Close Menu
    What's Hot

    முதல்வர் ஸ்டாலினின் பதவி பறிபோகும் அபாயம்!. அதிமுக பரபரப்பு புகார்!.

    ஜனநாயகன் லீக் விவகாரம்!. முதல்வர் ஸ்டாலின் கொடுத்த ஒரே பதில்!.

    அதலபாதாளத்திற்குச் சரியும் தங்கம் விலை!. உலகப் பொருளாதாரத்தில் அதிரடி மாற்றம்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»பட்ஜெட் 2026!. வழக்கத்தைவிடப் பெரும் ஏமாற்றம்!. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமசர்சனம்!.
    தமிழ்நாடு

    பட்ஜெட் 2026!. வழக்கத்தைவிடப் பெரும் ஏமாற்றம்!. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமசர்சனம்!.

    Editor web3By Editor web3February 1, 2026No Comments3 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    0ps2v5u m k
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    மத்திய பட்ஜெட் வழக்கத்தைவிடப் பெரும் ஏமாற்றத்தை வழங்கியுள்ளதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

    இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டுக்கான சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், இந்த ஆண்டாவது, ஒன்றிய பாஜக அரசின் கண்களுக்குத் தமிழ்நாடு தெரியும் -அவர்களது காதுகளில் நமது உரிமைக்குரல் விழும் என்று எதிர்பார்த்திருந்தோம். அந்த எதிர்பார்ப்பைப் பொய்க்கச் செய்து, ஏமாற்றத்தை வழங்கியிருக்கிறது ஒன்றிய பா.ஜ.க. அரசு. இன்று மாண்புமிகு ஒன்றிய நிதி அமைச்சர் அவர்கள், நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த 2026-27-ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில், தமிழ்நாட்டின் நலன் முற்றிலுமாகப் புறகணிக்கப்பட்டுள்ளதோடு, ஏழைகள், விவசாயிகள், பெண்கள், விளிம்பு நிலை மக்கள் என எந்தப் பிரிவினருக்கும் நன்மை பயக்கும் முக்கியத் திட்டங்கள் இடம்பெறவில்லை.

    மாநிலங்களுக்கான வரிப்பகிர்வு முறையில், தமிழ்நாடு உள்ளிட்ட வளர்ச்சியடைந்த மாநிலங்களை ஒன்றிய அரசு தொடர்ந்து புறக்கணித்து வருகிறது என்ற கருத்தை, நாம் வலுவாக முன்வைத்து வருகிறோம். மொத்த வரி வருவாயில் மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும் பங்கு 41 விழுக்காட்டிலிருந்து 50 விழுக்காடாக உயர்த்தப்பட்ட வேண்டும் எனத் தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் கோரிக்கை இம்முறையும் புறக்கணிக்கப்பட்டு, மாநிலங்களுக்கான வரிப்பகிர்வு தொடர்ந்து 41 விழுக்காடு என்ற அளவிலேயே தொடரும் என்று அறிவிக்கப்பட்டிருப்பது மிகுந்த ஏமாற்றத்தையே தருகிறது. அதுமட்டுமின்றி, இந்தியப் பொருளாதார வளர்ச்சியில், மாநிலங்களின் பங்களிப்பை உரிய முறையில் 16-ஆவது நிதிக்குழு அங்கீகரிக்க முற்பட்ட போதும், நாட்டின் இரண்டாவது பெரிய பொருளாதாரத்தைக் கொண்டு. நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குப் பெரும் பங்களிப்பைச் செலுத்தி வரும் தமிழ்நாட்டிற்கு நிதிப்பகிர்வு சதவீதம் இதர வளர்ச்சியடைந்த மாநிலங்களைக் காட்டிலும் குறைவாகவே அளிக்கப்பட்டிருப்பது மிகவும் வருந்தத்தக்கது.

