Close Menu
    What's Hot

    பிரான்ஸில் அமைச்சர் நிர்மலா சீதாராமன்;  ITER திட்டத்தை பார்வையிட்டார்

    2-வது டி 20; இங்கிலாந்துக்கு 191 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இந்தியா

    பிரதமர் மோடிக்கு ‘மரண மிரட்டல்’ ; ஆஸ்திரேலியா போலீஸ் விசாரணை

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»உலகம்»இந்தியா மீதான வரிகளை 18%-ஆக குறைத்தது அமெரிக்கா!. டிரம்ப் அறிவிப்பு!
    உலகம்

    இந்தியா மீதான வரிகளை 18%-ஆக குறைத்தது அமெரிக்கா!. டிரம்ப் அறிவிப்பு!

    Editor web3By Editor web3February 3, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    trump modi
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    இந்தியா மீதான வரிகளை அமெரிக்கா 25 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாகக் குறைத்துள்ளது. பிரதமர் மோடியுடன் தொலைபேசியில் பேசிய சிறிது நேரத்திலேயே டொனால்ட் டிரம்ப் இதை அறிவித்தார். இந்த வரி குறைப்பு ஜூலை 31, 2025 முதல் அமலுக்கு வந்ததாக அறிவித்துள்ளார்.

    அமெரிக்க அதிபர், இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான வர்த்தக ஒப்பந்தம் குறித்து ட்ரூத் சோஷியல் தளத்தில் பதிவிட்டார். அதில், பிரதமர் நரேந்திர மோடியைப் பாராட்டியதுடன், இந்தியா இனி ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்காது என்றும் கூறினார். இந்தியா இனி அமெரிக்கா மற்றும் வெனிசுலாவிடமிருந்து அதிக எண்ணெய் வாங்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

    மேலும் டிரம்ப் தெரிவித்தது, இந்திய பிரதமர் மோடியுடன் பேசுவதற்கு பெருமையாக இருந்தது. அவர் எனக்கு மிகவும் நெருக்கமான நண்பர்களில் ஒருவர்; தனது நாட்டில் சக்திவாய்ந்ததும், மதிப்புமிக்கதும் ஆன தலைவரும் ஆவார். வர்த்தகம் உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்தும், ரஷ்யா–உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வருவது குறித்தும் நாம் விவாதித்தோம். இந்தியா ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்த ஒப்புக்கொண்டுள்ளது. அதே நேரத்தில், அமெரிக்கா மற்றும் வெனிசுலாவிலிருந்து அதிக அளவில் எண்ணெய் வாங்கவும் சம்மதித்துள்ளது. இது உக்ரைனில் தற்போது நடைபெற்று வரும் போரைக் முடிவுக்கு கொண்டு வர உதவும்; அந்தப் போர் ஒவ்வொரு வாரமும் உயிர்களை பறிக்கிறது.”

    அவர் மேலும் கூறியதாவது: “பிரதமர் நரேந்திர மோடியின் மீதான நட்பு மற்றும் மரியாதை காரணமாகவும், அவரது கோரிக்கையின் பேரிலும், அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையே ஒரு வர்த்தக ஒப்பந்தத்திற்கு நாங்கள் ஒப்புக்கொண்டுள்ளோம், இது உடனடியாக அமலுக்கு வருகிறது. இந்த ஒப்பந்தத்தின் கீழ், அமெரிக்கா பரஸ்பர வரிகளை 25 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாகக் குறைக்கும். இதேபோல், இந்தியாவும் அமெரிக்காவிற்கு எதிரான தனது வரி மற்றும் வரியல்லாத தடைகளை பூஜ்ஜியமாகக் குறைக்க நடவடிக்கை எடுக்கும்.”

    அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் கூற்றுப்படி, ‘அமெரிக்கப் பொருட்களை வாங்குங்கள்’ கொள்கையின் கீழ், பிரதமர் மோடியும் அமெரிக்காவிலிருந்து பெருமளவிலான கொள்முதல்களை மேற்கொள்ள உறுதியளித்துள்ளார். இதில் 500 பில்லியன் டாலருக்கும் அதிகமான மதிப்புள்ள அமெரிக்க எரிசக்தி, தொழில்நுட்பம், விவசாயம், நிலக்கரி மற்றும் பிற பொருட்கள் அடங்கும். இந்தியா-அமெரிக்க உறவுகள் எதிர்காலத்தில் மேலும் வலுப்பெறும் என்றும், இரு தலைவர்களும் தாங்கள் சொன்னதைச் செய்து முடிக்கும் தலைவர்கள் என்றும் டிரம்ப் கூறினார்.

    டொனால்ட் டிரம்ப் வரிக் குறைப்புகளை அறிவித்ததைத் தொடர்ந்து, இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதர் செர்ஜியோ கோரும் இதுகுறித்து கருத்து தெரிவித்தார். அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டதாவது: “நான் பலமுறை கூறியது போல, அதிபர் டிரம்ப் பிரதமர் மோடியை ஒரு உண்மையான நண்பராகக் கருதுகிறார்! இன்று மாலை வர்த்தக ஒப்பந்தம் குறித்த செய்தியால் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான உறவுகளின் சாத்தியக்கூறுகள் எல்லையற்றவை!”

    மெரிக்க அதிபர், அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் இந்தியப் பொருட்களுக்கு 25 சதவீத வரியை விதித்தார். பின்னர், ரஷ்ய எண்ணெய்க் கொள்முதல் தொடர்பாக இந்த வரி 50 சதவீதமாக உயர்த்தப்பட்டது. உக்ரைன் மீதான படையெடுப்பில் ரஷ்யாவிற்கு இந்தியா உதவுவதால், இந்தியா ரஷ்ய கச்சா எண்ணெயை வாங்கக்கூடாது என்று டிரம்ப் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleசீன ஆக்கிரமிப்பு!. ரகசியத்தை உடைத்த ராகுல்!. நாடாளுமன்றத்தில் காரசார விவாதம்!. 
    Next Article தினம் காலையில் ஒரு கப் ‘கறிவேப்பிலை ஜூஸ்’ குடியுங்க!. தொப்பையை குறைக்க டிப்ஸ்!
    Editor web3
    • Website

    Related Posts

    தற்கொலைப்படை தாக்குதலால் அதிர்ந்த பாகிஸ்தான்..!! 30 ராணுவ வீரர்கள் பரிதாப பலி..!!

    July 4, 2026

    ஈரானில் கமேனியின் பிரம்மாண்ட இறுதிச்சடங்கு தொடங்கியது!. மகன் மொஜ்தபா பங்கேற்கவில்லை!

    July 4, 2026

    நியூசிலாந்து செல்கிறார் பிரதமர் மோடி..!! 40 ஆண்டுகளுக்குப் பிறகு வரலாற்றுச் சிறப்புமிக்க சந்திப்பு..!!

    July 3, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    பிரான்ஸில் அமைச்சர் நிர்மலா சீதாராமன்;  ITER திட்டத்தை பார்வையிட்டார்

    2-வது டி 20; இங்கிலாந்துக்கு 191 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இந்தியா

    பிரதமர் மோடிக்கு ‘மரண மிரட்டல்’ ; ஆஸ்திரேலியா போலீஸ் விசாரணை

    அமெரிக்க சுதந்திரத்தின் 250-வது ஆண்டு விழா: டிரம்புக்கு பிரதமர் மோடி வாழ்த்து

    சச்சினை விஞ்சிய சூர்வன்ஷி!  15 வயதில் டி 20 போட்டியில் அறிமுகமாகி புது வரலாறு

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.