Close Menu
    What's Hot

    முதலமைச்சர் விஜய் அறிவிப்பு; கமல்ஹாசன் வரவேற்பு

    திமுக, அதிமுக செய்த அரசியல் அராஜகத்துக்கு தவெக முடிவு கட்டியுள்ளது – முன்னாள் அமைச்சர் பொன்னுசாமி

    ட்ரோன் பேட்ரோல், ஹைடெக் வசதிகள் – சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படைக்கு முதலமைச்சர் சிறப்பு ஏற்பாடு

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»8% ஓட்டு வைத்துள்ள திமுக எப்படி தலைமையேற்க முடியும்?. காங்கிரஸை இழிவாக பேசுவது நல்லதல்ல!. மாணிக்கம் தாகூர் தாக்கு!.
    தமிழ்நாடு

    8% ஓட்டு வைத்துள்ள திமுக எப்படி தலைமையேற்க முடியும்?. காங்கிரஸை இழிவாக பேசுவது நல்லதல்ல!. மாணிக்கம் தாகூர் தாக்கு!.

    Editor web3By Editor web3February 6, 2026Updated:February 6, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    manickam tagore
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    திமுக கூட்டணி அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சி சில காலமாக ஆட்சியில் பங்கு என்று கோரிக்கையை தொடர்ந்து முன்வைத்து வருவதோடு அதிக அளவிலான சீட்டுகளை வருகிற சட்டமன்ற தேர்தலில் வழங்க வேண்டும் என்றும் கூட்டணி தலைமையிடம் அழுத்தம் கொடுத்து வருவதாக சொல்லப்படுகிறது. இதனால் தமிழகத்தின் இந்தியா கூட்டணியில் பூசல் பூதகரமாகியுள்ளதாக தெரிகிறது.

    சில தினங்களுக்கு முன்பு திமுகவின் முக்கிய உறுப்பினரான கனிமொழியும் காங்கிரஸ் தேசிய தலைவரான ராகுல் காந்தியும் சந்தித்து பேசியதாக தகவல் வெளியானது. அதில் கூட்டணியில் இருந்து விலகுவது குறித்து பேச்சுக்கே இடமில்லை என காங்கிரஸ் தேசிய தலைமை தெளிவாக கூறியதாகவும் மேலும் 30 தொகுதிகளை இம்முறை காங்கிரசுக்கு வழங்க திமுக உறுதி அளித்ததாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தன.

    அதுமட்டுமின்றி காங்கிரஸ் தேசிய தலைமை நடத்திய கூட்டத்தில் கூட்டணி குறித்த விவகாரங்களை பொதுவெளியில் பேச வேண்டாம் எனவும் காங்கிரஸ் எம்பிக்களுக்கு வலியுறுத்தியதாக செல்வப் பெருந்தகை பேட்டியில் குறிப்பிட்டு இருந்தார். இதனால் இந்த பிரச்சனை ஓரளவுக்கு அடங்கியதாக சொல்லப்பட்டது.

    தமிழகத்தில் இந்தியா கூட்டணிக்கு திமுக தலைமை வகித்து வந்த போதிலும் புதுச்சேரியில் காங்கிரஸ்தான் தலைமை வகித்து வந்துள்ளது. ஆனால் தற்போது நடந்து வரும் இருதரப்பு பூசல் காரணமாக யார் புதுச்சேரியில் கூட்டணிக்கு தலைமை வகிக்கப் போகிறார்கள் என்று கேள்விகள் தொடர்ந்து எழுந்து வந்தது. இந்த சூழலில் தமிழகத்தை போலவே திருச்சியிலும் திமுக ஆட்சியை நிறுவுவோம் என திமுகவின் மாநில தேர்தல் பொறுப்பாளரான ஜெகத்ரட்சகன் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

    இந்த சூழலில் காங்கிரசை தவிர்த்து விட்டு இந்தியா கூட்டணியுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை திமுக தலைமை தொடங்கியதாகவும் தமிழகத்தை போலவே புதுச்சேரியிலும் இந்தியா கூட்டணிக்கு திமுகதான் தலைமை மதிக்க வேண்டும் எனவும் கூட்டணி கட்சிகள் விரும்புவதாகவும் சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. இந்த சம்பவம் தான் காங்கிரஸிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

    https://x.com/manickamtagore/status/2019635561338945812

    இதுதொடர்பாக, காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் தனது X பக்கத்தில் புதுச்சேரியில் திமுகவிற்கு 8% ஓட்டுகள் மட்டுமே உள்ளதாகவும், காங்கிரசுக்கு 26 சதவீதம் ஓட்டுகள் உள்ளதாகவும் குறிப்பிட்டு எட்டு சதவீதம் ஓட்டு வைத்துள்ள கட்சி தலைமை தாங்குமா இல்லை 26 சதவீதம் ஓட்டு உள்ள கட்சி தலைமை தாங்குமா? என கேள்வி எழுப்பி உள்ளார்.
    மேலும் கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியை ஏன் இழிவாக பேச வேண்டும் என குறிப்பிட்டு இருந்த அவர் இந்த நடைமுறையை தொடர்வது நல்லது அல்ல எச்சரிக்கையாக தெரிவித்துள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபலகட்சிகள் கூட்டணிக்கு அழைக்கிறார்கள்..! உரிய நேரத்தில் கூட்டணி குறித்து அறிவிப்பேன்…!
    Next Article 19 மணி நேரம் 13 நிமிடங்களை வீணடித்த எதிர்க்கட்சிகள்!. மக்களவை பிப். 9ம் தேதி வரை ஒத்திவைப்பு!.
    Editor web3
    • Website

    Related Posts

    முதலமைச்சர் விஜய் அறிவிப்பு; கமல்ஹாசன் வரவேற்பு

    June 9, 2026

    திமுக, அதிமுக செய்த அரசியல் அராஜகத்துக்கு தவெக முடிவு கட்டியுள்ளது – முன்னாள் அமைச்சர் பொன்னுசாமி

    June 9, 2026

    ட்ரோன் பேட்ரோல், ஹைடெக் வசதிகள் – சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படைக்கு முதலமைச்சர் சிறப்பு ஏற்பாடு

    June 9, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    முதலமைச்சர் விஜய் அறிவிப்பு; கமல்ஹாசன் வரவேற்பு

    திமுக, அதிமுக செய்த அரசியல் அராஜகத்துக்கு தவெக முடிவு கட்டியுள்ளது – முன்னாள் அமைச்சர் பொன்னுசாமி

    ட்ரோன் பேட்ரோல், ஹைடெக் வசதிகள் – சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படைக்கு முதலமைச்சர் சிறப்பு ஏற்பாடு

    சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப்படை – முதலமைச்சர் தொடங்கி வைத்தார்

    21 அதிமுக எம்.எல்.ஏ.க்களுக்கு மட்டும் நிவாரணம் ஏன்?  அப்பாவு கேள்வி

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.