    தமிழ்நாட்டிற்கான வரிப்பகிர்வு 4.097 விழுக்காடு என்ற மிகச்சொற்ப அளவிலேயே அடுத்த ஐந்தாண்டுகளுக்கு இருக்கும் எனத் தெரியவருகிறது. இதன் மூலம் முதற்கட்ட மதிப்பீடுகளின்படி இதர ஒப்பிடத்தக்க மாநிலங்களைக் காட்டிலும் ஆண்டிற்குச் சுமார் 5000 கோடி ரூபாய் நிதி இழப்பு ஏற்படும். கடந்த பல ஆண்டுகளாகவே நிதிப்பகிர்வில் தமிழ்நாடு தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வரும் நிலை, இன்று 16-ஆவது நிதிக்குழுவிலும் சரிசெய்யப்படவில்லை என்பது மிகுந்த கவலை அளிக்கிறது.

    அண்மையில், சரக்கு மற்றும் சேவை வரி விதிப்புச் மாநிலங்களுக்கான நிலையில் சீரமைப்பில் பாதிக்கப்பட்டிருக்கும் நிதி இந்த வருவாய் ஆண்டு தமிழ்நாட்டிற்கான ஒன்றிய வரிகளின் பங்கு சுமார் 1,200 கோடி ரூபாய் அளவில் கண்டிக்கத்தக்கது. குறைக்கப்பட்டுள்ளது என்பதும் ஜல்ஜீவன் குடிநீர்த் திட்டத்தில் தமிழ்நாடு கோரியிருந்த 3,112 கோடி ரூபாய் ஒன்றிய அரசால் வழங்கப்படவில்லை என்று தொடர்ந்து நாம் வலியுறுத்தி வந்த வேளையில், 2025-26-ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கை மதிப்பீட்டில் 67 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்த இந்தத் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு, தற்போது திருத்திய மதிப்பீட்டில் வெறும் 17 ஆயிரம் கோடி ரூபாய் என ஒதுக்கப்பட்டிருப்பது இந்தத் திட்டத்தையே முழுவதுமாக முடக்குவதற்கான முயற்சி என்றே தோன்றுகிறது. அதேபோன்று, பிரதம மந்திரியின் கிராம சாலை மேம்பாட்டுத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்காகக் கடந்த நிதிநிலை அறிக்கையில் 19 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்குவதாக அறிவித்துவிட்டு, தற்போது திருத்திய மதிப்பீட்டில் வெறும் 11 ஆயிரம் கோடி ரூபாய் மட்டும் ஒதுக்கி இருக்கிறார்கள்.

    அதேபோல், ஊரகப் பகுதிகளுக்கான பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்திற்கு 35,832 கோடி நிதி ஒதுக்குவதாக அறிவித்து, தற்போது 32,500 கோடி ரூபாய் என்ற அளவில் நிதி குறைக்கப்பட்டிருக்கிறது. இதைவிட மிகப்பெரிய ஏமாற்றம் என்னவெனில், மிகுந்த ஆரவாரத்துடன் அறிவிக்கப்பட்ட PM Internship Scheme திட்டத்திற்கென 10,831 கோடி ரூபாயைச் சென்ற ஆண்டு நிதிநிலை அறிக்கையில் அறிவித்து. ஆனால் தற்போது 2025-2026-ஆம் ஆண்டில் திருத்திய மதிப்பீட்டில், வெறும் 526 கோடி என்ற சொற்ப அளவிலேயே நிதி ஒதுக்கி இருப்பதன் மூலம், இந்தத் திட்டம் மிகப்பெரிய தோல்வியைத் தழுவி இருக்கிறது என்றுதான் கருத வேண்டி இருக்கிறது.

