ஒரு செங்கல்லைக் கூட வைக்க அனுமதிக்க மாட்டோம் – தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தீர்மானம்

    அயோத்தி ராமர் கோயிலில் நாள்தோறும் ரூ.8லட்சம் நன்கொடை திருட்டு..! வெளியான அதிர்ச்சி தகவல்..!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»காவலாளி அஜித்குமார் மரண வழக்கு!. ஐகோர்ட் கிளை சரமாரி கேள்வி!
    தமிழ்நாடு

    காவலாளி அஜித்குமார் மரண வழக்கு!. ஐகோர்ட் கிளை சரமாரி கேள்வி!

    Editor web3By Editor web3January 22, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    ajith kumar murder case
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    காவலாளி அஜித் குமார் கொலை வழக்கில் நிகிதா மீது பதியப்பட்ட வழக்கு விசாரணையின் நிலை என்ன என்று கேள்வி எழுப்பிய ஐகோர்ட் மதுரை கிளை, சிபிஐ விசாரணை அதிகாரி விளக்கம் அளிக்க உத்தரவிட்டுள்ளது.

    திருப்புவனம் மடப்புரம் பத்ரகாளி அம்மன் கோவில் காவலாளியாக பணிபுரிந்த அஜித்குமார் கடந்த ஜூன் 27ஆம் தேதி நகை காணாமல் போனது தொடர்பான புகாரில் தனிப்படை காவலர்களால் விசாரணை நடத்தப்பட்ட போது ஜூன் 28ஆம் தேதி கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் 5 தனிப்படை காவலர்களான கண்ணன், ராஜா ,ஆனந்த், பிரபு ,சங்கர மணிகண்டன் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    இதனிடையே அஜித்குமார் கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள காவலர்கள் ஆனந்த் உள்ளிட்ட 5 பேர் தங்களுக்கு ஜாமின் வழங்க கோரி மனு தாக்கல் செய்திருந்தனர்.இந்த மனு நீதிபதி ஸ்ரீமதி முன் விசாரணைக்கு வந்தது.

    விசாரணையின் போது வழக்கறிஞர் ஹென்றி டிபன் இறந்து போன அஜித்குமார் அவரது தாயார் தரப்பில் இடை ஈட்டு மனு தாக்கல் செய்திருந்தார். அதில் காவலர்களுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது ஒரு வழக்கில் மட்டுமே குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது நிகிதா மீது பதியப்பட்ட வழக்கு இதுவரை விசாரணை என்ன நிலையில் உள்ளது என்பது தெரியவில்லை எனவே வழக்கு விசாரணை நிலுவையில் உள்ள சூழலில் காவலர்களுக்கு ஜாமீன் வழங்கினால் வழக்கு விசாரணை பாதிக்கும் என கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

    இதேபோல் சிபிஐ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் முகையதீன் பாட்ஷா காவலர்களுக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்தார். அப்போது நீதிபதி இந்த விவகாரத்தில் நிகிதா வழக்கின் விசாரணையின் நிலை என்ன என கேள்வி எழுப்பினர் இந்த வழக்கின் விசாரணை அதிகாரியான சிபிஐ டிஎஸ்பி பிப்ரவரி இரண்டாம் தேதி பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஒத்திவைத்தார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleநாளை பிரதமர் மோடி வருகை!. தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்!
    Next Article ஹிட்மேன் ரோகித் சர்மாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம்!. 
    Editor web3
    • Website

    Related Posts

    தமிழகத்தில் 2,000 புதிய மின்சார ஏசி பேருந்துகள்…  எந்தெந்த நகரங்களில் இயக்கப்படும்?

    July 6, 2026

    மேகதாது அணை கட்ட ஒரு செங்கல்லைக் கூட வைக்க அனுமதிக்க மாட்டோம் – தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தீர்மானம்

    July 6, 2026

    லோக் ஆயுக்தா சட்டம்; தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

    July 6, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தமிழகத்தில் 2,000 புதிய மின்சார ஏசி பேருந்துகள்…  எந்தெந்த நகரங்களில் இயக்கப்படும்?

    மேகதாது அணை கட்ட ஒரு செங்கல்லைக் கூட வைக்க அனுமதிக்க மாட்டோம் – தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தீர்மானம்

    அயோத்தி ராமர் கோயிலில் நாள்தோறும் ரூ.8லட்சம் நன்கொடை திருட்டு..! வெளியான அதிர்ச்சி தகவல்..!

    மேற்கு வங்கத்தில் சூப்பர் எமெர்ஜென்சி ; திரிணாமுல் காங்கிரஸ் கடும் கண்டனம்

    மெக்ஸிகோவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறிய இங்கிலாந்து!. பட்டாசு சதிக்கு மைதானத்தில் பதிலடி!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.