    இந்த நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டில் நலன் குறித்த திட்டங்கள் இடம்பெறும் என்று நாம் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டிருந்த வேளையில், புதிய திட்டங்கள் ஏதும் இடம்பெறவில்லை. மும்மொழிக் கொள்கையைக் கடைப்பிடிக்காததன் காரணமாக அனைவருக்கும் கல்வி திட்டத்திற்கான 3,548 கோடி ரூபாய், ஜல் ஜீவன் திட்டத்தை நாட்டிலேயே நாம் சிறப்பாகச் செயல்படுத்திய போதிலும் ஒன்றிய அரசு இன்னும் விடுவிக்காத நிதி 3,112 கோடி ரூபாய் நிதி குறித்து எந்த அறிவிப்பும் இல்லை. இதுமட்டுமின்றி தமிழ்நாட்டிற்கு எனப் புதிய திட்டங்கள் எதுவும் இந்த நிதிநிலை அறிக்கையில் இல்லை என்பது தமிழ்நாட்டை ஒன்றிய அரசு தொடர்ந்து மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்திவருகிறது என்பதை வெட்டவெளிச்சமாக்கியிருக்கிறது. வழக்கமாக ஒன்றிய நிதியமைச்சர் வழங்கும் நிதிநிலை அறிக்கையில் இடம்பெறும் திருக்குறளும் இந்த முறை தமிழ்நாட்டிற்கான எந்த முக்கியத் திட்டங்களும் இடம்பெறவில்லை. மொத்தத்தில் ஏமாற்றம்! ஏமாற்றம்! ஏமாற்றம்! என்று கூறியுள்ளார்.

     

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article மத்திய பட்ஜெட் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும்!. அன்புமணி வரவேற்பு!.
    Next Article “உங்களிடம் உண்மைகள் இருந்தால், அவற்றை முன்வையுங்கள், இல்லையென்றால்…”!. ராகுல் காந்திக்கு நிர்மலா சீதாராமன் பதில்!
    Editor web3
    • Website

    Related Posts

    முதல்வர் ஸ்டாலினின் பதவி பறிபோகும் அபாயம்!. அதிமுக பரபரப்பு புகார்!.

    April 12, 2026

    ஜனநாயகன் லீக் விவகாரம்!. முதல்வர் ஸ்டாலின் கொடுத்த ஒரே பதில்!.

    April 12, 2026

    6 மாதங்களில் அண்ணாமலைக்கு முதல்வர் பதவி; இதுதான் பாஜகவின் திட்டம்!. திருமா பேச்சு!

    April 11, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    முதல்வர் ஸ்டாலினின் பதவி பறிபோகும் அபாயம்!. அதிமுக பரபரப்பு புகார்!.

    ஜனநாயகன் லீக் விவகாரம்!. முதல்வர் ஸ்டாலின் கொடுத்த ஒரே பதில்!.

    அதலபாதாளத்திற்குச் சரியும் தங்கம் விலை!. உலகப் பொருளாதாரத்தில் அதிரடி மாற்றம்!

    போர்!. ஈரான் – அமெரிக்கா இடையே பேச்சுவார்த்தை தோல்வி!. அடுத்து என்ன நடக்கும்?

    இனி குழந்தைகளுக்கு டிஜிட்டல் பாக்கெட் மணி!. ‘GPay-ல் புதிய அம்சம்!. எப்படி செயல்படுகிறது?

    Trending Posts

    முதல்வர் ஸ்டாலினின் பதவி பறிபோகும் அபாயம்!. அதிமுக பரபரப்பு புகார்!.

    April 12, 2026

    ஜனநாயகன் லீக் விவகாரம்!. முதல்வர் ஸ்டாலின் கொடுத்த ஒரே பதில்!.

    April 12, 2026

    அதலபாதாளத்திற்குச் சரியும் தங்கம் விலை!. உலகப் பொருளாதாரத்தில் அதிரடி மாற்றம்!

    April 12, 2026

    போர்!. ஈரான் – அமெரிக்கா இடையே பேச்சுவார்த்தை தோல்வி!. அடுத்து என்ன நடக்கும்?

    April 12, 2026

    ‘ஜனநாயகன்’ படத்தை லீக் செய்தது ஆதவ் அர்ஜுனாவா?. வினோஜ் பி.செல்வம் புதிய சர்ச்சை!

    April 11, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.